வரும் ஜனவரி 7ம் தேதி அன்று தமிழ்திரையுலகம் முழு அடைப்பை கடைபிடிக்க இருக்கிறது. எந்த படப்படிப்பும், எடிட்டிங், டப்பிங் போன்ற வேலைகளும் நடைபெறாது.
மத்திய அரசின் 12.36% சேவை வரிவிதிப்பை எதிர்த்து இந்த ஸ்ட்ரைக் நடைபெற இருக்கிறது. திரையுலகின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் அன்று அடையாள உண்ணாவிரதத்தை கடைபிடிக்க இருக்கின்றனர்.
ஏன்கனவே சென்ற 2012ம் ஆண்டு பிப்ரவரி 23 ல் இதே காரணத்திற்கா திரையுலகம் வேலைநிறுத்தம் செய்து எதிர்ப்பை காட்டியது. ஆனாலும் மத்திய அரசு சேவை வரி உத்தரவை கடந்த ஜூலை மாதம் முதல் அமல் படுத்தியது.
பிறகு இப்போது ஏன் இந்த அடையாள வேலை நிறுத்தம் என கேட்ட போது நடிகர் சங்க தலைவர் சரத்குமார் 'ஏற்கனவை சேவை வரி உத்தரவு கடந்த வருடம் ஜூலையிலிருந்து அமலில் இருந்தாலும் தற்போது இந்த வருடத்திற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரவிருப்பதால் இந்த சமயத்தில் எங்களின் எதிர்ப்பை மீண்டும் ஒரு முறை பதிவு செய்ய விரும்பி இந்த முடிவு' என்றார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக