ஞாயிறு, 6 ஜனவரி, 2013

பிறந்தநாளில் ஏழைகளுக்கு உதவினார் ஜீவா

நடிகர் ஜீவா தனது பிறந்தநாளை ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி கொண்டாடினார்.
தியாகராயநகரில் உள்ள தி.நகர் சோசியல் கிளப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 200 ஏழை பெண்களுக்கு இலவச சேலைகள் மற்றும் அரிசியை ஜீவா வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஜீவா பேசும்போது, ஆதரவற்றோருக்கு உதவுவதில்தான் உண்மையான சந்தோஷம் இருக்கிறது.
மருத்துவம் படிக்க வசதி இல்லாத மாணவனுக்கு கல்வி கட்டணத்தை ஏற்றதிலும், காஞ்சீபுரத்தில் இரண்டு ஏழை மாணவிகளை தத்து எடுத்து படிக்க வைப்பதிலும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.
இன்று ஏழை பெண்களுக்கு பொங்கல் பரிசாக சேலை மற்றும் அரிசி வழங்கப்பட்டு உள்ளது.
இந்த சமூக சேவை பணிகளை இன்னும் பெரிதாக செய்வேன் என்றார்.
நிகழ்ச்சியில் இயக்குனர்கள் அகமது, கதிர், பிஸ்வாஸ் சுந்தர், எல்ரெட் குமார், செல்வகுமார், தயாரிப்பாளர் தமிழ்க் குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக