ஞாயிறு, 30 டிசம்பர், 2012

ஏ.ஆர்.ரஹ்மானின் பிரமாண்ட இசைநிகழ்ச்சி "தாய் மண்ணே வணக்கம்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி கல்லூரி மைதானத்தில் இசை நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் ‘தாய் மண்ணே வணக்கம்’ என்ற பிரமாண்ட இசைநிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்திய வரலாற்றில் இசைக்கான ஆஸ்கர் விருது பெற்ற பின் ஏ.ஆர்.ரஹ்மான் ஜெயா தொலைக்காட்சிக்காக நடத்தும் முதல் நிகழ்ச்சி என்பதால், அவரது இசையை ரசிக்க பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர்.

உலகத் தரத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒளி மற்றும் ஒலி அமைப்போடு நடந்த இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது கம்பீரக் குரலில் பாடல்கள் பாடி அசத்தினார். அப்போது ரசிகர்கள் உற்சாக மிகுதியில் எழுந்து ஆட்டம் போட்டனர். பெண் இசைக் கலைஞர்கள் உட்பட பல வெளிநாட்டு இசை வல்லுனர்கள் இசைக்கருவிகளை இயக்கியது நிகழ்ச்சிக்கு கூடுதல் மெருகேற்றியது.

இந்த நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை மூலம் வரும் வருவாயில் 10 விழுக்காட்டினை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க ஜெயா தொலைக்காட்சி குழுமம் திட்டமிட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக