முனி படத்தின் வெற்றிக்கு பின்னர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா என்ற பெயரில் முனி-2 வை இயக்கினார். |
தற்போது முனி-3ம் பாகத்திற்கு கங்கா என பெயரிட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது. முந்தின இரண்டு பாகங்களில் வேதிகா, லட்சுமி ராய் நாயகிகளாக நடித்திருந்தனர். இப்படத்தில் டாப்ஸி நடிக்கிறார். இது தவிர மற்றொரு முக்கிய கதாப்பாத்திரத்திற்கான தெரிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஏனெனில் முந்தின இரண்டு பாகங்களில் ராஜ்கிரண், சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் சூப்பர் ரஜினிகாந்தின் ரசிகர், அதோடு சூப்பர் ஸ்டாரின் வழியில் ராகவேந்திரரின் பக்தரும் ஆவார். இவர் ராகவேந்திரருக்காக தனிக் கோயில் ஒன்றையும் கட்டி நிர்வகித்து வருகிறார். இவரைப் பற்றிய இன்னொரு செய்தி, ரஜினியின் பிறந்த நாளுக்கு ரஜினி பற்றிய சிறப்புப் பாடல் ஆல்பம் ஒன்றையும் வெளியிடத் திட்டமிட்டு உள்ளாராம் |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக