வியாழன், 31 ஜனவரி, 2013
விஸ்வரூபம்: 257 பேர் வழக்கு பதிவு
விஸ்வரூபம் வெளியாகியிருந்தால் கலவரம்?
புதன், 30 ஜனவரி, 2013
விஸ்வருபம் திரையிட்ட தியேட்டர்களின் பேனர்களில்?
புதன், 23 ஜனவரி, 2013
அரசு திடீர் தடை அதிர்ச்சியில் கமல்ஹாசன்
நடிகர் கமலஹாசன் தயாரித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் படத்தை வெளியிட தமிழக அரசு தடை விதித்துள்ளது. படத்திற்கு முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பையடுத்து தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இதனையடுத்து படத்தை 15 நாட்கள் வெளியிட மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம் படம் நாளை மறுநாள் வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது
வெள்ளி, 18 ஜனவரி, 2013
அலெக்ஸ்பாண்டியன். திரைவிமர்சனம்
வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட மருந்தை தமிழ்நாட்டில் விற்க முதலமைச்சரிடம் அனுமதி கேட்கிறார் வில்லன். அதற்கு முதலமைச்சர் மறுக்கவே, அவரை பழி வாங்குவதாக நினைத்து, முதலமைச்சர் மகள் அனுஷ்காவை வில்லன் ஆள் வைத்து கடத்துகிறார்.
கடத்தும் நபராக ஹீரோ அறிமுகமாகிறார். கடத்தும் ஹீரோவிடமே ஹீரோயின் மனதைப் பறிகொடுத்து, உண்மையை அவரிடம் விளக்கி, வில்லன் முகாம்களை பழி வாங்கும் மொக்கை கதையே அலெக்ஸ்பாண்டியன்.
இந்த கதை படத்தில் சுமார் ஒரு மணி நேரமே வருகிறது. மீது இரண்டு மணி நேரங்களுக்கு சந்தானம் காமெடி, தேவையே இல்லாத பிரமாண்ட சண்டைக்காட்சிகள், படத்துக்கு சிறிதும் சம்மந்தமில்லாத மொக்கை பாடல் காட்சிகள் என மீதி இரண்டு மணிநேரத்தை ஓட்டியிருக்கிறார் இயக்குனர் சுராஜ். அனேகமாக கார்த்திக் படங்களில் இதுதான் மோசமான படமாக இருக்கும்.
கார்த்திக் இப்போதே ரஜினி ரேஞ்சுக்கு பஞ்ச் டயலாக் பேசுவது, படத்தில் கொஞ்சம்கூட எடுபடவில்லை. இப்படியே இன்னும் இரண்டு படங்கள் இவருக்கு வந்தால் கட்டாயம் இவர் ஃபீல்ட் அவுட்தான். சந்தேகமேயில்லை.
பாடலக்ளுக்கு கவர்ச்சியாக வந்து செல்லமட்டுமே ஹீரோயின்கள் என்ற தமிழ் சினிமா மசாலா ஃபார்முலாவுக்கு ஏற்றபடி வந்து போகும் அனுஷ்கா, கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார். மற்றபடி நடிப்பு எதுவும் சொல்லுக்கொள்ளும்படி இல்லை. மீதி இரண்டு ஹீரோயின்களும் கிளுகிளுப்புக்கு மட்டுமே உதவுகிறார்கள். பாடல்கள் படமாக்கியவிதம் ரொம்ப சுமார். பிரமாண்ட சண்டைக்காட்சிகள் மட்டும் ஆறுதல
ஏகப்பட்ட பஞ்ச் டயலாக்குகள், பின்பாதியில் வரும் மனோபாலா காமெடி என படத்துக்கு சம்பந்தமில்லா காட்சிகளை ஏராளமாக வைத்திருக்கிறார் இயக்குனர் சுராஜ். படத்தில் வரும் பல காட்சிகள் குணா,காதலன்,செந்தூரப்பூவே, மற்றும் ஹாலிவுட் படங்கள் சிலவற்றை ஞாபகப்படுத்துகிறது.
அநேகமாக இன்னும் இரண்டு மாதங்களில் "இந்திய தொலைகாட்சி வரலாற்றில் முதன்முதலாக" என சன் டிவியில் வரும். அப்போது பார்த்துக் கொள்ளலாம். தேவையில்லாமல் யாரும் தியேட்டருக்கு போய் படம் பார்த்து பொங்கல் திருநாளை வேஸ்ட் செய்ய வேண்டாம்
முருங்கைக்காய் ரீமேக் படத்துக்கு ஹீரோவை தேடும்
ஒல்லிபிச்சான் நடிகரோட அப்பா திரும்ப படம் இயக்க விரும்புறாராம். இதுக்காக செஞ்ச முயற்சி எல்லாமே தோல்வியில முடிஞ்சுபோச்சாம்... முடிஞ்சுபோச்சாம்... ரெண்டு மகன்களும் பட தயாரிப்புல இறங்கிட்டாங்க. இதனால அவங்க தயாரிப்புலேயே படம் இயக்கலாம்னு ஐடியா வச்சிருந்தாராம். Ôவயசான காலத்துல படம் எடுக்கிறேன்னு ரிஸ்க்கெல்லாம் எடுக்க வேணாம்Õனு வாரிசுங்க பளார்னு சொல்லிட்டாங்களாம்... சொல்லிட்டாங்களாம்...
மறக்கமுடியாத முருங்ககாய் படத்த தந்த பாக்ய இயக்கம் மறுபடியும் அந்த படத்த தூசி தட்டி இருக்காராம்... இருக்காராம்... ஆனா படம் இயக்குற பொறுப்ப வேற ஆளுகிட்ட கொடுத்தருக்காராம். ஹீரோ வேஷத்துக்கு ஒருத்தரை வலைபோட்டு தேடி இருக்காங்களாம். லட்டு படத்தை தன்கிட்ட பர்மிஷன் வாங்காம காப்பி அடிச்சதாலதான் இந்த அதிரடி நடவடிக்கையாம்... நடவடிக்கையாம்...
‘அனிமல் படத்த இயக்குன காட் இயக்குனர் அந்த படத்தோட செகன்ட் பார்ட் இயக்குறதாவும் ஆதி ஹீரோ நடிக்கறதாவும் சேதி பரவுச்சாம்... பரவுச்சாம்... ஆனா இதை ஹீரோ மறுத்துட்டாராம். Ôஅப்படியொரு படம் எடுக்கப்போறதா எங்கிட்ட யாருமே சொல்லலே. அப்படி இருக்கறப்போ நான் எப்படி நடிப்பேன்? இப்ப டோலிவுட்ல பிஸியா இருக்க¤றதால, கால்ஷீட் ஒத்துவந்தாதான் தர முடியும்Õனு சொல்றாராம். ஏற்கனவே காட் இயக்கம்மேல இருந்த கோபத்தாலதான் நடிகர் இப்படி காட்டமா பேசறாருன்னு
த்ரில் படத்தில் காமெடி. விஜய்சேதுபதி நடிக்கும் சூது கவ்வும்
பிட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட ஹீரோ விஜய் சேதுபதி அடுத்து ‘சூது கவ்வும்’ படத்தில் நடிக்கிறார். நலன் குமாரசாமி இயக்குகிறார். இப்படம்பற்றி இயக்குனர் கூறும்போது, ‘பிட்சா, அட்டகத்தி போன்ற படங்களை தயாரித்த நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
மாறுபட்ட திரைக்கதை. பிளாஷ்பேக்கில் கதை சொல்வது நீண்ட காலமாக இருந்து வரும் பாணி. அந்தபாணியை மாற்றி இன்டர் கட் ஷாட் முறையில் கதை சொல்லப்படுகிறது. அதாவது ஒரு சம்பவம் நடந்தால் அது எப்படி நடந்தது என்பது உடனுக்குடன் விளக்கப்பட்டுவிடும்.
‘பிட்சா’விஜய் சேதுபதி ஹீரோ. சஞ்சிதா ஷெட்டி ஹீரோயின். சந்தோஷ் நாராயணன் இசை. தினேஷ் ஒளிப்பதிவு. தயாரிப்பு சி.வி.குமார் இதுபற்றி விஜய சேதுபதி கூறும்போது,‘எனக்கு மாறுபட்ட கதைக்களத்துடன் படங்கள் அமைந்தது. இதை நானாக தேடிச் செல்லவில்லை, என்னை தேடி வந்தவை.
அப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. ‘சூது கவ்வும்’ படமும் வித்தியாசமான கதை. அதாவது கிரைம் கதையில் காமெடி கலக்கப்பட்டிருக்கிறது. இது புதுஅனுபவமாக இருக்கும். இதை பிளாக் காமெடி என்பார்கள். இதன் கதாபாத்திரம் பற்றி இப்போது சொன்னால் சுவாரஸ்யம் குறைந்துவிடும். சென்னையில் இதன் ஷூட்டிங் நடக்கிறது’ என்றார்
ஃபேஸ்புக்கில் சச்சின் செல்வாக்கை மிஞ்சிய ஏ.ஆர்.ரஹ்மான்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஃபேஸ்புக்கில் 1 கோடி ஃபேன்கள் உள்ளனர். ஆஸ்கர் மன்னன் ஏ.ஆர். ரஹ்மான் உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஆவார். ஃபேஸ்புக்கில் அவருக்கு உள்ள ஃபேன்களின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது. அவரது ஃபேஸ்புக் பக்கத்திற்கு 10,155,426 பேர் லைக் கொடுத்துள்ளநர். 82,829 பேர் அதில் கமெண்ட் எழுதியுள்ளனர்.
இதையடுத்து ரஹ்மான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், 10,000,000 மற்றும் நன்றி என்று தெரிவித்துள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், சல்மான் கான் ஆகியோரை விட ஃபேஸ்புக்கில் ரஹ்மானுக்கு தான் அதிக ஃபேன்கள்.
ரஹ்மானை அடுத்து சச்சினுக்கு 9,109,898 ஃபேன்களும், சல்மானுக்கு 7,534,958 ஃபேன்களும், ஆமீர் கானுக்கு 6,367,036 ஃபேன்களும், அமிதாபுக்கு 3,600,477 ஃபேன்களும், பிரியங்கா சோப்ராவுக்கு 3,552,699 ஃபேன்களும் உள்ளனர். இவர்களை அடுத்து ரித்திக் ரோஷன், ஷாருக்கான், அக்ஷய் குமார், லதா மங்கேஷ்கர் ஆகியோருக்கு அதிக ஃபேன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
நான் தண்ணியடித்தால் படம் ஹிட். த்ரிஷா
வெள்ளி, ஜனவரி 18, 2013
No comments
தண்ணி அடிப்பதுபோல் நடித்தால் படம் ஹிட்’ என்றார் த்ரிஷா. விஷால் த்ரிஷா ஜோடியாக நடித்துள்ள படம் ‘சமர்’. திரு இயக்கி உள்ளார். இப்படத்தில் த்ரிஷா ஓட்டல் ஒன்றில் அமர்ந்து மது குடிப்பதுபோல் நடித்துள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது:
கனமான ஒரு கதாபாத்திரத்தை ஹீரோயினை நம்பி கொடுப்பதற்கு அந்த நடிகை பலவருடங்கள் சினிமாவில் காத்திருக்க வேண்டி உள்ளது. அந்த காத்திருப்புதான் ‘சமர்’ படத்தில் எனக்கு கிடைத்த வேடம். இதில் மது குடிப்பதுபோல் நான் நடித்த காட்சி பற்றி கேட்கிறார்கள்?.
நான் தண்ணி அடிப்பதுபோன்ற காட்சியில் நடித்தால் அந்த படம் ஹிட்டாகிவிடும் என்ற சென்டிமென்ட் இருப்பதாக இயக்குனர் திருவிடம் கூறினேன். அதைக்கேட்டபிறகு தான் அதுபோன்ற காட்சியை எனக்கு வைத்தார்.
‘உண்மையில் தண்ணி அடித்தீர்களா?’ என்கிறார்கள். பெப்சியைத்தான் ஊற்றித் குடித்தேன். பொதுவாக பெண்கள் மது குடிப்பது சரியா? தவறா? என்கிறார்கள். அது அவரவர்கள் விருப்பத்தை பொருத்தது. அடுத்தடுத்த படங்களில் தண்ணியடிப்பது போல் நடிப்பீர்களா என்கிறார்கள். அது கதையையும், இயக்குனரையும் பொருத்தது’ என்றார்
செவ்வாய், 15 ஜனவரி, 2013
பிப்ரவரி 2-ந் தேதியன்று டி.டி.எச்.சில் விஸ்வரூபம் வெளியிடப்படும்
கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் பிப்ரவரி 2-ந் தேதியன்றுதான் டி.டி.எச்.சில். வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்திருக்கும் விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே டி.டி.எச்.சில்.வெளியிடப்படும் என்ற அறிவிப்பு பெரும்புயலைக் கிளப்பியது.
அப்போது கடந்த 10-ந் தேதி டி.டி.எச்.சில் முதலில் ஒளிபரப்படும் என்றுன் 11-ந் தேதிதான் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்றும் உறுதிபட அவர் கூறியிருந்தார். ஆனால் கடுமையான எதிர்ப்புகளைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு வரும் 25-ந் தேதியன்று விஸ்வரூபம் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவேன் என்று அறிவித்தார்.
ஆனால் டி.டி.எச்.சில் எப்போது வெளியிடப்படும் என்ற கேள்விக்கு பதில் இல்லாமல் இருந்தது. இந்நிலையில்தான் நேற்று பிப்ரவரி 2-ந் தேதியன்று டி.டி.எச்.சில் விஸ்வரூபம் வெளியிடப்படும் என்று கமல் அறிவித்தார். தமது முந்தைய உறுதியான நிலையிலிருந்து அப்படியே மாறியிருக்கிறார் கமல்
அமீரின் குத்தாட்டத்தைப் பார்த்து ஆடிப்போன ஜெயம்ரவி.
பாலாவின் பரதேசியும், அமீரின் ஆதிபகவனும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் நண்பர்கள் என ஒருவருக்கொருவர் பேட்டி கொடுத்து கொண்டாலும், உள்ளுக்கும் இருக்கும் போட்டி மனப்பான்மையின் வெளிப்பாடே இது என எல்லோருக்கும் தெரியும்.
இதனிடையே பாலாவை விட அமீர் ஒரு விஷயத்தில் ஒன் ஸ்டெப் உயரத்தில்தான்! படத்தில் தன் தலையை காண்பிக்க விரும்பவே மாட்டார் பாலா. ஆனால் அமீர், இப்போது வரப்போகும் ஆதிபகவன் படத்தில் கூட ஒரு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டிருக்கிறாராம். உடன் ஆடியிருப்பவர் நீது சந்திரா. இந்த ஆட்டம் தனக்குதான் என்று கனவு கண்டு கொண்டிருந்த ஜெயம் ரவிதான் இதற்கு பின் ரொம்பவே ஆடிப் போயிருக்கிறார்
திங்கள், 14 ஜனவரி, 2013
மூன்றே நாட்களில் 3 லட்சம் பேர் ரசித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா
சந்தானம் பவர் ஸ்டார் கூட்டணியில் உருவாகியிருக்கும் கண்ணா லட்டு தின்ன ஆசையா பட டிரைலர் கடந்த 10ம் திகதி வெளியானது.
வெளியான மூன்றே நாட்களில் 3 லட்சம் பேர் டிரைலரை பார்த்து ரசித்துள்ளனர்.
இப்படம் வெளியானவுடன் பவர் ஸ்டாருக்கு தற்போது இருக்கும் ரசிகர்கள் பன் மடங்காக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதாவது 60 லட்சமாக இருக்கிற ரசிகர்கள் கூட்டம் 6 கோடியாக உயரப்போகிறது. ஏனெனில் பட டிரைலரில் பவர் ஸ்டாரின் குறும்புத்தனம் பட்டயக்கிளப்புகிறது. இது தவிர, படத்தின் மொத்த கதையையும் சந்தானம் ஏற்கனவே பேட்டியில் தெரிவித்துவிட்டார். ஒரு லட்டுக்காக 3 நாயகர்கள் போட்டியிடும் போது ஏற்படும் சம்பவங்களை நகைச்சுவையாக படத்தில் காட்டியுள்ளார்களாம். புதுமுக நாயகன் சேது மற்றும் கதாநாயகியாக விஷாகா சிங் நடித்துள்ளார். கதைப்படி இவர் தான் லட்டாம். 3 நாயகர்களான சந்தானம், சீனிவாசன், சேது இவரை காதலிக்கிறார்கள். இவர்கள் காதலை நாயகி ஏற்க இவர்கள் செய்யும் லூட்டிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்குமாம். ஆனால் நாயகி சிம்புவை காதலிப்பதாக கூற, க்ளைமேக்ஸை மட்டும் படம் வெளிவரும் போது பார்க்க வேண்டும். இதில் விடிவி கணேஷ், கோவை சரளாவும் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளார்களாம். படத்தை கே.எஸ். மணிகண்டன் இயக்க தயாரிப்பாளர் ராமநாராயணனுடன் சந்தானம் இணைந்து தயாரித்திருக்கிறார்[காணொளி, இணைப்பு}
அதாவது 60 லட்சமாக இருக்கிற ரசிகர்கள் கூட்டம் 6 கோடியாக உயரப்போகிறது. ஏனெனில் பட டிரைலரில் பவர் ஸ்டாரின் குறும்புத்தனம் பட்டயக்கிளப்புகிறது. இது தவிர, படத்தின் மொத்த கதையையும் சந்தானம் ஏற்கனவே பேட்டியில் தெரிவித்துவிட்டார். ஒரு லட்டுக்காக 3 நாயகர்கள் போட்டியிடும் போது ஏற்படும் சம்பவங்களை நகைச்சுவையாக படத்தில் காட்டியுள்ளார்களாம். புதுமுக நாயகன் சேது மற்றும் கதாநாயகியாக விஷாகா சிங் நடித்துள்ளார். கதைப்படி இவர் தான் லட்டாம். 3 நாயகர்களான சந்தானம், சீனிவாசன், சேது இவரை காதலிக்கிறார்கள். இவர்கள் காதலை நாயகி ஏற்க இவர்கள் செய்யும் லூட்டிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்குமாம். ஆனால் நாயகி சிம்புவை காதலிப்பதாக கூற, க்ளைமேக்ஸை மட்டும் படம் வெளிவரும் போது பார்க்க வேண்டும். இதில் விடிவி கணேஷ், கோவை சரளாவும் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளார்களாம். படத்தை கே.எஸ். மணிகண்டன் இயக்க தயாரிப்பாளர் ராமநாராயணனுடன் சந்தானம் இணைந்து தயாரித்திருக்கிறார்[காணொளி, இணைப்பு}
விஜய், சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை நான்: துளசி நாயர்
பழைய நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நாயர், கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார்,மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் துளசி நாயர் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில்தான் முடிவடைந்தது.
இது குறித்து துளசி நாயர் கூறுகையில்: நான் விஜய், சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை.
கடல் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு தயாராகுவதற்காக அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தை பத்து தடவை பார்த்தேன்.
அந்தப் படத்தில் கார்த்திக் மற்றும் அம்மாவின்(ராதா) கெமிஸ்ட்ரியை கண்டு இன்றும் வியப்படைகிறேன் என்றார்
வழக்கு எண் நாயகி மனிஷாவின் குரல் சரியில்லையாம்
வழக்கு எண் படத்தின் நாயகி மனிஷாவின் குரல் சரியில்லை என்பதால் அவரால் டப்பிங் பேச முடியவில்லை.
பொதுவாக தமிழ் சினிமாவிற்கு வரும் நடிகைகளுக்கு தமிழ் தெரியாது. இதனால் அவர்களுக்கு டப்பிங் மாஸ்டர்களே குரல் கொடுப்பார்கள்.
ஆனால் வழக்கு எண் படத்தில் நடித்த நாயகி மனிஷா, கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால் ஓரளவுக்கு தமிழ் தெரியுமாம். இதன் காரணமாக சுசீந்திரன் இயக்கும் ஆதலால் காதல் செய்வீர் படத்தில் நடித்து வரும் மனிஷா, தானே டப்பிங் பேச முன்வந்தார். இரண்டு நாட்கள் டப்பிங் ஸ்டியோவிற்கு சென்று டப்பிங் பேச, அவரது குரல் சவுண்ட் இன்ஜினியருக்கு பிடிக்க வில்லையாம். இதனால் மனிஷா இனி டப்பிங் பேச முடியாத சூழ்நிலை உருவாக அவர் மிகுந்த மனவேதனைக்குள்ளாகியுள்ளார். சினிமாவில் ஜெயிக்க சவுண்ட் இன்ஜினியரின் ஆதரவும் தேவை என்பதை உணர்வதாக அவர் தெரிவித்திருக்கிறார்
ஆனால் வழக்கு எண் படத்தில் நடித்த நாயகி மனிஷா, கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால் ஓரளவுக்கு தமிழ் தெரியுமாம். இதன் காரணமாக சுசீந்திரன் இயக்கும் ஆதலால் காதல் செய்வீர் படத்தில் நடித்து வரும் மனிஷா, தானே டப்பிங் பேச முன்வந்தார். இரண்டு நாட்கள் டப்பிங் ஸ்டியோவிற்கு சென்று டப்பிங் பேச, அவரது குரல் சவுண்ட் இன்ஜினியருக்கு பிடிக்க வில்லையாம். இதனால் மனிஷா இனி டப்பிங் பேச முடியாத சூழ்நிலை உருவாக அவர் மிகுந்த மனவேதனைக்குள்ளாகியுள்ளார். சினிமாவில் ஜெயிக்க சவுண்ட் இன்ஜினியரின் ஆதரவும் தேவை என்பதை உணர்வதாக அவர் தெரிவித்திருக்கிறார்
முதன்முறையாக அமீர்கானுடன் இணையும் சஞ்சய்தத்
ஒன்றுக்கும் மேற்பட்ட முன்னணி நாயகர்கள் இணைந்து நடிப்பது பாலிவுட்டில் சகஜம்.அதன் காரணமாக எல்லா நடிகர்களும், மற்ற எல்லா நடிகர்களுடனும் இணைந்து ஒரு படத்திலாவது நடித்திருப்பார்கள்.ஆச்சரியமான விடயம் அமீர்கான், சஞ்சய் தத் இதுவரை இணைந்து நடித்ததில்லை.
ராஜ்குமார் ஹிரானி அமீர்கான் நடிக்கும் பி.கே. என்ற படத்தை இயக்குகிறார். இதில் முக்கியமான வேடத்தில் நடிக்க அர்ஷத் வர்ஸி ஒப்பந்தமானார்.
ஆனால் அவரால் ஹிரானி கேட்ட திகதிகளில் கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. இஸ்கியா படத்தின் இரண்டாம் பாகத்துக்கு ஏற்கனவே வர்ஸி கால்ஷீட் தந்திருந்தார்.
வேறு வழியின்றி அர்ஷத் வர்ஸிக்கு பதில் சஞ்சய் தத்தை பி.கே. படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார் ஹிரானி.
இந்த மாற்றத்துக்குப் பின்பே அனைவருக்கும் அமீர்கானுடன் இதுவரை சஞ்சய் தத் இணைந்து நடித்ததில்லை என்ற விவரம் ஞாபகம் வந்திருக்கிறது.
இந்தப் படத்தில் நடிகை அனுஷ்கா சர்மா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்
நீண்ட இடைவெளிக்கு காரணம் என்ன?
கொலிவுட்டில் ‘காதலில் விழுந்தேன்’, ‘மாசிலாமணி’, ‘கந்தகோட்டை’ படங்களில் நடித்தவர் நகுல்.
அதன் பின்பு படங்கள் இல்லாமல் இருந்த இவர் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘மாசிலாமணி’க்கு பின்பு ‘நான் ராஜாவாக போகிறேன்’, ‘வல்லினம்’ படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டேன்.
இரண்டுமே முக்கியமான படங்கள். ‘வல்லினம்’ படத்தில் கூடைப்பந்து விளையாட்டு வீரனாக நடிக்கிறேன். ‘நான் ராஜாவாக போகிறேன்’ படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கிறேன். ஒன்று கிக் பாக்சர்.
இரண்டு படத்துக்குமே என்னை தயார் படுத்த வேண்டியது இருந்தது. இரண்டு விளையாட்டையும் முறைப்படி கற்றுக் கொள்ள அவகாசம் எடுத்துக் கொண்டேன்.
இந்த இடைவெளியை பெரிதாக எடுத்துக் கொண்டார்கள். தற்போது இரண்டு படங்களுமே வெளிவரும் நிலையில் இருக்கிறது.
அடுத்ததாக நான் நடிக்கும் அமளி துமளி ரொமான்டிக் கொமெடிப் படம் என்றும் ஒவ்வொரு படத்தையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன் எனவும் கூறியுள்ளார்
நடிகைகளின் வழக்கமான டிரண்டை மாற்றிய அனுஷ்கா
அனுஷ்கா,ஸ்ரேயா,த்ரிஷா,கமர்ஷியல் படங்களை குறைத்துக்கொண்டு ஹீரோயின் முக்கியத்துவ கதைகளை தேர்வு செய்கின்றனர் ஸ்ரேயா, அனுஷ்கா, த்ரிஷா.
தென்னிந்திய நடிகைகள் கமர்ஷியல் படங்களையே தேர்வு செய்து நடிப்பது வழக்கம். அந்த டிரெண்ட் இப்போது மாறி வருகிறது. அனுஷ்கா, த்ரிஷா, ஸ்ரேயா போன்றவர்கள் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளை தேர்வு செய்யத் தொடங்கி உள்ளனர். ‘அருந்ததி‘ படத்தில் நடித்த அனுஷ்கா அதைத் தொடர்ந்து கமர்ஷியல் படங்களை தேர்வு செய்து வந்தார். அப்படங்கள் முடிந்ததையடுத்து ஹீரோயின் மைய கதையான ‘ராணி ருத்ரம்மா தேவிÕயில் நடிக்கிறார். இதற்காக இந்த ஆண்டு 150 நாட்களுக்கு மேல் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு இருமொழியில் உருவாகும் இப்படத்தை குணசேகர் இயக்குகிறார்.
‘பயர்‘, ‘வாட்டர்‘ படங்களை இயக்கிய தீபா மேத்தா ‘மிட்நைட் சில்ரன்‘ என்ற படத்தை இயக்கினார். ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள இப்படத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா. இதுதவிர கன்னடம், தமிழில் உருவாகும் ‘சந்திரா‘ மற்றும் தெலுங்கில் உருவாகும் ‘பவித்ரா‘ படங்களில் நடிக்கிறார். ஹீரோயினை மையமாக வைத்து எம்.எஸ்.ராஜு தயாரிக்கும் புதிய தெலுங்கு படத்தில் த்ரிஷா நடிக்கிறார்.
அடுத்து திவ்யாவும் கன்னடத்தில் ஹீரோயினை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார்.இதுகுறித்து ஸ்ரேயா கூறும்போது, ‘சினிமா தயாரிப்பு இதுவரை தப்பிக்கும் கதை அம்சமுள்ள களங்களில் உருவாக்கப்பட்டு வந்தது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட சிறுபட்ஜெட் படங்கள் வெற்றி பெற்றதைதொடர்ந்து அதுபோன்ற படங்களில் கவனம் திரும்பி இருக்கிறது. இதன் வெற்றியால் இதுபோன்ற படங்களை வரவேற்கும் டிரெண்டுட் உருவாகி இருக்கிறதுÕ என்றார்
பாக்யராஜ் மீது கேஸ் போடுவேன் என மிரட்டிய புஷ்பா
மறுநாளே சமாதானத்துக்கு வந்த மர்மம் என்னகண்ணா லட்டு திங்க ஆசையா படத்தின் கதை தன்னுடைய இன்றுபோய் நாளை வா திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி. இதனால் தனக்கு பெருத்த நஷ்டம், மன உளைச்சல் என்று காவல் துறையில் மோசடி புகார் கொடுத்துவிட்டார் திரைக்கதை திலகம் கே.பாக்யராஜ். இதையடுத்து படம் திட்டமிட்டபடி பொங்கலுக்கு வருமா, அல்லது இன்னும் சில வாரங்கள் தள்ளுமா என்று பலரும் விவாதித்தாலும், பிரச்சனைக்குரியவர்கள் பெரிய மனிதர்கள் என்பதால் சட்டென ஒரு முடிவுக்கு வரக்கூடிய சாத்தியங்கள்தான் அதிகம் என்ற நம்பிக்கையும் இருந்தது.
அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. பாக்யராஜ் மீது கேஸ் போடுவேன். அவர் நாவை அடக்கிக் கொள்வது நல்லது என்றெல்லாம் பேட்டியளித்த புஷ்பா கந்தசாமி மறுநாளே பாக்யராஜின் வீடு தேடிப் போய்விட்டார். முதலில் ஆத்திரப்பட்டாலும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டாராம் பாக்யராஜ்.
சில பல வட்டமேஜை விவாதங்களுக்கு பின், ஐம்பது லட்சம் பாக்யராஜுக்கும், நடுவில் நுழைந்து பரபரப்பு செய்த உதவி இயக்குனர் நவீனுக்கு ஒரு லட்சமும் கைமாறியதாக தகவல்
ராசியில்லாத நடிகை என ஒதுக்கிய தயாரிப்பாளர்களை பழிவாங்கும்
கேட்டு வரும் தயாரிப்புகளை காஜல் ஹீரோயின் போட்டுத் தாக்குறாராம்… தாக்குறாராம்… இந்த தாக்குதல் ‘மணி மேட்டருங்கிறதால யாரும் புகார் தர முடியலாயம்.
அபவுட்டர்ன் ஸ்டெப் போடுறாங்களாம்… போடுறாங்களாம்… சம்பளம் ரொம்ப உசத்திட்டீங்களேன்னு யாராவது நடிகைகிட்ட கேட்டா, ஒரு காலத்துல என்னை ராசி இல்லாதவன்னு சென்டிமென்ட் பாத்து வேணாம்னு ஒதுக்கனவங்ககிட்டதான் கேக்கறேன். இது தப்பில்லேன்னு வேலுநாயக்கர் பாணியில பஞ்ச் அடிக்கிறாராம்… அடிக்கிறாராம்…
கஜினி படம் தயாரிச்சவரு ரொம்ப நாளைக்கப்புறம் மறுபடியும் தயாரிப்புல குதிச்சிருக்காராம்… இருக்காராம்… வருஷ கணக்குல பெண்டிங்ல இருந்த லவ் பட ஹீரோ நடிக்கற படத்துக்கான ஷூட்டிங்கை ஒருவழியா முடிச்சிட்டாராம். வழக்கமா ஒயிட் அண்ட் ஒயிட்ல வர்ற தயாரிப்பு சென்டிமென்ட் காரணமா அந்த ஸ்டைலுக்கு முழுக்கு போட்டுட்டாராம். ராசி, ஜோசியம்பாத்து அதுக்கேத்த மாதிரி கலர் கலரா டிரஸ்போட ஆரம்பிச்சிட்டாராம்… ஆரம்பிச்சிட்டாராம்…
சேவை வரிக்கு எதிரா கோலிவுட்காரங்க உண்ணாவிரத போராட்டம் நடத்தினாங்க. இதுல பிரகாச வில்லனும் கலந்துகிட்டாரு. தன்னோட ஆத்ம நண்பரான தாடிக்கார டான்ஸ் மாஸ்டரையும் போராட்டத்துல கலந்துக்க வற்புறுத்தினாராம்… இப்போ நான் பாலிவுட் டைரக்டர். சென்னை பக்கம் திரும்ப கூப்பிடாதீங்கன்னு டான்சரு தெனாவட்டா சொல்லிட்டாராம்
சனி, 12 ஜனவரி, 2013
நடன இயக்குனரை நோகடித்த சிவா
நடன இயக்குனர் சொல்லிக்கொடுத்தபடி நடனம் ஆடாமல் தன் இஷ்டத்துக்கு நடனம் ஆடி அவரை நோகடித்தார் சிவா. ‘தமிழ்படம் இயக்கிய அமுதனிடம் அசோசியேட் இயக்குனராக பணியாற்றியவர் கிருஷ்ணன் ஜெயராஜ். இவர் இயக்கும் படம் ‘சொன்னா புரியாது‘. சிவா ஹீரோ. வசுந்தரா ஹீரோயின்.
இதுபற்றி சிவா கூறியதாவது: கல்யாணத்துக்கு பிறகு ஒரு ஆணின் வாழ்க்கை எப்படி மாறிவிடுகிறது என்பதை மையமாக வைத்து இப்படத்தில் ஒரு பாடல் வருகிறது. இந்த பாடல் ஷூட்டிங்கின்போது தான் எனது திருமணம் நடந்தது. இதில் என்னை எப்படியாவது நடனம் ஆட வைத்துவிட வேண்டும் என்று நடன இயக்குனர் முடிவு செய்தார். ஒவ்வொரு பாடலின் போதும் அவர் ஒன்றுக்கு பல முறை எனக்கு கடுமையாக பயிற்சி அளிப்பார்.
ஆனால் காட்சியின்போது என் இஷ்டத்துக்குத்தான் ஆடினேன். இதற்குமேல் என்னை ஆட வைக்க முடியாது என்று நொந்துபோனவர், ‘அவர் ஆடுவதே சரியாகத்தான் இருக்கிறது. அந்த மூவ்மென்ட்ஸே ஓகே என்று கூறிவிடுவார். ஹீரோயின் வசுந்தரா பாங்கான நடிப்பை வெளியிட்டிருக்கிறார்.
இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் ‘தமிழ் படம் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர். எனக்கு என்ன கதை பொருந்தும் என்பது அவருக்கு தெரியும். அவர் எப்படி இயக்குவார் என்பதும் எனக்கு தெரியும். அந்த கருத்தொற்றுமையால் இந்த படம் நன்றாக வந்திருக்கிறது. யதிஷ் மகாதேவ் இசை. ஆர்.சரவணன் ஒளிப்பதிவு. ஹபீப், சேண்டிகா அமர்நாத் தயாரிப்பு. இவ்வாறு சிவா கூறினார்
விவரம் தெரியாமல் சிக்கிய ஸ்வேதாபாசுவுக்கு
ஆறுதல் கூறிய சந்தமாமா யூனிட் நபர்கள்.கோலிவுட்டைப்பொறுத்தவரை காமெடியன்களுடன் ஜோடி சேர்ந்த நடிகைகளுடன் தாங்கள் எக்காரணம் கொண்டும் டூயட் பாடுவதில்லை என்கிற ஒரு உயரியை கொள்கையை முன்வரிசை ஹீரோக்கள் நீண்டகாலமாக சீரியசாக கடைபிடித்து வருகின்றனர். அதில் கருணாசும் தப்பவில்லை. அவருடன் ஜோடி சேரும் நடிகைகளெல்லாம் அதன்பிறகு படமே கிடைக்காமல் சொந்த ஊருக்கு பெட்டி படுக்கையுடன் திரும்பிக்கொண்டிருக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
ஆனால் இந்த விவகாரம் தெரியாமல் அவர் நடித்துள்ள சந்தமாமா படத்தில் சிக்கியிருப்பவர் ஸ்வேதாபாசு. கருணாஸ் நடித்த சில படங்கள் வெற்றி பெற்றதை கருத்தில் கொண்டு அப்படத்தில் கமிட்டாகியிருக்கிறார். ஆனால் படம் வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் இந்த கோடம்பாக்கத்தில் நிலவி வரும் இந்த செண்டிமென்ட் விவகாரத்தைப்பற்றி சிலர் சொல்ல அதிர்ச்சியடைந்து விட்டாராம் ஸ்வேதாபாசு.
கண்களை மறைத்து லகானில் குதிரையைக்கட்டுவது போல் என்னை அக்கம் பக்கம் விசாரிக்க விடாமலேயே அந்த படத்தில் சிக்க வைத்து விட்டார்கள் என்று இப்போது புலம்பித்தள்ளி வருகிறார் நடிகை. ஆனால் மேற்படி யூனிட்டோ, அவருடன் நடித்த மற்ற நடிகைகளெல்லாம் சொதப்பல் பார்ட்டிகள். ஆனால் நீ பேரழகி அதனால் உன்னை கோலிவுட் ஹீரோக்கள் மிஸ் பண்ண மாட்டார்கள். கட்டாயம் அரவணைத்துக்கொள்வார்கள் என்று ஆறுதல சொல்லி வருகிறார்களாம்
அலெக்ஸ்பாண்டியன் ரிலீஸ் ஆன தினத்தில் கார்த்திக் மனைவி ரஞ்சனி
பெற்றெடுத்த பெண் குழந்தை அப்பாவானார் நடிகர் கார்த்தி. அவரது மனைவி ரஞ்சனிக்கு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கும், கோவையை சேர்ந்த ரஞ்சனி என்பவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் 3ம் தேதி திருமணம் நடந்தது.
திருமணத்தை தொடர்ந்து கர்ப்பமான ரஞ்சனிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட ரஞ்சனிக்கு நேற்று அழகான பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின்னர் தாயும், குழந்தையும் நலமாக உள்ளார்கள்.
கார்த்திக்கு நேற்று இரட்டிப்பு மகிழ்ச்சி, ஒன்று தனக்கு பெண் குழந்தை பிறந்தது. மற்றொரு சந்தோஷம் அவரது அலெக்ஸ் பாண்டியன் படம் உலகம் முழுக்க நேற்று ரிலீசாகியுள்ளது
நிஜவாழ்க்கையில் எந்த ஒரு ஆண்களையும்
நெருங்கவிடப்போவதில்லை. நயன்தாரா சபதம்ஆன்மீகத்தில் முத்திப்போய் விட்டார் நயன்தாரா. முன்பெல்லாம் ஸ்பாட்டுக்கு வரும்போதே கலக்கலான உடையணிந்து பளிச்சிடுவார். ஆனால் இப்போதோ வயதான நடிகைகள் போன்று ஆடம்பரமில்லாத உடையணிந்தே வருகிறார். அதோடு எடுபிடி வேலைகள் செய்வதற்கு பலரை தன்னை சுற்றி வைத்துக்கொள்வதில்லை. பரமசாது நடிகைகள் போன்று பவ்யமாக காட்சி தருகிறார். யாராவது அருகில் சென்று பேசினால்கூட அதற்கு தடாலடியாக பதில் சொல்லாமல் சாந்தமாகவே பதிலளிக்கிறார்.
அதுமட்டுமின்றி, நான்வெஜ் உணவுகளில் புகுந்து விளையாடும் நயன்தாரா இப்போது கவிச்சி அயிட்டங்களே எனக்கு வேண்டாம் என்று தயிர்சாத நடிகையாகி விட்டார். இதனால் ஸ்பாட்டுக்கு வந்து விட்டால் நொறுக்குத்தீனிகளை நொங்கெடுக்கும் நயன்தாராவா இப்படி மாறி விட்டார் என்று அவரை நன்கறிந்த நபர்களே ஆச்சரியத்தில் நிற்கின்றனர்.
ஆனால் இவற்றையெல்லாம் விட நயன்தாராவிடம் குடியேறியிருக்கும் இன்னொரு மாற்றம்தான் இன்னும் பெரிய ஆச்சரியத்தை வரவைக்கிறது. அதாவது, இனிமேல் நான் எந்த ஆண்களையும் என்னை நெருங்க விடப்போவதில்லை. சினிமாவில் நெருங்குகிறேன் என்றால் அது என் தொழில்.
ஆனால் நிஜவாழ்க்கையில் யாருக்குமே இடம் கொடுக்கப்போவதில்லை என்று சொல்லும் நயன்தாரா, சினிமா பயணம் முற்று பெறும்போது முழுநேர ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளப்போகிறாராம். அதனால் நிறைய ஆன்மீக புத்தகங்களை கரைத்து குடித்து வருபவர், தன்னருகே அமரும் சினிமா பெருசுகளிடம் தான் படித்த ஆன்மீக கதைகளை பாட்டி கதைகள் போல் சொல்லிக்கொண்டிருக்கிறார்
பிரபலமானவர்கள் பட்டியலில் ஹன்சிகா
பிரபல ஆங்கில பத்திரிக்கையான போபர்ஸ் பத்திரிக்கை, பிரபலமானவர்கள் பட்டியலுக்கு ஹன்சிகாவை தெரிவு செய்துள்ளது.
மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களில் நடித்தவர் ஹன்சிகா மோத்வானி.
தற்போது சேட்டை, சிங்கம் 2, வாலு, பிரியாணி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அடுத்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்நிலையில் பிரபல ஆங்கில பத்திரிகையான ஃபோபர்ஸ், இந்தியாவின் முக்கியமான 100 பிரபலங்கள் பட்டியலில், இளவயது பிரபலங்கள் பட்டியலின் முதற்கட்ட பரிசீலனையில் ஒருவராக ஹன்சிகாவையும் தெரிவு செய்துள்ளது.
இந்த அறிவிப்பை கேட்டதும் துள்ளி குதித்த ஹன்சிகா, என்னால் இதை நம்பவே முடியவில்லை. இதற்காக என்னுடைய ரசிகர்களுக்கும், பெற்றோர்களுக்கும், சக நடிக, நடிகையர், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
25ஆம் தேதி திரையரங்குகளில் விஸ்வரூபம்
விஸ்வரூபம் திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் தமிழகம் முழுவதும் வெளியாகும் என்று நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார். சென்னையில் 11.01.2013 வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் கட்டுப்பட்டே விஸ்வரூபம் படத்தை முதலில் திரையரங்கில் வெளியிட இருப்பதாகவும் தமிழகம் முழுவதும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திரையரங்குகளில் வெளியிடும் அதே வேளையில் டிடிஎச்சில் பாட்னர்களையும் தான் ஏமாற்றப்போவதில்லை என்று கமலஹாசன் தெரிவித்துள்ளார். சம்மந்தப்பட் டிடிஎச் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறியுள்ள கமலஹாசன், அவர்களுடன் பேசி முடிவு எடுத்தபின் விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் கூறினார்.
விஸ்வரூபம் திரைப்படம் 10ஆம் தேதி அன்று டிடிஎச்சிலும், 11ஆம் தேதி திரையரங்கிலும் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடும் தேதியை 25ஆம் தேதிக்கு மாற்றியுள்ள கமலஹாசன், இனி டிடிஎச்சில் வெளியிடும் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்
வெள்ளி, 11 ஜனவரி, 2013
டாக்டர் வேடத்திலும் கிளாமரில் பட்டையை கிளப்பும் அஞ்சலி
கற்றது தமிழ், அங்காடித் தெரு உள்ளிட்ட படங்களில், சிறப்பான நடிப்பைவெளிப்படுத்திய அஞ்சலி, தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டினார்."சீதம்மா வகிட்லோ ஸ்ரீமல்லி செட்டு என்ற படத்தில், குடும்ப பாங்கான வேடத்தில் நடித்தார். தெலுங்கில், அதிகமான பட வாய்ப்புகளை கைப்பற்ற வேண்டுமானால், கிளாமரான வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதால், அஞ்சலியும் அதற்கு தயாராகிவிட்டார்.
ரவிதேஜா ஜோடியாக, "பலுபு என்ற படத்தில், தற்போது நடித்து வரும் அஞ்சலிக்கு,இதில் டாக்டர் வேடமாம். ஆனாலும், கிளாமருக்கு சற்றும் குறை வைக்காமல், பட்டையைகிளப்புவது என, முடிவெடுத்துள்ளாராம். இந்த படத்துக்கு பின், தெலுங்கு ரசிகர்களின்ஆதரவும், பட வாய்ப்புகளும், அதிகம் கிடைக்கும் என, நம்புகிறார், அஞ்சலி
ஹீரோக்கள் இருக்கின்றனர். இயக்குனர்
ஹீரோக்கள் கையில் சினிமா இல்லை என்றார் இயக்குனர் வெங்கடேஷ். பரத், நிலா நடிக்கும் படம் ‘கில்லாடிÕ படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். இது பற்றி அவர் கூறியதாவது: எந்த விஷயத்தில் ஈடுபட்டாலும் கில்லாடித்தனமாக செய்து முடிக்கும் இளைஞன் பற்றிய கதை. பரத் ஹீரோ. நிலா ஹீரோயின்.
இப்படத்தை பொறுத்தவரை ஆக்ஷன் நிறைந்த கதையாக அமைத்திருக்கிறேன். அதே சமயம் பரத் கதாபாத்திரத்தை யதார்த்தமாக உருவாக்கி இருக்கிறேன். பறந்து பறந்து அடிப்பது, சுழன்றடித்து எதிரிகளை வீழ்த்துவது போன்ற யதார்த்தத்துக்கு மீறிய காட்சிகள் இருக்காது. பரத்தும் இதை உணர்ந்துகொண்டு நடித்திருக்கிறார். யதார்த் தத்துக்கு மீறிய காட்சிகள் வேண்டாம் என்று அவரும் கேட்டுக்கொண்டார்.
சினிமா இன்றைக்கு மாறிவிட்டது. ஹீரோக்கள் கையில் இப்போது சினிமா இல்லை. கதையின் கையில்தான் ஹீரோக்கள் இருக்கின்றனர். யார் என்றே தெரியாமல் நடிக்கும் ஒருவரின் படம் ஹிட்டாகி விடுகிறது. அதன் மூலம் அந்த நடிகர் ஹீரோவாகி விடுகிறார். கதைக்குள்ள முக்கியத்துவத்தை எல்லா ஹீரோக்களும் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
அதனால்தான் ஒன்றுக்கு பத்து கதை கேட்டு தேர்வு செய்கிறார்கள். காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்துக்கு காமெடியை எப்படி அமைக்க வேண்டும் என்பது பற்றி மட்டும் விவேக்குடன் 3 நாட்கள் ஆலோசனை நடத்தினேன். வில்லித்தனமான கேரக்டரில் ரோஜா நடிக்கிறார். கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு. ஸ்ரீகாந்த் தேவா இசை. இதன் ஷூட்டிங் முடிந்தது. தயாரிப்பு சந்திரசேகர்
கொலை வழக்கில் சிக்குகிறார் கணவர் சுரேந்திரபாபு.
கன்னட நடிகை ஹேமாஸ்ரீ கொலை வழக்கில் அவரது கணவர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கன்னட படங்களில் நடித்திருப்பவர் ஹேமாஸ்ரீ. கடந்த அக்டோபர் மாதம் அனந்தபுரில் உள்ள ஒரு ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் குறித்து தந்தை நாகராஜ் போலீசில் புகார் செய்தார். அதில் ‘என் மகள் சாவில் மர்மம் இருக்கிறது. அவரை கணவர் சுரேந்திர பாபுதான் கொலை செய்திருப்பார். இதுபற்றி விசாரிக்க வேண்டும்Õஎன்று புகாரில் கூறி இருந்தார். இதையடுத்து சுரேந்திர பாபுவை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
இந்த சம்பவத்தில் போலீசார் குற்றப்பத்திரிகையை தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். வரதட்சணை கொடுமை, கொலை முயற்சி, சாட்சியங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது: சம்பவத்தன்று ஹேமாஸ்ரீ வீட்டில் இருந்தபோது அவரது அறைக்கு சென்ற சுரேந்திர பாபு ஒரு துணியில் மயக்கமருந்து வைத்து அதை ஹேமாஸ்ரீ மூக்கில் காட்டி மயங்க வைத்திருக்கிறார். இதற்கு சதிஷ் என்பவரும் உடந்தையாக இருந்தார். மயக்கம் அடைந்த ஹேமாஸ்ரீயை காரின் பின் சீட்டில் படுக்க வைத்து அனந்தபுரில் ரெட்டிபள்ளியில் உள்ள ஒஐ ஓட்டலுக்கு அதிகாலை 4.30 மணிக்கு கொண்டு சென்றனர்.
ஏற்கனவே சொல்லி வைத்திருந்தபடி இரண்டு பேர் அங்கு தயாராக இருந்தனர். அவர்கள் உதவியுடன் ஹேமாஸ்ரீயை அறைக்கு கொண்டு சென்றனர். பின்னர் 7 மணி அளவில் சுரேந்திர பாபு தன் மனைவி மயங்கி கிடப்பதாகவும் உதவி செய்யும்படியும் ஓட்டல் ஊழியர்களிடம் கேட்பதுபோல் நாடகமாடி இருக்கிறார். உடனடியாக ஹேமாஸ்ரீயை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் ஹேமாஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கணவரே ஹேமாஸ்ரீயை கொலை செய்திருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதால் கன்னட படவுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
வியாழன், 10 ஜனவரி, 2013
இந்தியாவில் ஹாலிவுட் படங்களின் வசூல் சாதனை
ஹாலிவுட் படங்களைப் பொறுத்தவரை 2012 ஆம் ஆண்டு நல்ல வரவேற்பைப் பெற்ற ஆண்டாகும். |
சோனி பிக்சர்ஸ் இந்தியா நிறுவனம், இந்தியாவில் 2012ஆம் ஆண்டில் மட்டும் 217
கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இது கடந்த ஆண்டு 12 தலைப்புகளில் வெளியிடப்பட்ட படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூலாகும். முன்பு எப்போதும் தொட்டுப் பார்த்திராத சாதனையாக இது அமைந்துள்ளது. கடந்த ஆண்டைப் பொறுத்தவரை 2 படங்கள் மாபெரும் வார இறுதி வசூலை அள்ளியிருக்கின்றன. “தி அமேசிங் ஸ்பைடர் மேன் 3டி'” மட்டும் வெளியான வார இறுதியிலேயே 34 கோடியை அள்ளியது. அடுத்தபடி அதிக வசூல் செய்த படம் “ஸ்கைஃபால்'” இப்படம் முதல் வார இறுதியிலேயே 27.4 கோடி குவித்தது. மேலும் “தி அமேசிங் ஸ்பைடர் மேன்” தேசமெங்கும் 650 நகரங்களில் வெளியிடப்பட்டது புது வரலாறு. இதுகுறித்து சோனி பிக்சர்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கெர்சி தருவாலா கூறுகையில், இந்தியாவில் ஹாலிவுட் படங்களுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. அதன் வியாபார எல்லை படிப்படியாக சீராக அதிகரித்து வருகிறது. இந்திய மொழிகளிலும் இதன் தொடர்ச்சியான வளர்ச்சி நிகழ்ந்து வருகிறது. ஹாலிவுட் படங்களை வெளியிடுவதில் நாங்கள் முன்னணியில் இருக்கிறோம். குறிப்பிடத்தக்க இடத்திலும் நாங்கள் இருக்கிறோம். எங்கள் பங்களிப்பு உயர்ந்த இடத்தில் இருக்கிறது என்றார். பொழுது போக்கு உலகத்தின் முடிசூடா மன்னனாகத் திகழும் சோனி பிக்சர்ஸ் 2013லும் தன் அழுத்தமான தடத்தைப் பதிக்க திட்டமிட்டு வருகிறது |
புகழ்பெற்ற தயாரிப்பாளர் எஸ்.ராமநாதன் காலமானார்
புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளரும் ரஜினி, கமல், அமிதாப் போன்றவர்களை இயக்கியவருமான எஸ்.ராமநாதன்(வயது 83) நேற்று மாரடைப்பால் காலமானார். |
அவருடைய இறுதிச் சடங்குகள் சென்னை மயிலாப்பூரில் உள்ள மயானத்தில்
இன்று(வியாழக்கிழமை) நடைபெறவுள்ளன. சென்னை தியாகராயநகர் கிரி சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பெங்களூரைச் சேர்ந்த ராமநாதன், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் படங்களைத் தயாரித்தவர். சுமார் 35-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தும், இயக்கியும் உள்ளார். அதில், பட்டத்துராணி, பொண்ணு மாப்பிள்ளை ஆகிய தமிழ் படங்களை இயக்கினார். ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, ரஜினி நடித்த தர்மதுரை ஆகிய படங்களைத் தயாரித்தார். ஹிந்தி திரையுலகில் சிறு வேடங்களில் நடித்து வந்த அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்றுத் தந்த பாம்பே டூ கோவா படத்தைத் தயாரித்தவர் ராமநாதன். மேலும், ரஜினி, கமல் மற்றும் அமிதாப்பச்சன் ஆகியோர் இணைந்து நடித்த கிராப்தார் என்ற படத்தை இயக்கியவரும் இவரே. ராமநாதனுக்கு கலாவதி என்ற மனைவியும், சைரா, உமா என்ற மகள்களும், சுபீஷ் என்ற மகனும் உள்ளனர். |
விஜய்யின் அடுத்த படம் “ஜில்லா”
இளையதளபதி விஜய்- காஜல் அகர்வால் இணையும் புதிய படத்திற்கு ஜில்லா என பெயரிடப்பட்டுள்ளது. |
இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கியமான கதாபாத்திரத்தில்
நடிக்கிறார். ஆர்.பி சௌத்ரியின் சூப்பர் குட்பிலிம்ஸ் தயாரிப்பில், நேசனின் இயக்கத்தில் இப்படம் உருவாகிறது. இமானின் இசையமைக்கிறார், மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தெரிவு நடைபெற்று கொண்டிருக்கிறது. பிரபல இயக்குனர் ஜெயம் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் நேசன் என்பது கூடுதல் தகவல். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் ஆரம்பமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. |
புதன், 9 ஜனவரி, 2013
ஸ்ரேயாவுடன் நடிக்க பயம். சித்தார்த்
பாய்ஸ்‘ படத்தில் அறிமுகமானவர் சித்தார்த். கடைசியாக அவர் நடித்த ‘காதலில் சொதப்புவது எப்படி‘ படம் ரிலீஸ் ஆனது. இந்தியில் ‘ரங் தே பசந்தி‘ உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தீபா மேத்தா இயக்கும் ‘மிட்நைட்ஸ் சில்ரன் என்ற படத்தில் நடித்தார். இப்படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் நடித்த அனுபவம் பற்றி சித்தார்த் கூறும்போது, ‘ஸ்ரேயா ஹீரோயினாக நடிக்கிறார் என்றதும் பயம் ஏற்பட்டது.
ஏனென்றால் அவரது கதாபாத்திரம் வலுவானது. அதற்கு சமமாக கடினமான உழைப்பின் மூலம் அந்த பயத்தை கடந்து வந்தேன். எனது கதாபாத்திரம் நன்றாக வந்திருக்கிறது. இதுவரை ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலிருந்து இது மாறுபட்டிருக்கும் என்றார்
குத்துப்பாடல்களுக்கு பதிலாக வில்லி ரோல்களில் நடிக்க
குத்துப் பாடல்களுக்கு ஆடிவந்த லட்சுமி ராய்க்கு, "மங்காத்தா படம், திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்திலும், அவருக்கு குத்துப் பாடல் உண்டு என்றாலும், நெகடிவ் ரோலில், அசத்தியிருந்தார்; பாராட்டுக்களும் குவிந்தன. இதனால், கவர்ச்சி வேடங்களில் நடிப்பதை விட, வில்லித் தனமான ரோல்களில் நடித்து, பெயர் வாங்குவதில், கவனம் செலுத்த துவங்கியுள்ளாராம், அவர்.
தற்போது, மலையாளத்தில், மூன்று படங்களிலும், கன்னடம் மற்றும் தெலுங்கில் தலா ஒரு படங்களிலும் நடித்து வருகிறார். இதில் எல்லாம், அவருக்கு சவாலான கேரக்டர்கள் தானாம். தமிழிலும், அதுபோன்ற சவாலான வேடங்களைத் தான், அவர் பெரிதும் எதிர்பார்க்கிறாராம்
இரவிலேயே படமாகும் விழித்திரு படத்தில்
தெய்வத்திருமகள் சாராஅவள் பெயர் தமிழரசி டைரக்டர் மீரா கதிரவன் சற்று இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் விழித்திரு. இப்படத்தில் கிருஷ்ணா, விதார்த், டைரக்டர் வெங்கட் பிரபு, தன்ஷிகா, அபிநயா, தம்பி ராமையா உள்ளிட்ட எக்கச்சக்க நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
முக்கிய கதாபாத்திரத்தில் தெய்வத்திருமகள் புகழ் சாரா நடித்துள்ளார். ஓர் இரவில் நடக்கும் சம்பவமும், அதில் இப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் ஒன்றாக இணைவதும் தான் இப்படத்தின் கதையாம். மேலும் படம் முழுக்க முழுக்க இரவிலேயே படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது
செவ்வாய், 8 ஜனவரி, 2013
நயன் தாராவுடன் ரகசிய திருமணமா? அதிர்ச்சியுடன் பதிலளித்த ஆர்யா.
நடிகர் ஆர்யாவை நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கள் வருகின்றன. அவருடன் ஜோடியாக நடித்த பல நடிகைகளோடு இணைத்து பேசப்பட்டார். தற்போது நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்தி பரவி உள்ளது.
இருவரும் ஏற்கனவே "பாஸ் என்கிற பாஸ்கரன்" படத்தில் ஜோடியாக நடித்தனர். தற்போது இன்னொரு படத்திலும் ஜோடி சேர்ந்துள்ளனர். ஆர்யா தான் சிபாரிசு செய்து நயன்தாராவை தனக்கு ஜோடியாக்கியதாக கூறப்பட்டது. சமீபத்தில் நயன்தாராவுக்கு அவர் விருந்து அளித்ததாகவும் செய்திகள் வந்தன. இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகவும் கிசுகிசுக்கள் மிக வேகமாக பரவி வருகின்றது.
இது குறித்து ஆர்யாவிடம் கேட்டபோது மறுத்தார். நடிகைகளுடன் இணைத்து தன்னைப் பற்றி தொடர்ந்து கிசுகிசுக்கள் வருகின்றன என்றும் வருத்தப்பட்டார்
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் பெயர் வெளியீடு
பில்லா' படத்திற்கு பிறகு அஜீத் - நயன்தாரா - விஷ்ணுவர்த்தன் - யுவன்சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் பெயரிடப்படாத படத்திற்கு தலைப்பு வைக்க இயக்குனரும், அஜீத்தும் படாதபாடு பட்டுவிட்டனர்.
படம் முடியும் தருவாயில் இருக்கும் நிலையில், தற்போது இந்தப் படத்திற்கு பொருத்தமான ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து விட்டனராம். தலைப்பின் பெயர் வெற்றி கொண்டான். விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிட இருக்கிறார்கள்.
இதுகுறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன் கூறும்போது, இந்த படத்திற்கு தலைப்பு வைப்பதற்காக ரொம்பவும் கஷ்டப்பட்டுவிட்டோம். தற்போது இப்படத்திற்கு பொருத்தமான தலைப்பு வைத்துள்ளோம். விரைவில் அதுபற்றிய முறையான அறிவிப்பை தெரிவிப்போம் என்று கூறியுள்ளார்.
அநேகமாக இதற்காக ஒரு விழா எடுத்தாலும் எடுக்கக்கூடும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. அப்படி விழா ஒன்று வைத்தால், தலைப்புக்காக விழா நடத்திய முதல் திரைப்படம் என்ற பெருமை இந்த படத்திற்கு கிடைக்கும்.
இந்த படத்தில் ஆர்யா, டாப்ஸி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல வெற்றிப்படங்களை தயாரித்த ஸ்ரீசூர்யா மூவீஸ் சார்பாக ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார்
சிம்புவுக்கு போட்டியாக தனுஷ் பாடியிருக்கும் இரண்டாம் உலக பாடல்
தனுஷ், சிம்பு இருவரும் மாறி மாறி ஆல்பம் வெளியிட்டும், பாடல்கள் பாடிக்கொண்டும் தங்களது போட்டியை வெளிப்படுத்தி கொண்டிருப்பதை இன்னும் விடவில்லை போலும். சமீபத்தில் தன் நண்பரின் தயாரிக்கும் படம் ஒன்றிற்காக பாடல் ஒன்றை பாடினார் சிம்பு. உடனே தனுஷுக்கு ஏதாவது ஒரு படத்தில் தானும் ஒரு பாடல் பாட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. இந்த நேரத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தன்னுடைய அண்ணனுடை இரண்டால் உலகம் படத்தில் ஒரு வாய்ப்பு வந்ததும் கெட்டியாக பிடித்துக் கொண்டார் தனுஷ்.
குறிப்பிட்ட அந்த பாடலுக்கு தனுஷ் பாடினால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய இசையமைப்பாளர் தனுஷுக்கு அழைப்பு விடுக்க, பிசியான வேலைகளுக்கு மத்தியில் அந்த பாடலை பாடிக் கொடுத்துள்ளார் தனுஷ். ஏற்கெனவே தனது அண்ணன் படங்களான ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்களிலும் பாடியுள்ளார் தனுஷ்.
இந்த பாடல் படமாக்கப்பட்டதும் ‘இரண்டாம் உலகம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது. அதன்பின் இறுதிப் பணிகளை விரைந்து முடித்து வெகுசீக்கிரமாகவே வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இந்த படத்தில் ஆர்யா, அனுஷ்கா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன
திங்கள், 7 ஜனவரி, 2013
கோழி கூவுது. திரைவிமர்சனம்
ஊர் ஊராக சுற்றி கோழிக் குஞ்சுகளை விற்பவனாக நாயகன் அசோக். சிறுவயதிலேயே அப்பாவை இழந்துவிட்ட இவருக்கு, தனது தாய் மற்றும் தங்கையை காப்பாற்றுவதற்காக இந்த தொழிலில் இறங்குகிறான். மயில்சாமியுடன் சேர்ந்து இந்த வேலையை செய்கிறார்.
இவர்கள் நோயால் பாதிக்கப்பட்ட கோழிக் குஞ்சுகளை குறைந்த விலைக்கு வாங்கி அதற்கு சாயம் பூசி மக்களை ஏமாற்றி விற்று பணம் சேர்த்து வருகிறார்கள்.
அத்தை வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருக்கும் நாயகி சிஜா ரோஸ் ஒருநாள் நாயகனிடம் ஒரு கோழிக் குஞ்சை வாங்குகிறாள். அந்த கோழிக்குஞ்சு சில நாட்களிலேயே இறந்துவிடுகிறது. இதனால் நாயகனிடம் சண்டை போட்டு வேறொரு கோழிக்குஞ்சுகளை வாங்கிக் கொண்டு அதை பத்திரமாக பார்த்து வருகிறாள்.
இதற்கிடையில், ஒரு விபத்தில் இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள, அந்த மோதலே இருவருக்குள்ளும் காதலாக மாறுகிறது. ஆனால், இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் காதலை சொல்லிக்கொள்ளாமலேயே இருக்கின்றனர்.
ஒருகட்டத்தில் இருவரும் தங்கள் காதலை சொல்ல வரும் வேளையில், நாயகியின் சித்தப்பா போஸ் வெங்கட் நாயகியை திருவிழாவிற்காக தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுவிடுகிறார். தன்னுடைய ஊர் பெரியவரான போஸ்வெங்கட் நாயகியை அழைத்துச் செல்வதன் காரணம் என்னவென்று புரியாமல் நாயகன் திகைத்து நிற்கிறார்.
அதன்பின், நாயகி போஸ் வெங்கட்டின் அண்ணன் மகள் என்பதை அறிகிறான். இருப்பினும், தனது காதலை தெரிவிக்க தனது சொந்த ஊருக்கே திரும்புகிறான் நாயகன். ஊருக்கு திரும்பிய நாயகன், நாயகியை சந்தித்து காதலை தெரிவிக்கிறான்.
ஒருநாள் திருவிழாவின் போது நாயகியின் வீட்டார் அனைவரும் கோவிலுக்கு சென்றுவிடுகின்றனர். திருவிழா முடிந்ததும் நாயகி மட்டும் வீட்டுக்கு திரும்புகிறாள். அவளை தனியாக சந்திக்க நாயகன் அவள் வீட்டுக்கு வருகிறான். இருவரும் அங்கு தனியாக இருப்பதை போஸ் வெங்கட் பார்த்துவிடுகிறார்.
கோபமடைந்த அவர் நாயகனை அடித்து அங்கிருந்து விரட்டுகிறார். அதன்பிறகு அவனுடைய வீட்டிற்குச் சென்று அவனது அம்மாவையும், தங்கையையும் மிரட்டிவிட்டு வருகிறார். பயந்துபோன நாயகனின் அம்மா இனிமேல் நாயகியை நீ சந்திக்கவே கூடாது என கண்டிப்புடன் கூறிவிடுகிறார்.
இதனால், நாயகன் உடைந்து போய் நாயகி நினைவில் வாடுகிறார். நாயகியின் வீட்டிலோ அவளுக்கு வேறு ஒரு பையனை திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. ஒருபக்கம் போஸ் வெங்கட் நாயகனை கொல்லவும் ஆள் அனுப்புகிறார்.
இவ்வளவு எதிர்ப்புக்கிடையில் நாயகன் நாயகியை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
கோழி வியாபாரியாக வரும் நாயகன் அசோக் ஏற்கெனவே தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் கிராமத்து இளைஞனாக நம்மை கவர்கிறார். இவர் கோழிகளை விற்பதற்காக கோழி கோழி என்று கூவுவது தனி ஸ்டைல். நாயகியை காதல் செய்வதாகட்டும், அவளிடம் சண்டை போடுவதாகட்டும் தனது பணியை சரியாக செய்திருக்கிறார்.
நாயகி சிஜா ரோஸ், மீண்டும் ஒரு மலையாள வரவு. ரொம்ப அழகு. இவருக்கு, படத்தில் தாயை இழந்துவிட்டு தந்தையின் பாசத்துக்கு ஏங்கும் கதாபாத்திரம். கோழிக்குஞ்சை வாங்கி வீட்டில் இவர் பராமரிக்கும்போது தன் பாசத்தை அக்கோழிக்குஞ்சிடம் வெளிப்படுத்தும் காட்சிகளில் நெஞ்சை நெருட வைக்கிறார். காதலனை பிரியமுடியாமல் தவிக்கும் காட்சிகளில் பரிதாபப்பட வைக்கிறார்.
நாயகியின் சித்தப்பாவாக வரும் போஸ் வெங்கட் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். இறுதியில் தான் செய்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்கும்போது பாசத்தில் நெகிழ வைத்துவிடுகிறார்.
நாயகியின் அப்பாவாக வரும் நரேன் படத்தின் இன்னொரு ஹீரோ என்றே சொல்லலாம். சிறு வயதிலேயே தன்னை விட்டுப் பிரிந்து போய்விட்ட மகளிடம் இவர் ஒவ்வொரு முறை பேச முயற்சிப்பதும் மகள் மேல் தான் வைத்திருக்கும் பாசத்தை தன் மனதுக்குள்ளேயே போட்டு அடக்கிக் கொள்வதுமான அப்பா கேரக்டர். எந்த கேரக்டராக இருந்தாலும் அப்படியே மாறிப் போய்விடும் திறமை கொண்ட நரேன் இந்தக் கேரக்டரை செய்திருக்கும் விதத்தைப் பற்றி சொல்லவும் வேண்டுமா என்ன? நம்மை அறியாமலேயே இவரது கேரக்டர் மீது ஒரு மதிப்பும் மரியாதையும் வந்துவிடுகிறது.
நாயகனின் அம்மாவாக வரும் ரோஹிணி, மயில்சாமி, அருண் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான பணியை செவ்வனே செய்திருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் புளித்துப்போன காதல் கதையை வித்தியாசமான கதைக்களத்தில் சொல்லவந்த புதிய இயக்குனர் கே.ஐ.ரஞ்சித்-க்கு பாராட்டுக்கள்.
காதல் ஜோடிகளை கொல்வதற்காக மலையை நோக்கி அவர்கள் அழைத்துச் செல்லப்படும் காட்சிகள் திக் திக் நிமிடங்கள் அமைந்திருக்கின்றன. அடுத்து என்ன நடக்குமோ என்னும் திகிலை அந்த காட்சிகள் அதிகமாகவே ஏற்படுத்தியிருக்கிறது.
ஜெயப்பிரகாஷ் ஒளிப்பதிவு நிறைவைக் கொடுத்திருக்கிறது. குத்துப்பாடலும், மெலடி பாடல்களும் கலந்து கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ராம்ராஜ். ஆனால் பின்னணி இசை ரொம்ப இடங்களில் அமைதியாகவே இருக்கிறது.
மொத்தத்தில் ‘கோழி கூவுது’ மன நிறைவு
நான் சராசரி பெண்ணாக சினிமாவுக்கு வரவில்லை
அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா பட்டத்து யானை என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இதில் நாயகனாக விஷால் நடிக்கிறார். பூபதி பாண்டியன் இயக்குகிறார். மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார்.
நடிகர்களின் மகள்கள் பலர் சினிமாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் வரிசையில் தற்போது அர்ஜூன் மகள் வந்துள்ளார். ஐஸ்வர்யாவுக்கு சினிமா வாய்ப்பு வந்ததும் மும்பையில் உள்ள நடிப்பு பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்தார்.
நடிகையானது குறித்து ஐஸ்வர்யா கூறியதாவது:-
நான் சராசரி பெண்ணாக சினிமாவுக்கு வரவில்லை. நூற்றுக்குநூறு சதவீத உழைப்பை கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்தில் வந்துள்ளேன். எனது தந்தை அர்ஜூன் சினிமாவில் இருப்பதால் எனக்கு பொறுப்பு அதிகம் உள்ளது. அவர் பெயரை காப்பாற்றுவேன். நடிப்பு பயிற்சி எடுத்துதான் சினிமாவுக்கு வந்துள்ளேன்.
இவ்வாறு ஐஸ்வர்யா கூறினார்
உயிர் நண்பன் கமலுக்காக குரல் கொடுப்பாரா ரஜினி?
ஸ்ருதிஹாசனுக்கு தடையா? கமல்ஹாசன் தன் விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்வதற்கு பெரும் முயற்சியில் தத்தளித்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தன் உயிர் நண்பன் ரஜினிகாந்த் தனக்காக குரல் கொடுப்பாரா என ஏங்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ரஜினி சொன்னால், எந்த தியேட்டர் முதலாளியும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்ற காரணத்தால், தானாகவே முன் வந்து ரஜினி தனக்கு உதவுவார் என கமல் தரப்பு எதிர்பார்க்கிறது.
ஆனால் ரஜினி இவ்விஷயத்தில் பொறுமை காத்து வருகிறார். இந்த விவகாரத்தில் தலையிட்டு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டுவிட்டால், அடுத்து வரும் கோச்சடையானுக்கு தியேட்டர் முதலாளிகள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்ற அச்சம் காரணமாகவும் இருக்கலாம் என்கின்றனர் நடுநிலையாளர்கள்.
இந்த நேரத்தில் கமல்ஹாசனோடு சேர்த்து ஸ்ருதிஹாசனுக்கு தடைபோட வேண்டும் என தியேட்டர் அதிபர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கின்றார்கள். ஆனால் பொறுப்புள்ள பதவியில் உள்ள சிலர், அதெல்லாம் தவறு, நமக்கு டார்கெட் கமல் மட்டுமே என அமைதிபடுத்தி வருகின்றார்கள்
ரூ.40 லட்சம் சம்பளத்தைக் குறைத்துக் கொண்ட ஸ்ருதிஹாசன்.
தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். தெலுங்கில் அவர் நடித்த கப்பார் சிங் படம் ஹிட்டானதையடுத்து தனது சம்பளத்தை 1 கோடிக்கு உயர்த்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடிக்கும் ‘எவடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சமந்தாவிடம் கால்ஷீட் கேட்டார் தயாரிப்பாளர் தில் ராஜு. முதலில் ஓகே சொன்ன சமந்தா பின்னர் கால்ஷீட் பிரச்னையால் விலகினார். இதையடுத்து புதிய ஹீரோயினை உடனடியாக தேட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் தயாரிப்பாளர். ஸ்ருதி ஹாசனை நடிக்க வைக்கலாம் என்று பட குழுவினர் கருத்து தெரிவித்ததையடுத்து அவரை அணுகினார்.
அவரோ ரூ. 1 கோடி சம்பளம் தந்தால் நடிப்பதாக கூறினாராம். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தார் தயாரிப்பாளர். சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கேட்டார். 2 வார காலம் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்தது. சம்பளத்தை குறைக்காத பட்சத்தில் வேறு ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் எண்ணினார். ஆனால் ராம் சரணுடன் நடிக்கும் வாய்ப்பை இழக்க ஸ்ருதி விரும்பவில்லை.
இதையடுத்து தனது சம்பளத்தை 60 லட்சமாக குறைத்துக்கொண்டாராம். இதை தயாரிப்பாளரும் ஏற்றுக்கொண்டாராம். ஆனால் ஸ்ருதி தரப்பில் கூறும்போது,‘பணம் பெரிய விஷயமில்லை. நல்ல கதாபாத்திரங்கள்தான் முக்கியம். இப்படத்தில் நடிக்க தாமதம் ஆனதற்கு காரணம் கால்ஷீட் பிரித்து தருவதில் பிரச்னை இருந்தது. இதற்கும் சம்பளத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றனர்
ஞாயிறு, 6 ஜனவரி, 2013
பிறந்தநாளில் ஏழைகளுக்கு உதவினார் ஜீவா
நடிகர் ஜீவா தனது பிறந்தநாளை ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி கொண்டாடினார். |
தியாகராயநகரில் உள்ள தி.நகர் சோசியல் கிளப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 200
ஏழை பெண்களுக்கு இலவச சேலைகள் மற்றும் அரிசியை ஜீவா வழங்கினார். நிகழ்ச்சியில் ஜீவா பேசும்போது, ஆதரவற்றோருக்கு உதவுவதில்தான் உண்மையான சந்தோஷம் இருக்கிறது. மருத்துவம் படிக்க வசதி இல்லாத மாணவனுக்கு கல்வி கட்டணத்தை ஏற்றதிலும், காஞ்சீபுரத்தில் இரண்டு ஏழை மாணவிகளை தத்து எடுத்து படிக்க வைப்பதிலும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இன்று ஏழை பெண்களுக்கு பொங்கல் பரிசாக சேலை மற்றும் அரிசி வழங்கப்பட்டு உள்ளது. இந்த சமூக சேவை பணிகளை இன்னும் பெரிதாக செய்வேன் என்றார். நிகழ்ச்சியில் இயக்குனர்கள் அகமது, கதிர், பிஸ்வாஸ் சுந்தர், எல்ரெட் குமார், செல்வகுமார், தயாரிப்பாளர் தமிழ்க் குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)