செவ்வாய், 11 டிசம்பர், 2012

உலகிலேயே ஒரே ஒரு மனிதனால் மட்டும் உருவான ஒன்?

வெங்காயம் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் சங்ககிரி ராசகுமார். இவர் இப்போது உலக சாதனைக்காக ஒரு படம் இயக்கி உள்ளார். படத்தின் பெயர் ஒன். ஆங்கிலத்தில் உருவாக்கி இருக்கும் இந்தப் படத்தின் தயாரிப்பு, இயக்கம் முதல் லைட்பாய் வரை அத்தனை வேலைகளையும் இவரே செய்திருக்கிறார்.
நான்கு வேடங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் எப்படி எடுத்தார் என்பதை தனியாக மேக்கிங் ஆப் ஒன் என்ற பெயரில் எடுத்து வைத்திருக்கிறார். மர்ம காட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் நான்குபேர் சந்திக்கும் வித்தியாசமான அனுபவங்கள்தான் கதை. இந்தப் படத்தை உருவாக்க இவருக்கு 9 வருடங்கள் ஆகியிருக்கிறது. ஒன்றே முக்கால் மணி நேரம் ஓடும் இந்தப் படத்தின் அறிமுக விழா விரைவில் அமெரிக்காவில் நடக்க இருக்கிறது.
உலகிலேயே தனி மனிதன் உருவாக்கியுள்ள முதல் படம் இது. இதுபற்றி ராசகுமார் கூறும்போது "இது அதிகபிரசிங்கத்தனமான வேலையோ, எனக்கு எல்லாம் தெரியும் என்று காட்டிக் கொள்வதற்காகவோ எடுக்கப்படவில்லை. தமிழனால் எதுவும் செய்ய முடியும் என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக