புதன், 9 ஜனவரி, 2013

இரவிலேயே படமாகும் விழித்திரு படத்தில்

தெய்வத்திருமகள் சாராஅவள் பெயர் தமிழரசி டைரக்டர் மீரா கதிரவன் சற்று இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் விழித்திரு. இப்படத்தில் கிருஷ்ணா, விதார்த், டைரக்டர் வெங்கட் பிரபு, தன்ஷிகா, அபிநயா, தம்பி ராமையா உள்ளிட்ட எக்கச்சக்க நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் தெய்வத்திருமகள் புகழ் சாரா நடித்துள்ளார். ஓர் இரவில் நடக்கும் சம்பவமும், அதில் இப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் ஒன்றாக இணைவதும் தான் இப்படத்தின் கதையாம். மேலும் படம் முழுக்க முழுக்க இரவிலேயே படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக