விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.சில் வெளியிடுவதால் நெருக்கடி நிலைக்கு தான் தள்ளப்பட்டுள்ளதை மறைமுகமாக கமல் கூறினார். |
விஸ்வரூபம் படம் டி.டி.எச்.சில் ஒளிபரப்புவதற்கான அறிவிப்புக் கூட்டம் நேற்று
சென்னை ஜி.ஆர்.டி ஓட்டலில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய கமல், விஸ்வரூபம் படம் டி.டி.எச்.சில் ஜனவரி 10ம் திகதி இரவு 9.30 மணிக்கு இந்தியா முழுவதும் வெளியிடப்படுகிறது. இதை பார்ப்பதற்கு ரூ.1000 முன்பணமாக செலுத்த வேண்டும். டி.டி.எச்.சில் ஒருமுறை மட்டும் ஒளிபரப்பப்படும். இதை பதிவிறக்கம் செய்யமுடியாது. சன் டைரக்ட், ஏர்டெல், டிஷ் டிவி, வீடியோகான், ரிலையன்ஸ் ஆகிய டி.டி.எச்.களில் ஒளிபரப்பப்படுகிறது. விளம்பர இடைவெளி இன்றி ஒளிபரப்பப்படுகின்றது. இப்படம் 11ம் திகதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. யாருக்கும் எந்த நட்டமும் ஏற்படக்கூடாது என்ற காரணத்தினாலேயே என்னுடைய சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிடுகிறது. தாங்கள் சம்பாதித்த அனைத்து பணத்தையும் சினிமாவிலேயே முதலீடு செய்திருப்பதாகவும், அதனால் தாங்கள் தற்போது கஷ்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, நான் வறுமையில் இருப்பதாக ஒருபோதும் கூறியதில்லை. வறுமையில் இருக்கும் நான் எப்படி ஆடி காரில் வரமுடியும். நெருக்கடி என்பது எல்லோருக்கும் வரும், டாட்டா பிர்லாவுக்குக்கூட வரும் என்று கூறினார். |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக