செவ்வாய், 15 ஜனவரி, 2013

பிப்ரவரி 2-ந் தேதியன்று டி.டி.எச்.சில் விஸ்வரூபம் வெளியிடப்படும்

கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் பிப்ரவரி 2-ந் தேதியன்றுதான் டி.டி.எச்.சில். வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்திருக்கும் விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே டி.டி.எச்.சில்.வெளியிடப்படும் என்ற அறிவிப்பு பெரும்புயலைக் கிளப்பியது. அப்போது கடந்த 10-ந் தேதி டி.டி.எச்.சில் முதலில் ஒளிபரப்படும் என்றுன் 11-ந் தேதிதான் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்றும் உறுதிபட அவர் கூறியிருந்தார். ஆனால் கடுமையான எதிர்ப்புகளைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு வரும் 25-ந் தேதியன்று விஸ்வரூபம் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவேன் என்று அறிவித்தார். ஆனால் டி.டி.எச்.சில் எப்போது வெளியிடப்படும் என்ற கேள்விக்கு பதில் இல்லாமல் இருந்தது. இந்நிலையில்தான் நேற்று பிப்ரவரி 2-ந் தேதியன்று டி.டி.எச்.சில் விஸ்வரூபம் வெளியிடப்படும் என்று கமல் அறிவித்தார். தமது முந்தைய உறுதியான நிலையிலிருந்து அப்படியே மாறியிருக்கிறார் கமல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக