வெள்ளி, 14 டிசம்பர், 2012

ஈகோவால் படம் பாதிப்பு : டெக்னீஷியன்கள் மீது தயாரிப்பாளர் புகா

 
தொழில்நுட்ப கலைஞர்கள் ஈகோவால் கோழி கூவுது படம் சரியாக எடுக்கவில்லை. அவர்களை படத்திலிருந்து நீக்கினேன் என்றார் தயாரிப்பாளர். அசோக், சிஜா ரோஸ் நடிக்கும் படம் “கோழி கூவுது. நாகராஜ் என்பவர் தயாரித்தார். அவரால் படத்தை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து லண்டன் ஜாவீத் என்பவர் பொறுப்பு ஏற்றார்.
அவர் கூறும்போது, “எனது நண்பர் ஒருவரை பார்க்கச் சென்றபோது கோழி கூவுது பட தயாரிப்பாளர் நாகராஜ் அருகில் இருந்தார். அவரை என்னிடம் அறிமுகம் செய்துவைத்த நண்பர், இவர் தயாரித்துள்ள படத்தை நீங்கள் ஒருமுறை பாருங்கள் என்றார். சினிமா எனக்கு வேண்டாம். அதில் எனக்கு ஆர்வமில்லை என்றேன்.
இவருக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டால் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் இருக்கிறார். பணத்தையெல்லாம் பட தயாரிப்பில் போட்டு இந்த நிலைக்கு ஆளாகிவிட்டார் என்றார். பிறகு அப்படத்தை பார்த்தேன். அதில் குறைபாடுகள் தெரிந்தது. பட தொழில்நுட்ப குழுவினரிடையேயான ஈகோவால் படம் சரியாக இல்லை என்பதை புரிந்துகொண்டு அவர்களை அழைத்து பேசினேன்.
அவர்கள் ஈகோவை போக்கினேன். படத்தின் எடிட்டர் உள்ளிட்ட சிலர் தங்கள் பணியை செய்யாததால் அவர்களை நீக்கினேன். மேலும் சில காட்சிகளை நீக்கினோம். இப்போது படம் புதியவடிவம் பெற்றிருக்கிறது. இயக்குனர் கே.ஐ.ரஞ்சித். இசை. ராம்ராஜ். இவ்வாறு அவர் கூறினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக