ஞாயிறு, 9 டிசம்பர், 2012

மாணவியின் கண் ஆபரேஷனுக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்த சசிகுமார்.

 
எங்காவது விழாக்களுக்கு போனால் உணர்ச்சிவசப்பட்டு வாக்குறுதி கொடுக்கும் சினிமா டைரக்டர்கள் அதற்கப்புறம் அந்த விஷயத்தையே மறந்து விடுகிற கொடுமையெல்லாம் கண்ணெதிரே நடப்பதுதான். சென்னையில் அமைந்திருக்கும் லிட்டில் ஃபிளவர் பார்வையற்றோர் பள்ளியில் தனது படம் ஒன்றின் பாடல் வெளியீட்டு விழாவை நடத்திய டைரக்டர் தரணி, அங்கு பாடிய பார்வையில்லாத மாணவி ஒருவருக்கு தன் அடுத்த படத்தில் பாட வாய்ப்பளிப்பதாக வாக்குறுதி கொடுத்தார். அவரது ஒவ்வொரு படத்திலும் அந்த மாணவியை பாட வைப்பாரா என்று காத்திருந்த பள்ளி நிர்வாகத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல... ஓராயிரம் உதாரணங்கள் உண்டு, சினிமாக்காரர்களின் சத்திய பிராமாணத்திற்கு.
சரி... சசிகுமார் என்ன செஞ்சாரு? மலையாள சேனல் ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஒரு பார்வையில்லாத மாணவியின் திறமை அவரை கவர்ந்தது. சட்டென்று தன் பாக்கெட்டிலிருந்து ஒரு லட்ச ரூபாயை கொடுத்து கண் ஆபரேஷனுக்காக வைத்துக் கொள்ள சொன்னாராம். இது கேமிரா ஆஃபில் இருக்கும் போது நடந்த நெகிழ்ச்சி. கண்ணுக்கு தெரியாமல் அவர் செய்த உதவி ஒன்று அந்த மாணவியின் கண்பார்வைக்கு வழி வகுத்தால் அதுதானே கிரேட்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக