சனி, 1 டிசம்பர், 2012

கடல் படத்தின் FIRST LOOK வெளியானது

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் கடல் படத்தின் FIRST LOOK வெளியாகியுள்ளது.
நவரச நாயகன் கார்த்திக் மகன் கவுதம், நடிகை ராதாவின் இளையமகள் துளசி இருவரும் ஜோடியாக கடல் படத்தில் அறிமுகமாகிறார்கள்.
மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணி ரத்னம் தயாரித்து இயக்க ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
மீனவர் பிரச்சினையை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் படங்கள், நடிகர் நடிகையர் படங்கள் என எதையும் வெளியிடாமல் இருந்தார் மணிரத்னம்.
இந்நிலையில் இன்று முதல் முறையாக அதிகாரப்பூர்வ போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதிலும் கூட நாயகன் நாயகி உள்ளிட்ட யாருடைய முகமும் இல்லை.
கடலை ஒரு இளைஞன் திரும்பி நின்று பார்ப்பது போல டிசைன் செய்யப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக