சனி, 1 டிசம்பர், 2012

200 திரையரங்குகளில் வெளியாகும் ''பிசினஸ்மேன்'' படம்

தெலுங்கில் மகேஷ்பாபு, காஜல் அகர்வால் நடித்து வெற்றி பெற்ற படம் 'பிசினஸ் மேன்'.
இப்படத்தை பூரிஜெகன்நாத் இயக்கியிருந்தார்.
இவர்தான் தமிழில் வெளியான போக்கிரி படத்தை தெலுங்கில் இயக்கியவர்.
பிசினஸ்மேன் படம் தற்பொழுது தமிழில் அதே பெயரில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.
நந்தினி வழங்கும் லக்ஷ்மி ஜோதி கிரியேஷன்ஸ் சார்பில் A.M.பாலாஜி தயாரிக்கும் இந்த படம் இம்மாதம் 7ம் திகதி 200 திரையரங்குகளில் வெளியாகிறது.
ஒரு டப்பிங் படம் 200 திரையரங்குகளில் வெளிவருவது படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக