சனி, 8 டிசம்பர், 2012

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் காவியத்தலைவன்

  வசந்தபாலனின் புதிய படத்தில் சித்தார்த்தான் அடுத்து உருவாக்கும் காவியத் தலைவன் படத்துக்காக ஏஆர் ரஹ்மானுடன் கைகோர்க்கிறார் இயக்குநர் வசந்தபாலன்.
இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் சித்தார்த்.
அரவான் படத்துக்குப் பிறகு, தனது அடுத்த படம் குறித்து கிட்டத்தட்ட ஏழெட்டு மாதங்கள் அமைதி காத்து வந்தார் வசந்தபாலன்.
கதை உருவாக்கம் முடிந்து காவியத் தலைவன் என படத்துக்குப் பெயரும் சூட்டிவிட்டார். அடுத்து நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கூட்டணியை உருவாக்கி வருகிறார்.
முதல் முறையாக இந்தப் படத்தில் ஏஆர் ரஹ்மானுடன் இணைகிறார் வசந்த பாலன். ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.
ஹீரோவாக சித்தார்த் நடிக்கிறார்.
காவியத் தலைவன் என்ற பெயரில் ஏற்கெனவே கேஎஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், விஜயகாந்த் ஒரு படம் நடித்துள்ளார். இப்போது அதே தலைப்பை தனது படத்துக்குப் பயன்படுத்துகிறார் வசந்தபாலன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக