நீண்ட இடைவெளிக்கு பிறகு மூன்று பேர் மூன்று காதல் படத்தின் மூலம் மீண்டும் வருகிறார் தாமிரபரணி பானு. |
இதுகுறித்து அவர் கூறுகையில், தாமிரபரணி வெற்றி பெற்றும் அடுத்து ஒரு நல்ல படம்
கிடைக்காதது எனது துரதிஷ்டம். மலையாளப் படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருப்பதாலும், குடும்ப பிரச்னைகள் இருந்த காரணத்தினாலும் மீண்டும் தமிழ்நாட்டு பக்கம் வரமுடியவில்லை. இனிமேல் தமிழில் நடித்தால் பெரிய படத்தில், பெரிய இயக்குனர் படத்தில் தான் நடிக்க வேண்டும் என முடிவு செய்தேன். வசந்தின் இயக்கத்தில், மூன்று பேர் மூன்று காதல் வாய்ப்பு வந்ததும் ஒப்புக் கொண்டேன். வசந்த் அடிக்கடி டென்ஷன் ஆவார், திட்டுவார் என்றெல்லாம் பயமுறுத்தினார்கள். எப்படி இருந்தாலும் சமாளித்துக் கொள்வோம் என்று நினைத்து நடித்தேன். அவர்கள் சொன்ன மாதிரியே நடந்தது. முதல் நாள் போட்டோ ஷூட்டில் கதறி அழுதுவிட்டேன். கதையில் நான் நாகர்கோவில் பொண்ணு. அதற்கேற்ற மாதிரி பாவாடை, தாவணி, சேலை அணிவித்து படம் எடுத்தபோது எனக்கு வசந்த் சார் சொல்லி க்கொடுத்த மேனரிசம் சரியாக வரவில்லை. சரமாரியாக திட்டிவிட்டார். கடைசியில், பானு நீ நல்லா நடிக்கிற இன்னும் நல்லா பண்ணினா உன் எதிர்காலம் நல்லா இருக்கும் என்று சொன்னார். அதன் பிறகு படப்பிடிப்பில் ரொம்ப கவனமாக நடித்து அவரின் பாராட்டைப் பெற்றேன். இப்போது என்னை நாகர்கோவில் பெண்ணாக திரையில் பார்க்கும் போது நான் வாங்கிய திட்டும், அழுத அழுகையும் ஒரு விஷயமே இல்லை என்று தோன்றுகிறது. வசந்த் சாரிடம் 3 மாதங்கள் நான் கற்ற பாடம் என் எதிர்காலத்துக்கு உதவும் என்று தெரிவித்துள்ளார் |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக