ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடு தங்களது நாட்டு விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு திட்டத்தை நடத்தி வருகிறது. |
அவர்களின் விமான டிக்கெட் எண்ணை வைத்து இந்த குலுக்கல் நடத்தப்படுகிறது. பிரபல நடிகை நவ்யா நாயர் கொச்சியில் இருந்து மும்பைக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டு விமானத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் பயணம் செய்தார். ஒக்டோபர் மாதம் பயணம் செய்த பயணிகளின் டிக்கெட்டுகளுக்கு நடத்தப்பட்ட அதிர்ஷ்ட குலுக்கலில் நவ்யா நாயருக்கு டொயோட்டா கார் பரிசாக கிடைத்தது. இந்த காருக்கான சாவியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் செலாவணி தலைமை அதிகாரி ஜார்ஜ் அந்தோணி கொச்சியில் நேற்று நடந்த விழாவில் வழங்கினார். நவ்யா நாயர் தவிர மேலும் 100 விமான பயணிகளுக்கு தங்கக் காசுகள், எல்.சி.டி.க்கள் போன்ற பல்வேறு பரிசுகளையும் அந்த விமான நிறுவனம் வழங்கி ஆச்சரியப்படுத்தியது. |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக