நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி பிரபல கர்நாடக பாடகி நித்யஸ்ரீ யின் கணவர் மகாதேவன் சென்னை கோட்டூர்புரம் அருகே உள்ள அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். |
இன்று பகல் 12.45 மணி அளவில் தனது காரில் வந்து கோட்டூர்புரம் அருகே உள்ள அடையாற்றின் பாலத்தில் நிறுத்திவிட்டு, ஆற்றில் குதித்துள்ளார். திடீரென ஒருவர் காரை நிறுத்திவிட்டு ஆற்றில் குதித்ததை பார்த்தவர்கள், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், ஆற்றில் குதித்து சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்கு பின்னர் அவரது உடலை மீட்டனர். இன்று காலை ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாகவே மகாதேவன், கோபத்துடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி? இதனிடையே கணவர் இறந்தது குறித்து தகவலறிந்த பாடகி நித்யஸ்ரீயும், தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது உடல் நிலை குறித்த விவரம் உடனடியாக தெரியவரவில்லை. பாடகி நித்யஸ்ரீ, மறைந்த பிரபல கர்நாடக பாடகி பட்டம்மாளின் பேத்தி ஆவார். |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக