செவ்வாய், 4 டிசம்பர், 2012

பாக்யராஜ் இயக்கத்தில் கார்த்தி

கொலிவுட்டில் வரிசையாக 9 சில்வர் ஜூப்ளி படம் தந்த ஒரே இயக்குநர் என்ற பெருமைக்குரிய கே.பாக்யராஜ், கார்த்தியை வைத்து இயக்க உள்ளார்.
தமிழ் சினிமாவில் பாக்யராஜின் 80 சதவீத படங்கள் பெரும் வசூல் சாதனை புரிந்தவை.
சுவரில்லாத சித்திரங்கள் தொடங்கி மவுன கீதங்கள், அந்த ஏழு நாட்கள், ஒரு கை ஓசை, இன்று போய் நாளை வா, தூறல் நின்னு போச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு, தாவணிக் கனவுகள், இது நம்ம ஆளு, வீட்ல விசேஷங்க... இப்படி ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்தார்.
வேட்டி மடிச்சுக்கட்டு படம் அவருக்கு பெரும் சறுக்கலாக அமைந்தது.
அந்தப் படத்துக்குப் பின்னர், பாக்யராஜ் படங்கள் இயக்குவதையும் குறைத்துக் கொண்டார்.
இன்னொரு பக்கம் தனது அரசியல் நிலைப்பாடு, சொந்தக் கட்சி காரணமாக பொருளாதார ரீதியாக பல சிரமங்களையும் அனுபவித்தார்.
இவற்றிலிருந்து ஒரு கட்டத்தில் மெல்ல மீண்டு வந்த பாக்யராஜ், சொக்கத் தங்கம் படத்தில் விஜயகாந்தை வைத்து இயக்கினார். விஜயகாந்துக்கு சிறந்த படமாக அமைந்தது.
இந்தப் படத்துக்குப் பின்னர், அவரது மகள் சரண்யாவை வைத்து பாக்யராஜ் இயக்கிய பாரிஜாதம் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் வசூலைத் தந்தது.
அடுத்து தன் மகன் சாந்தனுவை நாயகனாக வைத்து சித்து ப்ளஸ் டூ படத்தை இயக்கினார். பாக்யராஜ் இயக்கிய படங்களிலேயே மோசமான படம் என்ற பெயரை சித்து ப்ளஸ் டூ பெற்றது. இதற்கு முக்கிய காரணம் அவர் மகன் சாந்தனுதான் என்று கூறப்படுகிறது.
மகள், மகன் என பாசத்தில் கட்டுண்டு தன்னுடைய மார்க்கெட்டை இழந்துவிட்ட பாக்யராஜ், இப்போது அதிலிருந்து விடுபட்டு தன் பாணியில் ஒரு முழு நீள கொமெடிப் படத்தைத் தரவிருக்கிறார்.
இந்தப் படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக