திங்கள், 3 டிசம்பர், 2012

சினிமாவை விட்டு ஒதுங்க இருந்தாராம் த்ரிஷா

மௌனம் பேசியதே படத்தோடு சினிமாவை விட்டும் த்ரிஷா ஓட இருந்ததாக கூறப்படுகிறது.
மொடலிங் துறையிலிருந்து சினிமா துறைக்கு வந்தவர் நடிகை த்ரிஷா.
மிஸ் சென்னையாக பட்டம் பெற்ற பின்னர், சினிமா ஆர்வம் வந்திருக்கிறது. அதற்கேற்றாற்போல் பட வாய்ப்பும் கிடைத்தது.
தொடக்கத்தில் த்ரிஷா அம்மா உமா, சினிமா வேண்டாம் என்றே கூறியிருக்கிறார். இருப்பினும் 3 படங்களில் மட்டுமே நடிக்கிறேன். பின்னர் சரியாக வரவில்லையென்றால் ஒதுங்கிவிடலாம் என கூறியிருக்கிறார் த்ரிஷா.
இதன்படியே லேசா லேசா, மௌனம் பேசியதே படம் சொல்லிக்கொள்ளும் படியான வரவேற்பை பெறாததையடுத்து சினிமாவை விட்டு ஒதுங்க நினைத்த த்ரிஷாவுக்கு ஹரி இயக்கத்தில் சாமி வாய்ப்பு கிடைத்தது.
இதன் மூலம் தனது ஆட்டத்தை தொடங்கிய த்ரிஷா, தற்சமயம் வரை முன்னணி நாயகர்களுடன் நடித்துக்கொண்டிருக்கிறார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக