இப்படத்தில் கருணாஸ் நாயகனாகவும், ஸ்வேதா பாசு நாயகியாகவும் நடிக்கிறார்.
இவர்களுடன் இளவரசு,
எம்.எஸ்.பாஸ்கர், மதன்பாப், சுஜாதா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படம் குறித்து இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஒரு நகைச்சுவை நடிகர்
என்று பாராட்டு பெற்ற கருணாஸின் குணச்சித்திர நடிப்புக்கு சந்தமாமா ஒரு உதாரணமாகி
விடும்.
ஒரு குணச்சித்திர நடிகருக்குள் உள்ள கோபம், சோகம், நகைச்சுவை என்ற எல்லா
உணர்வுகளையும் இந்தபடம் வெளிக்கொண்டு வரும்.
சமீபத்தில் கேரளாவில் ஆலப்புழாவில்,
யாரோடி
கூடங்குளம் அணு உலையா
கொஞ்சி வரும் தேவதையா
கொல்ல வரும்
மோகினியா
என்ற பாடல் படமாக்கப்பட்டது. கருணாஸ் மற்றும் ஸ்வேதாபாசு இருவரும் ஆடிப்பாட
இப்பாடல் படமாக்கப்பட்டது. இந்த படத்தில் கருணாஸ் எழுத்தாளராக நடிக்கிறார் என்பது
குறிப்பிடத்தக்கது. |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக