கொலிவுட்டில் கெளதம் மேனன் இயக்கிய 'நீதானே என் பொன்வசந்தம்' வரும் 14ம் திகதி ரிலீசாகிறது. |
ஜீவா, சமந்தா மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை புதிய முறையில்
விளம்பரப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள். அதாவது படம் ரிலீசாவதற்கு முன்பே முக்கியமான காட்சிகள் சிலவற்றை யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இப்படி செய்வதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யலாம் என்று நினைத்திருக்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் இரண்டாவது காதலர் தினம் என்று கொண்டாடும் அளவுக்கு சிறப்பாக வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இது குறித்து கெளதம் மேனன் கூறுகையில், சமந்தா நித்யா கதாப்பாத்திரத்திலும், ஜீவா வருண் கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். இந்த இருவரின் 30 வருட காதலை வெறும் இரண்டரை மணி நேரங்களில் சொல்லி விட முடியாது. எனவே, படத்தில் இடம் பெறாத சுவாரஸ்யமான காட்சிகள் சிலவற்றை ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் ரிலீஸ் செய்ய இருக்கிறோம் என்றார். படத்தை விளம்பரப்படுத்துவதற்கு இப்படி ஒரு உத்தியை இதுவரை யாரும் உபயோகப்படுத்தியது இல்லை என்று நீதானே என் பொன்வசந்தம் குழுவினர் கூறுகின்றனர். |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக