ஞாயிறு, 23 டிசம்பர், 2012

பேய்க்கதை மன்னன் ராஜேஷ்குமார் எழுத்தில் உருவாகும் “சிறுவாணி”

கொலிவுட்டில் மருதமலை பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் “சிறுவாணி”.
சஞ்சய் கதாநாயகனாகவும், ஐஸ்வர்யா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.
இவர்களுடன் நெல்லை சிவா, அனுமோகன், சாமிநாதன், பசங்க சிவகுமார், ஐசக், எலிசபெத், நளினிகாந்த் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் கதையை பேய்க்கதை மன்னன் ராஜேஷ்குமார் எழுதியிருக்கிறார். இவர் பேய்க்கதை, கிரைம் கதை ஆகியவற்றை எழுதி பிரபலமானவர்.
இப்படத்தை அறிமுக இயக்குனர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.
படம் குறித்து இயக்குனர் கூறுகையில், சிறுவாணித் தண்ணீர் பற்றி சொல்ல வேண்டுமென்றால் உலகத்திலேயே சுவையான தண்ணீர் என்ற பெருமையை இன்று வரை 2வது இடத்திலேயே தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
அந்த சிறுவாணி ஆற்றில் குளிக்கப் போன கல்லூரி மாணவர்– மாணவிகளுக்கு நடக்கும் திகிலான சம்பவங்கள் தான் சிறுவாணி படத்தின் கதை.
ஆற்றின் நீரோட்டம் எப்படி மென்மையாக இருக்குமோ அது மாதிரி மென்மையான காதல் கதைக்கு திகிலான சம்பவங்கள் விறுவிறுப்பைக் கூட்டும் என்றார்.
அந்தமான், நிகோபர், சென்னை, கோவை போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக