.
ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா, பறந்து வந்த பாண்டவா” என்றெல்லாம் கூட பாட்டெழுதுவார்கள் போலிருக்கிறது இனிமேல்! திட்டமிட்டபடியே ஒரே நாளில் மதுரை, கோவை, சென்னையில் இசை வெளியீட்டு விழாவை நடத்தி முடித்துவிட்டார் கமல். அதிலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையிலும் தாங்கவொணா தள்ளுமுள்ளுக்கு நடுவிலும்! இதற்காக ஒரு ஸ்பெஷல் “உலங்கு வானூர்தி”யை (வார்த்தை உபயம் -மக்கள் தொலைக்காட்சி) அமைத்துக் கொண்டார் கமல்.
சென்னை நிகழ்ச்சிக்கு அவர் வந்து சேரும்போது இரவு எட்டை தொட்டிருந்தது கடிகாரம். இடதுபுறம் ஆன்ட்ரியா, வலது புறம் பூஜா குமார் சகிதம் அவர் காட்சியளித்தபோது, சாட்சாத் சக்கரவர்த்தி திருமகன் லுக் கமலிடம்!
முருகதாஸ், தரணி, லிங்குசாமி என்று இளையத் தலைமுறையும், பாரதிராஜா, Viswaroopam Audio Launchகே.எஸ்.ரவிகுமார், வசந்த் என்று முந்தைய தலைமுறையும் வந்திருக்க, கமலால் மூத்த அண்ணன் என்று எப்போதும் கொண்டாடப்படும் இசைஞானி இளையராஜாவும் வந்திருந்ததுதான் கண்கொள்ளாக் காட்சி. இவர்கள் போக கமலின் வாத்திய கோஷ்டிகளான சந்தானபாரதி, மவுலி, ரமேஷ்கண்ணா ஆகியோரும் ஆஜர். படத்தின் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஷங்கர் மகாதேவன் ஒரு பாடலை பாட அருகிலிருந்த கமல், “நான் வெறும் கொண்ணக்கோல்தான்” என்றபடி அடி எடுத்துக் கொடுத்தார். முன்னதாக ஷங்கர் எசான் லாய் மூவரும் இசைஞானியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்கள்.
என் இனிய தமிழ் மக்களே... என்னத்தை பேசுறது என்று லேசாக ஆரம்பித்தார் பாரதிராஜா. இன்னைக்கு விஸ்வரூபமா வளர்ந்து நிக்கிற கமலுக்கு கோவணம் கட்டி பார்த்தவன் நான். அப்ப தயக்கத்தோட அவர்கிட்ட போய் நின்னேன். அன்றைக்கு இளைய தலைமுறை நடிகர்களில் டாப் ஹீரோவா இருந்த அவர்கிட்ட போய் இதை எப்படி சொல்றது. எனது தயக்கத்தை பார்த்துட்டு என்ன செய்யணும் நான்னு கேட்டாரு. மெல்ல தயங்கி தயங்கி விஷயத்தை சொன்ன அடுத்த செகன்ட் எல்லாத்தையும் அவுத்து போட்டுட்டு கோவணத்துக்கு மாறிட்டாரு. கலைக்காக நிர்வாணத்தையும் ஏற்றுக் கொள்கிற கலைஞன்தான் அவர்.
நான் தேனியில் பிறந்த பாமரன். அவரு பரமக்குடியில் பிறந்தவர். ரெண்டு பேருமே படிக்கல. ஆனால் இன்னைக்கு இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இங்கிலீஷ்னு அத்தனை மொழியும் அவருக்கு அத்துப்படியா இருக்கு. இது சாதாரண விஷயமில்ல. இன்னைக்கு ஹாலிவுட்டுக்கு போற அளவுக்கு அவர் வளர்ந்திருக்காருன்னா எங்களுக்கெல்லாம் பெருமையா இருக்கு என்றார் பாரதிராஜா தனது கம்பீரக்குரலில்.
முருகதாஸ் தனது படத்தைப் போலவே பேச்சிலும் சுவாரஸ்யத்தை கலந்து கட்டினார். நான் Viswaroopam Audio Launchகமல் சார்ட்ட ஒருமுறை கேட்டேன். சார்... உங்க நடிப்பு ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமா இருக்கும். சினிமாவுக்காக அவ்வளவு கஷ்டப்படுறீங்க. மேக்கப்ங்கிறது அழகுக்காக மட்டுமல்ல, படத்தில் நாம் ஏற்றுக் கொள்கிற கேரக்டருக்காகவும் போடப்படுவது தான்ங்கிறதை முழுமையா உணர்த்தியதே நீங்கதான். இதற்காகவெல்லாம் எவ்வளவு யோசிக்கணும். இந்த வேலை பளுவில் கதையையும், டைரக்ஷனையும் கூட நீங்களே செய்யணுமா? அதை வேறொருத்தர் பொறுப்பில் விடலாமேன்னு கேட்டேன். அதுக்கு கமல் சார், “சிவாஜிங்கிற சிங்கத்துக்கே சில நேரம் நாம தயிர் சாதம் போட்ருக்கோம். அதனால்தான் எனக்கான சமையலை நானே சமைக்கிறேன்”னு சொன்னார்.
சார்... நான் ரிட்டையர் ஆகறதுக்குள்ளே சிங்கத்துக்கான சமையலை செஞ்சு வச்சுருவேன். அதை நீங்க சாப்பிடணும் என்று சொல்ல, ஒரே கைத்தட்டல்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக