கௌதம் மேனன் இயக்கத்தில் துப்பறியும் ஆனந்த் என்ற தலைப்பில் சூர்யா நடிக்க உள்ள படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் பட நிறுவனம் தயாரிக்கிறது. |
அஜித், விஜய் நடிப்பில் வெளியான ஏகன், வில்லு போன்ற பெரிய நடிகர்களின் படத்தை
தயாரித்த ஐங்கரன் இண்டர்நேஷனல் சூர்யா படத்தை தயாரித்தது. தற்போது சூர்யா, சிங்கம் 2 படத்தில் ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதற்கு பின்னர் லிங்குசாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இவ்விரண்டு படங்களை முடித்த பின்னரே கௌதம் இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது. ஏற்கனவே காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. தற்சமயம் ஐங்கரன் தயாரிப்பில் சூர்யா முதன் முறையாகவே நடிக்கிறார். |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக