வியாழன், 13 டிசம்பர், 2012

கமல் நினைத்திருந்தால் என்னை சினிமாவில் இருந்தே துரத்தியிருக்கலாம்:?

தனது 63வது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடிய ரஜினிகாந்த், தனது நண்பரும் நடிகருமான கமல்ஹாசன் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவருமே சம காலகட்டத்தில் சினிமாவில் பிரபலமடைந்தவர்கள்.
ஆனால் என்னை விட கமல் தான் சீனியர் என்று தெரிவித்தார் ரஜினி.
அவர் மேலும் கூறுகையில், நான் சினிமாவுக்கு வரும் போது கமல் பெரிய நடிகர். அவர் நினைத்திருந்தால் என்னை சினிமாவை விட்டே துரத்தி இருக்கலாம்.
ஆனால் நான் வளர்வதற்கு பல விதங்களில் உதவி செய்தார். தொடக்க காலங்களில் இருவரும் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தோம்.
தனியாக நடித்தால் தான் சினிமாவில் சிறப்பான எதிர்காலம் கிடைக்கும் என்று உபதேசம் செய்தார். அதிலிருந்து தான் தனியாக நடிக்க ஆரம்பித்தேன்.
அவரைப் பார்த்து வளர்ந்ததால் தான் இன்று இந்த நிலைமையில் இருக்கிறேன் என்றார்.
ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், “நண்பர் சிவாஜி - தி பாஸ் 3டி” அவர்களுக்கு விஸ்வரூபம் குழுவினரின் வாழ்த்துகள்.
இன்று போல் என்றும் நலமுடன் வாழ்க என்று கமல் வாழ்த்து செய்தி வெளியிட்டிருந்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக