திங்கள், 14 ஜனவரி, 2013

மூன்றே நாட்களில் 3 லட்சம் பேர் ரசித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா

சந்தானம் பவர் ஸ்டார் கூட்டணியில் உருவாகியிருக்கும் கண்ணா லட்டு தின்ன ஆசையா பட டிரைலர் கடந்த 10ம் திகதி வெளியானது. வெளியான மூன்றே நாட்களில் 3 லட்சம் பேர் டிரைலரை பார்த்து ரசித்துள்ளனர். இப்படம் வெளியானவுடன் பவர் ஸ்டாருக்கு தற்போது இருக்கும் ரசிகர்கள் பன் மடங்காக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதாவது 60 லட்சமாக இருக்கிற ரசிகர்கள் கூட்டம் 6 கோடியாக உயரப்போகிறது. ஏனெனில் பட டிரைலரில் பவர் ஸ்டாரின் குறும்புத்தனம் பட்டயக்கிளப்புகிறது. இது தவிர, படத்தின் மொத்த கதையையும் சந்தானம் ஏற்கனவே பேட்டியில் தெரிவித்துவிட்டார். ஒரு லட்டுக்காக 3 நாயகர்கள் போட்டியிடும் போது ஏற்படும் சம்பவங்களை நகைச்சுவையாக படத்தில் காட்டியுள்ளார்களாம். புதுமுக நாயகன் சேது மற்றும் கதாநாயகியாக விஷாகா சிங் நடித்துள்ளார். கதைப்படி இவர் தான் லட்டாம். 3 நாயகர்களான சந்தானம், சீனிவாசன், சேது இவரை காதலிக்கிறார்கள். இவர்கள் காதலை நாயகி ஏற்க இவர்கள் செய்யும் லூட்டிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்குமாம். ஆனால் நாயகி சிம்புவை காதலிப்பதாக கூற, க்ளைமேக்ஸை மட்டும் படம் வெளிவரும் போது பார்க்க வேண்டும். இதில் விடிவி கணேஷ், கோவை சரளாவும் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளார்களாம். படத்தை கே.எஸ். மணிகண்டன் இயக்க தயாரிப்பாளர் ராமநாராயணனுடன் சந்தானம் இணைந்து தயாரித்திருக்கிறார்[காணொளி, இணைப்பு}

0 கருத்துகள்:

கருத்துரையிடுக