ஞாயிறு, 23 டிசம்பர், 2012

பகலில் ஊர்வலம் நடத்திய அப்பாஸ்.


டெல்லியில் கற்பழிப்பு சம்பவங்களுக்கு எதிராக மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு 12 மணிக்கு நடிகை ரோகிணி தலைமையில் மெரினாவில் திரண்ட கல்லூரி மாணவ- மாணவிகள், கற்பழிப்பு சம்பவங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இதற்காக நேற்று இரவு 11.30 மணி அளவில் மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே 100 மாணவிகளும், 200 மாண வர்களும் திரண்டனர். இவர்களில் ஒரு பகுதியினர் சத்யம் தியேட்டர் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு காந்தி சிலையை வந்த டைந்தனர்.
கற்பழிப்பு சம்பவங்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பள்ளிகளில் பாலியல் கல்வியை கற்றுத்தர வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் போட்டனர்.
இந்த போராட்டம் குறித்து நடிகை ரோகிணி கூறியதாவது:-
கழுத்து நிறைய நகைகளை அணிந்து ஒரு பெண் நள்ளிரவு 12 மணிக்கு தன்னந்தனியாக பயமின்றி என்றைக்கு நடந்து செல்கிறாரோ அன்றுதான் நமது நாட்டுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். இதற்காகத்தான் நள்ளிரவு 12 மணிக்கு போராட்டம் நடத்தினோம். கற்பழிப்பு குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நள்ளிரவு நடந்த இந்த போராட்டம் காரணமாக மெரினாவில் நேற்று இரவு பரபரப்பு நிலவியது. மெரினா இஸ்பெக்டர் பாண்டி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
டெல்லியில் மாணவி கற்பழிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் அப்பாஸ் தலைமையில் இன்று மெரினா கடற்கரை காந்தி சிலையில் இருந்து மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. இதில் அப்பாசின் மனைவி எர்ரம்அலி மற்றும் அப்பாசின் இணையதள நண்பர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக