புதன், 2 ஜனவரி, 2013

உயரத்திற்காக ஸ்டூல் போட்ட ரகசியத்தை போஸ்டரில் போட்டு அம்பலப்படுத்திய

வெப்பம், 180 உள்ளிட்ட படங்களில் நடித்த, நடிகை நித்யா மேனன், தற்போது, "ஆல் இன் ஆல் அழகு ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர, தெலுங்கிலும், அம்மணி ரொம்ப பிசி.
தற்போது, "குந்தே ஜாரி கல்லத்தயிந்தே என்ற, தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஹீரோ, நித்யாவை விட, மிகவும் உயரம். இதனால், பாடல் காட்சிகளில், ஹீரோவுடன் நெருக்கமாக நடிக்கும்போது, உயரத்தை சமாளிப்பதற்காக, சிறிய ஸ்டூல் போட்டு, அதில், நித்யாவை நிற்க வைத்து, காட்சிகளை படமாக்கினர்.

பொதுவாக, இதுபோன்ற காட்சிகள் எடுக்கும்போது, அதுபற்றி தகவலை, மிகவும் ரகசியமாக வைத்திருப்பது, படக் குழுவினருக்கு வழக்கம். ஆனால், இந்த படத்தின் போஸ்டர், சமீபத்தில் வெளியிடப்பட்டபோது, அனைவரும், ஆச்சர்யம் அடைந்தனர். அதில், ஹீரோவுடன், நித்யா மேனன் இருக்கும் காட்சிகளில், அவர், ஸ்டூல் மீது, ஏறி நிற்பது போன்ற காட்சிகளை, போஸ்டர்களில் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி விட்டார், இயக்குனர். "ஏன், நித்யா மீது, இந்த கொல வெறி என, இயக்குனரிடம் கேட்டால்,"கொலையும் இல்லை; வெறியும் இல்லை. எல்லாம், ஒரு விளம்பரம் தான் என, சிரிக்கிறார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக