அவன்இவன் படத்தையடுத்து பாலா இயக்கியுள்ள படம் பரதேசி. அதர்வா, வேதிகா, தன்சிகா ஆகியோர் நடித்துள்ள இப்படத்தில் பஞ்சம் பிழைக்க தேயிலை தோட்டத்துக்கு வேலை செய்யச் செல்லும் ஒரு கூட்டம் சந்திக்கும் பிரச்சினைகளையும், கொடுமைகளையும் படமாக்கியிருக்கிறார் அவர். மேலும், இந்த படத்தை தானே தயாரித்துள்ள பாலா, குறுகிய காலத்தில் படத்து முடித்து ரிலீசுக்கும் தயாராகி விட்டார். ஆனால் அதில்தான் ஒரு புது சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
அதாவது, இந்த படத்தில் பஞ்சம் பிழைக்க செல்பவர்களை, மதம் மாற்றம் செய்வது போன்ற விவகாரங்களை தழுவியும் கதையோட்டம் செல்கிறதாம். குறிப்பாக கிறிஸ்தவ மதத்துக்கு எப்படி மக்களை மாற்றுகிறார்கள் என்பதை கதையாக்கியிருக்கிறார்களாம். அதனால் இது தெரியாமல் படத்தை வாங்க வந்த விநியோகஸ்தர்கள், இது பிரச்சினைக்குரிய படம் என்று இப்போது விலகி விட்டார்களாம். அதனால் படத்தை தானே வெளியிடும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் பாலா. ஆனால் இந்த படம் வெளியாகும்போது பெரிய சர்ச்சைகளை எதிர்கொள்ளும் என்று திரையுலகில் அரசல்புரசலாக பேசிக்கொள்கிறார்கள்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக