சென்னையில் 10வது சர்வதேச திரைப்பட விழா வருகிற 13ம் திகதி முதல் 20ம் திகதி வரை நடைபெற உள்ளது. |
இதில் 57 நாடுகளைச் சேர்ந்த 160 படங்கள் திரையிடப்படுகிறது. உட்லன்ஸ், ஐநாக்ஸ்,
சத்யம், ராணி சீதை ஹால் மற்றும் காசினோ திரையரங்குகளில் படங்கள்
திரையிடப்படுகிறது. இதில் ஒஸ்கார் மற்றும் கேன்ஸ் விருதுகள் பெற்ற பல படங்கள் திரையிடப்படுகிறது. இந்த ஆண்டின் புதுமையாக கொலம்பியா, அவுஸ்திரேலியா, ஹங்கேரி மற்றும் துருக்கி நாட்டு திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. அதோடு இந்திய சினிமாவின் நூற்றாண்டை குறிக்கும் வகையில் சந்திரலேகா (தமிழ்), மேக சந்தேஷம்(தெலுங்கு), பதேர் பாஞ்சாலி(பெங்காலி), கைடு(இந்தி), வீப்பா(கன்னடம்), வதுகார அல்லது தம்பு(மலையாளம்) ஆகிய படங்கள் திரையிடப்படுகிறது. 13ம் திகதி நடைபெறும் தொடக்கவிழா ஏ.ஆர்.ரகுமான் இசை பள்ளி மாணவர்களின் இசை நிகழ்ச்சியோடு தொடங்குகிறது. இதில் சர்வதேச திரைப்பட கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். 30ம் திகதியன்று நடைபெறும் நிறைவு விழாவில் பாலிவுட் நட்சத்திரம் அமிதாப்பச்சன் கலந்து கொள்கிறார். படவிழாவுக்கான அறிமுக நிகழ்ச்சியில் இன்டோ சினி அப்ரியேஷன் தலைவர் எஸ்.கண்ணன், பொதுச் செயலாளர் தங்கராஜ், படவிழா தலைவர் சுஹாசினி, துணை தலைவர் ராமகிருஷ்ணன், நடிகர் மோகன், ரோகினி உட்பட பலர் கலந்து கொண்டனர் |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக