திங்கள், 31 டிசம்பர், 2012

அருண்விஜய்யுடன் இணையும் கோ கார்த்திகா

எம். சுசில்மோகன் மற்றும் எம்.ஹேமந்த் தயாரிக்கும் "டீல்" இப்படத்தில் அருண்விஜய், கார்த்திகா இணைந்து நடிக்கின்றனர்.
இவர்களுடன் சுஜவாருணி, 'மெரினா' சதீஷ், dance மாஸ்டர் கல்யாண், வம்சி, ஜெயபிரகாஷ், ரேணுகா பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தை புதுமுக இயக்குனர் ஆர்.சிவஞானம் இயக்குகிறார்.
முதல் 18 நாட்களில் எடுத்த சீன்களை எடிட்செய்து பார்த்த தயாரிப்பாளர் ஹேமந்த், அவருடைய காரை இயக்குனர் சிவஞானத்திற்கு புத்தாண்டு பரிசாக கொடுத்துள்ளார்.
எதிர்பாராத இந்த பரிசால் பட இயக்குனர் வாய் அடைத்து, மெய் சிலிர்த்து நின்றார்.
பரபரப்பாக நடந்துக்கொண்டிருக்கும் படப்பிடிப்பு இதுவரை 60 சதவிதம் முடிந்துள்ளது என்கிறது 'டீல்' படக்குழு

2013ல் சைந்தவியுடன் திருமணம்

பாடகி சைந்தவியை 2013-ம் ஆண்டுதான் மணமுடிக்கப் போவதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.
 
வெயில் படத்தில் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்.
இவரும் பின்னணிப் பாடகி சைந்தவியும் நீணட நாட்களாக காதலித்து வந்தனர்.
இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக கடந்த ஆண்டே அறிவித்தனர்.
ஆனால் 2012ல் இருவரின் திருமணமும் நடக்கவில்லை.
இந்த நிலையில், 2013ம் வருடத்தில் சைந்தியை திருமணம் செய்துக்கொள்ளப் போவதாக ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார்.
சைந்தவியும் பிரகாஷும் இணைந்து பல பாடல்களைப் பாடியுள்ளனர்.
இவரது இசையில் பாரதிராஜாவின் ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்', விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படம், ஜெய், ஆர்யா, நயன்தாரா நடிக்கும் ‘ராஜா ராணி', பாலாவின் பரதேசி ஆகிய படங்கள் வரும் 2013-ம் ஆண்டு வெளியாக உள்ளன.

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

சட்டம் ஒரு இருட்டறை. திரை விமர்சனம்

திரைப்படங்களை ரீமேக் செய்வதை நிறுத்திக் கொள்ளும்படி கனம் தமிழ்த் திரைப்படத் துறையினரை நோக்கி ரசிகர்கள் கையெடுத்துக் கும்பிட்டு கேட்டுக் கொள்ள இப்படம் பெரிதும் உதவியிருக்கிறது என்றே நினைக்கிறேன்..!

1981-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் நாள் வெளியான ஒரிஜினல் சட்டம் ஒரு இருட்டறை அப்போதைக்கு சூப்பர் டூப்பர் ஹிட்.. அது அந்தக் காலத்தில் மக்களின் ரசனைக்கு நிறையவே தீனி போட்டிருந்தது..! கூடவே பரமசிவனின் நெற்றிக்கண்ணைத் திறந்தாற்போல் காட்சிக்கு காட்சி தனது சிவப்பு விழிகளை உருட்டி, உருட்டி ரசிகர்களை பெருமளவுக்கு கவர்ந்திருந்த கேப்டனும் இந்த வெற்றிக்கு ஒரு காரணம்..!

எஸ்.ஏ.சி. தனது பேத்திக்கு ஒரு நல்ல துவக்கத்தைக் கொடுக்க நினைத்தது தவறில்லை. ஆனால் அதற்காக இப்படத்தையே தூக்கிக் கொடுத்து பழைய படத்தை நினைத்து பெருமூச்சுவிட வைத்ததுதான் தவறு..! புதுமுக நடிகரோ, பேர் இல்லாத நடிகைகளோ நடிக்கிறார்கள் என்றால் அதில் கதை அல்லது இயக்கம் இரண்டில் ஏதாவது ஒன்றாவது உருப்படியாய் இருந்தால்தான் மக்களிடம் அது பேசப்படும். இரண்டுமே அசத்தல் என்றால் வழக்கு எண் படம் போல சூப்பர்தான்..! இது இரண்டுமே இல்லாமல் வெறுமனே பழைய பெருமையை நினைத்து வேட்டியில் மஞ்சள் தடவிய கதையாகத்தான் இந்தப் படம் முடிந்திருக்கிறது..!

தமிழில் விஜயகாந்த்.. மலையாளத்தில் கமல்ஹாசன், தெலுங்கில் சிரஞ்சீவி, கன்னடத்தில் சங்கர்நாக், ஹிந்தியில் அமிதாப்-ரஜினிகாந்த் என்று ரீமேக் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் ஹிட்டடித்த இந்தப் படத்தின் கதி என்ன என்பது அடுத்த வாரத்தில் தெரிந்துவிடும்..!
தனது காதலியை கொன்றவர்கள் சட்டத்தின் ஓட்டைகளால் தப்பித்துவிட்ட கோபத்தில் ஹீரோ தானே அவதாரமெடுத்து அவர்களை அழிக்கிறார். ஹீரோவின் அக்கா போலீஸ் துணை கமிஷனராக இருந்தும், தனது தம்பிதான் இந்தக் கொலைகளை செய்திருக்கிறார் என்று தெரிந்தும் ஆதாரங்கள் இல்லாததால் தம்பியை கைது செய்ய முடியாமல் தவிக்கிறார். 2 கொலைகளைச் செய்துவிட்டு, அதை ஒப்புக் கொண்டுவிட்டு.. பின்பு கடைசி ஆளையும் தான் கொலை செய்வேன் என்று அக்காவிடம் சபதமிடுகிறார் ஹீரோவான தம்பி. அக்காவும் அந்த சவாலை ஏற்றுக் கொள்ள.. என்னாச்சு என்பதை பழைய சட்டம் ஒரு இருட்டறை படத்தைப் பார்த்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்..!
விஜயகாந்த் வேடத்தில் புதுமுகம் தமன். பழைய படத்தைப் பார்க்காதவர்களுக்கு புதுமுக ஹீரோவாகத் தெரியும். இவர் ஏற்கெனவே ஆச்சரியங்கள் படத்திலும் ஹீரோவாக நடித்திருக்கிறார். இன்னும் 4, 5 படங்களில் நடித்த பின்பு இவரது நடிப்பு பற்றி நாம் பேசுவோம்..! ஹாங்காங்கில் பியாவுடனான காதல் காட்சிகளில் மட்டும் திரைக்கதையினால் கொஞ்சம் சுவாரசியப்படுத்துகிறார். அவ்வளவே..!
ஹீரோயின்கள் பியா அண்ட் பிந்து மாதவி.. இருவருக்குமே ஸ்பெஷலாட்டி கண்கள்தான். முடிந்தவரையிலும் அதனையே எக்ஸ்போஸ் செய்து பாடல் காட்சிகளையும், காதல் காட்சிகளையும் நகர்த்தியிருக்கிறார்கள். பியாவுக்கு இருந்த நடிப்பு ஸ்கோப்கூட பிந்துவுக்கு இல்லாததால், கொஞ்ச நேரமே வந்தாலும் பியாவே மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறார்..!
இறுதிக் காட்சியில் தலை காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் எஸ்.ஏ.சி. இதிலும் அப்படியே..! ஹீரோவுக்கு உதவும் ஜெயிலராக வந்து சட்டத்தை கிழி கிழியென்று கிழித்து எறிகிறார். ஆனால் தியேட்டரில் கைதட்டல் கிடைக்குமா என்றுதான் தெரியவில்லை. சட்டத்திற்கும் சாமான்யனுக்கும் இடையில் இருக்கின்ற இடைவெளிதான் இந்தப் படத்தின் கரு. அதனை மையப்படுத்தி வசனத்தை வைக்காமல், சென்சார் போர்டை கூல் செய்ய வேண்டி வசனத்திலும் சமரசம் செய்திருக்க முயன்றிருப்பதால் அதுவும் மனதில் நிற்கவில்லை..!
துணை கமிஷனர் கெளசல்யாவாக ரீமாசென். காக்கி சட்டையை போட்டாலே வந்துவிடும் ஒரு மிடுக்கும், தோரணையும் இங்கே மிஸ்ஸிங்.. பாடல் காட்சிகளில் அணிவதுபோலவே காக்கி பேண்ட்கூட சற்று இறக்கமாகத்தான் இருந்தது..! விஜயசாந்தி, ராதிகாவைத் தவிர வேறு யாருக்கும் போலீஸ் பாடி லாங்குவேஜ் வரவே வராது..! படத்துக்குப் படம் வித்தியாசமாக எதையாவது செய்து தனித்திறமையை காட்டினால் மட்டுமே நீடித்து நிலைக்க முடியும்.. அம்மணி இப்போது “உண்டாகி”யிருப்பதால் இதுதான் இப்போதைக்கு கடைசி படமென்றும் சொல்லலாம்.. ஆகவே ஓகே மேடம் என்று விட்டுவிடுவோம்..!
1981-ல் இருந்த ரசிகர்களின் மனநிலையும், அறிவும் அன்று போலவே இப்போதும் இருக்கும் என்று நினைத்திருக்கும் எஸ்.ஏ.சி மற்றும் இயக்குநருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..! சுரேஷ் நடுரோட்டில் ஆக்ஸிடெண்ட்டில் இறக்கும்போது, ஓடி வரும் இன்ஸ்பெக்டர் முன்பு ஜெயிலராகவும் இருந்தவராம்..! இது எந்த நாட்டு சட்டம் என்று தெரியவில்லை.. சர்வசாதாரணமாக ஒரு துணை கமிஷனர் ஜெயிலுக்குள் நுழைந்து “செல்”வரைக்கும் போய் பார்த்து வருவதெல்லாம் முடிகிற காரியமா..? அத்தோடு அவர் ஜெயிலரா..? இன்ஸ்பெக்டரா..? எப்படி வந்தார் என்பதையெல்லாம் கொஞ்சமாவது யோசித்து வைத்திருக்க வேண்டாமா..? அதோடு 2 நாளுக்காக ஹீரோவை ஜெயிலில் வைக்கிறார் துணை கமிஷனர்.. இதையும் புதிய ஜெயிலர் ஏற்றுக் கொள்கிறார். பின்பு ஜெயிலரே போலீஸ் கமிஷனரிடம் விளக்கமளிக்க நேரில் வருகிறாராம்..! ஒரு அமைப்பின் செயல்பாடுகளைச் சொல்லும்போது அதில் கொஞ்சமாவது உண்மைத்தன்மை வேண்டாமா..? லாஜிக் பார்க்காமல் செல்வதற்கு இதுவொன்றும் நகைச்சுவை, கமர்ஷியல் படமில்லையே..? இறுதியில் பழைய ஜெயிலரையே செல்போன் மூலமா கமிஷனர் முன்பாக அவரது அறையிலேயே கொலை செய்கிறார் ஹீரோ.. நம்பத்தான் முடியலை..!

ஒளிப்பதிவாளர் தனது பணியைக் கச்சிதமாகவே செய்திருக்கிறார். பாடல் காட்சிகளிலும், ஹாங்காங் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் அழகுடன் எடுத்திருக்கிறார்கள். ஆனால் இது ஒன்று மட்டும் போதாதே.. படத்தின் வெற்றிக்கு..! அது போலவே இசையும்.. விஜய் ஆண்ட்டனியின் இசையில் 2 பாடல்கள் கேட்கும்படி உள்ளது. 'கும்கி'யில் உள்ளது போலவே இதிலிருக்கும் 'சொய் சொய்' பாடல் முணுமுணுக்கவும் வைக்கிறது..!

இந்திய அளவில் பார்த்தால் இந்தப் படத்தின் பெண் இயக்குநரான சினேகா பிரிட்டோதான் 34-வது இயக்குநர். புதுமுக இயக்குநர் என்பதால் உணர்ச்சிபூர்வமான காட்சிகள் வராமைக்கு அவரை மட்டுமே குற்றம் சொல்ல முடியவில்லை. இயன்றவரைக்கும் எடுத்திருக்கிறார். தமன்-பியா காதல் காட்சிகள்.. “நத்திங்” என்று இருவரும் ஒருவரையொருவர் காலை வாரும் காட்சிகள் மட்டுமே ரசிக்க வைக்கிறது.. தமனின் நண்பர்கள் கமிஷனர் அறையில் பேசும் பேச்சுக்களெல்லாம் ஓவர்.. இனி அடுத்தடுத்த வாய்ப்புகளில் இவரது இயக்கத் திறமை நம்மைக் கவர்வது போல இருக்கட்டும்..!

விஜயகாந்தின் அந்த அனல் தெறித்த நடிப்பும், வெறியூட்டிய சண்டைக் காட்சிகளும், மனதைக் குடைந்த அரசியல் வசனங்களும் இல்லாமல்.. ஏதோ காதலுக்காக நடந்த ஒரு சின்ன சண்டையை போல இந்தப் படம் முடிவடைந்திருப்பதுதான் ஏமாற்றத்திற்குக் காரணம்..! இப்படத்தின் மூலம் கிடைத்த லாபம் ‘கும்கி’ படத்திற்குக் கூடுதலாக தியேட்டர்களும், ரசிகர்களும், வசூலும் கிடைக்கப் போகிறது.. கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான்..!

ஏ.ஆர்.ரஹ்மானின் பிரமாண்ட இசைநிகழ்ச்சி "தாய் மண்ணே வணக்கம்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி கல்லூரி மைதானத்தில் இசை நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் ‘தாய் மண்ணே வணக்கம்’ என்ற பிரமாண்ட இசைநிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்திய வரலாற்றில் இசைக்கான ஆஸ்கர் விருது பெற்ற பின் ஏ.ஆர்.ரஹ்மான் ஜெயா தொலைக்காட்சிக்காக நடத்தும் முதல் நிகழ்ச்சி என்பதால், அவரது இசையை ரசிக்க பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர்.

உலகத் தரத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒளி மற்றும் ஒலி அமைப்போடு நடந்த இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது கம்பீரக் குரலில் பாடல்கள் பாடி அசத்தினார். அப்போது ரசிகர்கள் உற்சாக மிகுதியில் எழுந்து ஆட்டம் போட்டனர். பெண் இசைக் கலைஞர்கள் உட்பட பல வெளிநாட்டு இசை வல்லுனர்கள் இசைக்கருவிகளை இயக்கியது நிகழ்ச்சிக்கு கூடுதல் மெருகேற்றியது.

இந்த நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை மூலம் வரும் வருவாயில் 10 விழுக்காட்டினை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க ஜெயா தொலைக்காட்சி குழுமம் திட்டமிட்டுள்ளது

சமந்தாவின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய பெற்றோர்கள்

நீதானே என் பொன் வசந்தம் படத்தில் நடித்து முடித்த நேரத்தில், உங்களுக்கு காதல் அனுபவம் உள்ளதா? என்று சமந்தாவை நோக்கி கேள்விக்கனைகள் பாய்ந்தபோது, இப்போது இல்லை. ஆனால் படிக்கிற காலத்தில் இருந்தது. பலர் என்னிடம் காதலை வெளிப்படுத்தினர். அதில் ஒருவர் எனக்குப்பிடித்து விட நானும் காதலித்தேன். ஆனால் சில ஆண்டுகளிலேயே அந்த காதல் மாயமாகி விட்டது. அதன்பிறகு நடிக்க வந்தபோது அதை மறந்தே விட்டேன் என்றார்.

ஆனால் நிஜத்தில் சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு காதலர் சமந்தாவுக்கு இருப்பதாக ஆந்திராவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகுதான் அந்த காதலரை சந்தித்தாராம் சமந்தா. இப்போதுகூட இருவரும் அடிக்கடி சந்தித்து மனம் விட்டு பேசுவது தொடர்கிறதாம். ஆனால் சினிமா வட்டாரங்களுக்கு அந்த காதலரை அனுமதிப்பதில்லையாம் அவர். இந்த காதல் சமாச்சாரம் சமந்தாவின் பெற்றோருக்கும் தெரியுமாம். அவர்களும் மகளின் காதலை தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறார்களாம்.

சனி, 29 டிசம்பர், 2012

நெருக்கடியில் உலக நாயகன் கமல்

விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.சில் வெளியிடுவதால் நெருக்கடி நிலைக்கு தான் தள்ளப்பட்டுள்ளதை மறைமுகமாக கமல் கூறினார்.
விஸ்வரூபம் படம் டி.டி.எச்.சில் ஒளிபரப்புவதற்கான அறிவிப்புக் கூட்டம் நேற்று சென்னை ஜி.ஆர்.டி ஓட்டலில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய கமல், விஸ்வரூபம் படம் டி.டி.எச்.சில் ஜனவரி 10ம் திகதி இரவு 9.30 மணிக்கு இந்தியா முழுவதும் வெளியிடப்படுகிறது.
இதை பார்ப்பதற்கு ரூ.1000 முன்பணமாக செலுத்த வேண்டும். டி.டி.எச்.சில் ஒருமுறை மட்டும் ஒளிபரப்பப்படும். இதை பதிவிறக்கம் செய்யமுடியாது.
சன் டைரக்ட், ஏர்டெல், டிஷ் டிவி, வீடியோகான், ரிலையன்ஸ் ஆகிய டி.டி.எச்.களில் ஒளிபரப்பப்படுகிறது.
விளம்பர இடைவெளி இன்றி ஒளிபரப்பப்படுகின்றது. இப்படம் 11ம் திகதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.
யாருக்கும் எந்த நட்டமும் ஏற்படக்கூடாது என்ற காரணத்தினாலேயே என்னுடைய சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிடுகிறது.
தாங்கள் சம்பாதித்த அனைத்து பணத்தையும் சினிமாவிலேயே முதலீடு செய்திருப்பதாகவும், அதனால் தாங்கள் தற்போது கஷ்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, நான் வறுமையில் இருப்பதாக ஒருபோதும் கூறியதில்லை.
வறுமையில் இருக்கும் நான் எப்படி ஆடி காரில் வரமுடியும். நெருக்கடி என்பது எல்லோருக்கும் வரும், டாட்டா பிர்லாவுக்குக்கூட வரும் என்று கூறினார்.

மீண்டும் தமிழில் குட்டி ராதிகா

இயற்கை, வர்ணஜாலம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் குட்டி ராதிகா.
இவர், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை மணந்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
கன்னடத்தில் இவர் நடித்த ஒரு படம் தமிழில் ஆணவக்காரி என்ற பெயரில் வருகிறது.
இப்படத்தில், வட்டிக்கு பணம் கொடுத்து அதை கறாராக வசூலிப்பவராக நடிக்கிறார்.
ராஜேந்திர பாபுவின் இயக்கத்தில், உருவாகும் இப்படத்திற்கு குருகிரண் இசையமைக்கிறார்.

எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்: அனுஷ்கா பெருமிதம்

வரலாற்று புகழ்மிக்க ராணி ருத்ராமாதேவி கதாப்பாத்திரத்தில் நடிப்பது தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று அனுஷ்கா பெருமிதம் கொள்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக திகழும் அனுஷ்காவுக்கு சரித்திர வேடங்கள் கிடைக்கிறது.
இதற்கு முக்கியமான காரணம், அவர் நடித்த அருந்ததி வெற்றி பெற்றதே.
அருந்ததி வெற்றி பெற்ற பின்னர், அனுஷ்கா சரித்திர கதைகளில் நடித்தால் ஹிட்டாகுமென இயக்குனர்கள் பெரும்பாலானோர் நம்புகிறார்கள்.
அந்த வகையில் தான், சரித்திர நாயகி ராணி ருத்ரமாதேவியின் கதாப்பாத்திரம் அடங்கிய படத்தில் ஒப்பந்தமானார் அனுஷ்கா.
இதுகுறித்து அனுஷ்கா, இந்த வேடம் கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுவதாகவும் அளவுக்கதிகமான மகிழ்ச்சியில் தாம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 28 டிசம்பர், 2012

புத்தாண்டு நடன விழாவில் பங்கேற்க விக் வைக்கும் மொட்டை அடித்த நடிகை.

 

கடந்த 2004ம் ஆண்டு இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் தனுஸ்ரீ தத்தா. தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தார். இந்தியிலும் பல படங்களில் நடித்தார். 2 ஆண்டுக்கு முன் நடிப்பிலிருந்து ஒதுங்கி ஆன்மீகத்தில் ஈடுபட்டதுடன் தலையை மொட்டை அடித்துக்கொண்டார்.
தற்போது புத்தாண்டுக்காக துபாயில் நடக்கும் விழாவில் பங்கேற்று நடனம் ஆட ஒப்புக்கொண்டிருக்கிறார். இதற்காக ஸ்பெஷல் விக் ஒன்றையும் அணிய உள்ளார். ஆன்மி கத்தில் மூழ்கிவிட்டதால் இனி திருமணம் செய்துகொள்ள மாட்டீர்களா என்று கேட்டபோது பதில் அளித்தார்.

நடிப்பு பற்றி கேட்கிறார்கள் ஒருபோதும் நடிகையாக இருக்க வேண்டும் என்று வெறியுடன் இருந்ததில்லை. ஒருமுறை யோகா பற்றிய ஆன்மிக புத்தகம் ஒன்றை படித்தேன். எப்போதும் ஆன்மிகத்தில் எனக்கு ஈடுபாடு இருந்தது. ஆனால் அதை தீவிரமாக கடைபிடித்தால் சன்னியாசி ஆகிவிடுவேனோ என்ற பயமும் இருந்தது. பின்னர் லடாக் சென்று புத்த துறவியை சந்தித்தேன். பின்னர் தலையை மொட்டை அடித்துக்கொண்டேன்.
இதையெல்லாம் பார்த்து எனது அம்மா பயந்தார். கல்யாணம் பண்ணிக்கொண்டு ஜாலியாக வாழ வேண்டிய வயதில் நான் சன்னியாசிபோல் ஆகிவிட்டேனே என்று நிலைகுலைந்துவிட்டார்.

சில துறவிகள் மொட்டை அடித்திருப்பதை கண்டு எனக்கும் அந்த எண்ணம் தோன்றியது. மொட்டை அடித்துக்கொண்டு என் முகத்தை கண்ணாடியில் பார்த்தபோது நான் பயந்துவிட்டேன். சில நிமிடங்களுக்கு முன் கிளாமராக இருந்தவள் இப்போது இப்படி இருக்கிறேனே என்று தோன்றியது. பின்னர் தெளிவடைந்தேன். இப்போது சந்தோஷமாக இருக்கிறேன். என்னை கடுமையாக பாதிப்படையச் செய்த கொடுமையானவர்களும், போட்டிபோடுபவர்களும் சுற்றிலும் இருக்கிறார்கள். இப்போது அவர்களைபற்றி எனக்கு கவலை இல்லை. இப்படி சொல்வதால் நான் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பேன் என்று எண்ண வேண்டாம். எனக்கு ஏற்ற ஒருவர் கிடைக்கும்போது திருமணம் செய்துகொள்வேன்

ரஜினி படத்தலைப்பு வேண்டாம். விஜய்யின் பிடிவாதத்தால் விஜய் அதிர்ச்சி.

 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘துப்பாக்கி’ படத்தின் தலைப்பு பெரிய தடங்கல்களை சந்தித்துதான் மீண்டு வந்தது. அதேபோல், விஜய்யை இயக்கும் ஏ.எல்.விஜய்யும் ‘விக்ரமை’ வைத்து இயக்கிய ‘தெய்வத்திருமகள்’, ‘தாண்டவம்’ ஆகிய இரண்டு படங்களுக்கும் தலைப்பு பிரச்சினை வந்தது. ஆக, இரண்டு பேருக்கும் பழைய படங்களின் பெயர்கள் ராசியே இல்லை.

இந்நிலையில், தற்போது இருவரும் இணைந்திருக்கும் புதிய படத்துக்கு முதலில் தலைவன் என்று பெயர் வைக்க முடிவாகியது. ஆனால், இதே பெயரில் வேறு படம் பதிவு செய்து இருப்பதால் அந்த தலைப்பை கைவிட்டனர். அதன்பிறகு, ரஜினி படத் தலைப்பான தங்கமகனை வைக்கலாம் என்று முடிவெடுத்தனர். அதற்கும் எதிர்ப்புகள் கிளம்பவே அதையும் கைவிட்டனர்.

ரஜினியின் மற்ற படத்தின் தலைப்பு எதையாவது வைக்கலாம் என டைரக்டர் விஜய் கூற, அதற்கு நடிகர் விஜய் ஏற்கெனவே வெளியான படங்களின் தலைப்பு வேண்டாம். படத்திற்கு வித்தியாசமான கதையை யோசித்த நீங்களே, அதற்கு பொருத்தமான தலைப்பையும் புதிதாக யோசியுங்கள் என்று கூறிவிட்டாராம். எனவே அதுகுறித்து தீவிர சிந்தனையில் மூழ்கியிருக்கிறாராம் இயக்குனர் ஏ.எல்.விஜய்

பந்தா பண்ணும் நடிகைகளை கேலி செய்து பானு நடிக்கும் புதுமுகங்கள் தேவை.

 

திருப்பூரில் பனியன், ஜட்டி தயாரிக்கும் தொழிற்சாலை வைத்திருக்கும் கோவல் சுவாமிநாதன் தயாரிக்கும் படம் புதுமுகங்கள் தேவை. சிவாஜிதேவ், பானு, ராஜேஷ் யாதவ் நடிக்கிறார்கள். மனீஷ் பாபு இயக்குகிறார். இந்தப் படம் சினிமாவை கிண்டல் செய்து எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் மனீஷ்பாபு அளித்த விளக்கம்.

ஒரு புதுமுக தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள் இணைந்து ஒரு உப்புமா படம் தயாரித்தால் எப்படி இருக்கும் என்பதை காமெடியாகச் சொல்லும் படம். சினிமாவில் உள்ள சில கசப்பான விஷயங்களை காமெடியாகச் சொல்கிறோம். மற்றபடி சினிமாவையே தனிப்பட்ட யாரையுமோ கிண்டல் செய்து எடுக்கவில்லை. இதில் பானு ஒரு நடிகையாகவே வருகிறார். பந்தா பண்ணும் நடிகைகளை அப்படியே பிரதிபலிப்பார். சினிமாவில் மட்டும் காமெடியில்லை. சினிமா தயாரிப்பதும் கமெடிதான். படம் பாருங்கள் அது தெரியும் என்கிறார். மனீஷ் பாபு

வியாழன், 27 டிசம்பர், 2012

கடும் கோபத்தில் சுனைனா

திறமையான நடிகைகளுக்கு கொலிவுட்டில் மதிப்பில்லை என கூறியுள்ளார் சுனைனா.
கொலிவுட்டில் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், நீர்ப்பறவை தான் சுனைனாவுக்கு நல்லதொரு பெயரை வாங்கி கொடுத்தது.
இனிமேல், தனக்கு அதிகளவில் வாய்ப்புகள் வரும் என நினைத்து கொண்டிருந்த சுனைனாவுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
இதுகுறித்து அவர் கூறுகையில், திறமையான நடிகைகளுக்கு கொலிவுட்டில் மரியாதை கிடைக்கும் என்று நினைத்திருந்தேன்.
அதற்கேற்றாற் போல் வாய்ப்பு அமைந்தும், நல்ல நடிகையாக முத்திரை பதித்தும் ஒரு படம் கூட கிடைக்காதது வேதனையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இவர்களை பொறுத்தவரை நடிகைகள் திறமையை வெளிப்படுத்துவதை விட, உடம்பை வெளிப்படுத்தி நடித்தால் தான் மதிப்பார்கள் போல் தெரிகிறது.
அதனால் நானும் கிளாமரான கதாபாத்திரங்களை தெரிவு செய்து, நடித்து பணம் சம்பாதிக்க போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்

தாய்களுக்கு இப்படியும் ஒரு... ?{காணொளி, }

        
 
பிள்ளைகளுக்காக வாழ்க்கையை தூக்கி போடும் தாய்களுக்கு மத்தியில்

புதன், 26 டிசம்பர், 2012

அரைநிர்வாண போஸ் கொடுத்து டெல்லி கற்பழிப்பு சம்பவத்தை


 விளம்பரத்திற்கு பயன்படுத்திய பாலிவுட் நடிகை.
டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்கராம் செய்யப்பட்ட மருத்துவ படிப்பு மாணவிக்கு ஆதரவாக பாலிவுட் நடிகை சூசனா ரெட்டி அரை நிர்வாண போஸ் கொடுத்துள்ளார். இந்த சந்தர்பத்தையுமா பயன்படுத்தி விளம்பரம் தேடுவார்கள் என்று பலர் அவரை விமர்சித்து வருகின்றனர். கடந்த 16ம் தேதி இரவு டெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பல் மருத்துவ படிப்பு படிக்கும் 23 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது. இதை தடுக்க முயன்ற அவரது ஆண் நண்பரை இரும்புக் கம்பியால் தாக்கியது. பின்னர் அந்த பெண்ணையும் இரும்புக் கம்பியால் தாக்கி அவரின் குடலில் ஒரு பகுதியை உருவியது. இதையடுத்து அவர்கள் இருவரின் ஆடைகளை அவிழ்த்துவிட்டு பேருந்தில் இருந்து கீழே வீசிச் சென்றது. இந்த கொடூரச் செயலைக் கண்டித்து டெல்லியில் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். அரசியல்வாதிகள், திரையுலகினர் என்று பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டனர். இந்நிலையில் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி பாலிவுட்டில் அடி எடுத்து வைத்திருக்கும் நடிகை சூசனா ரெட்டி விளம்பரம் தேடியுள்ளார்.
சூசனா கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கேட்டு அரை நிர்வாண போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அந்த மாணவியை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர் இவ்வாறு செய்துள்ளாராம்.
ஒரு பெண்ணின் வாழ்க்கை சீரழிந்துள்ள நேரத்தில் சூசனா ஆடை எதுவும் அணியாமல் கற்பழிக்காதீர்கள் என்று ஆங்கிலத்தில் எழுதிய சிறிய அட்டையை மட்டும் பிடித்துக் கொண்டு முகம் நிறைய மேக்கப்போடு போஸ் கொடுத்துள்ளார். இது தான் அவரைப் பொருத்த வரை அக்கறை போல்.
மேல் அழகை மறைக்க சிறிய அட்டை, கீழே சிறிய அட்டை ஆகியவற்றுடன் கையை ஊன்றிக் கொண்டு உட்கார்ந்தவாறு போஸ் கொடுத்துள்ளார். அந்த அட்டைகளில் மாணவியை சீரழித்தவர்களை தூக்கில் போடுமாறு தெரிவித்துள்ளார். கயவர்களை தண்டிக்கச் சொல்ல இப்படி ஆடையின்றி தம்மாத்துண்டு அட்டையுடன் போஸ் எதற்கு?
கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவு தெரிவிக்க அரை நிர்வாண போட்டோ தான் வழியா?. தனது சுய விளம்பரத்திற்காக ஏற்கனவே நொந்து போயுள்ள பெண்ணின் வழக்கை கையில் எடுப்பதா என்று சூசனா மீது பலரும் கடுப்பில் உள்ளனர். அவர் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து போட்டோ எடுத்து வெளியிட்டால் அந்த மாணவிக்கு நியாயம் கிடைத்துவிடுமா என்ன என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். சூசனா தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சூசனாவின் அரை நிர்வாண போஸ் கொண்ட போட்டோக்களால் டெல்லி மாணவிக்கு ஏதாவது பயனுன்டா? விளம்பரம் தேட எந்த விவகாரத்தை கையில் எடுப்பது என்றில்லையா இவருக்கு? என்று பலரும் முகம் சுளிக்கின்றனர்

இரண்டு ஹீரோயின்களில் யார் பேய் என்பது

எனது படத்தின்  சஸ்பென்ஸ். இயக்குனர் மோகன்ராஜ்புத்
சத்தியமங்கலம் காட்டு பகுதியில் பேய் கதை படமாகிறது. டைரக்டர் டி,ராஜேந்தரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் மோகன்ராஜ்புத். இவர் இயக்கும் படம் ‘மவுனமான நேரம்Õ. இதுபற்றி அவர் கூறியதாவது:
த்ரில்லிங்காக உருவாகும் காதல் கதைதான். காதலை பேய் கதையோடு சேர்த்து சொல்லி இருக்கிறேன். இதுவரை கையாளாத கதைகளமாக இது இருக்கும். இரண்டு ஹீரோ, இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். யார் பேய் என்பதை யூகிக்க முடியாது.கிளைமாக்ஸ்வரை சஸ்பென்சாகவே இருக்கும்.
இதன் ஷூட்டிங் மூணார், மறையூர், தலக்கோணம், சத்தியமங்கலம், திருப்பதி, சித்தூர், ஊட்டி போன்ற இடங்களில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடந்துள்ளது. ரிஷி, கிரிஷ் ஹீரோ. டெய்சி, மீத்தா ஹீரோயின்கள். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், சார்மிளா ஆகியோரும் நடிக்கிறார்கள். குருவாயூரான் ஒளிப்பதிவு. அருணகிரி இசை. தயாரிப்பு கே.ஜெயக்குமார். இவ்வாறு இயக்குனர் மோகன்ராஜ்புத் கூறினார்.

செவ்வாய், 25 டிசம்பர், 2012

நண்பனின் அஸ்கு லஸ்கா பாடல் காட்சிகள்

     

நெதர்லாந்து பூங்கா! நண்பனின் அஸ்கு லஸ்கா பாடல் காட்சிகள் உருவான நெதர்லாந்து பூங்கா.{காணொளி}


அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்

வாசகர்கள் அன்பர்கள் நண்பர்கள்உறவு ஒன்றியங்கள் அனைவர்க்கும்எமது நத்தார் பண்டிகை நல் வாழ்த்துக்கள் ஆதரவு அற்றோருக்கு அடைக்கலமாய் அகிலம் முழுவதுக்கும் அன்புத் தெய்வமாய் பாரம் சுமப்போருக்கு சுமைதாங்கியாய் வந்துதித்த பாலன் யேசு பிறந்த இனிய நத்தார் வாழ்த்துக்களை எமது உறவுகள் அனைவருக்கும் தெரியப்படுத்தி சாந்தியும் சமாதானமும் மிக்க தேசமொன்றில் வளமும் நிறைவும் கொண்ட நல்வாழ்விற்காய் இறையாசி வேண்டி பிரார்த்திக்கின்றது
உறவு இணையங்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்கள்  நன்றி.565656

திங்கள், 24 டிசம்பர், 2012

தமன்னா படத்தை இயக்கிய லாரன்ஸுக்கு ரூ.2.5 கோடி அபராதம்.

 

நடிகர் லாரன்ஸ் தெலுங்கில் ‘ரிபெல்’ என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். இதில் பிரபாஸ், தமன்னா ஜோடியாக நடித்து இருந்தனர். இந்த படத்தில் லாரன்சால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக படத்தயாரிப்பாளர்கள் பகவான், புல்லாராவ் ஆகியோர் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்தனர்.

‘ரிபெல்’ படத்தை ரூ.22.5 கோடி பட்ஜெட்டில் எடுத்து தர லாரன்சுடன் ஒப்பந்தம் போட்டோம். ஆனால் அவர் நிர்ணயித்ததைவிட படத்துக்கு அதிகம் செலவு வைத்து விட்டார். இதனால் எங்களுக்கு ரூ.5.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த பணத்தை லாரன்ஸ் திருப்பி தரவேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

இதுகுறித்து விசாரித்து முடிவு எடுக்க 20 பேர் கொண்ட குழுவை தயாரிப்பாளர் சங்கம் நியமித்தது. இக்குழுவினர் விசாரணை நடத்தி லாரன்சால் தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்தது உண்மைதான் என்ற முடிவுக்கு வந்தார்கள்.

இதையடுத்து லாரன்ஸ் ‘ரிபெல்’ தயாரிப்பாளர்களுக்கு ரூ.2.5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். 30 நாட்களுக்குள் இப்பணத்தை கொடுக்கவேண்டும். தவறினால் முழு நஷ்ட தொகையான ரூ.5.5 கோடியையும் லாரன்ஸ் வழங்க வேண்டும் என்றும் எச்சரித்து உள்ளனர்

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

சட்டம் ஒரு இருட்டறை. திரை விமர்சனம்

 


பழைய திரைப்படங்களை ரீமேக் செய்வதை நிறுத்திக் கொள்ளும்படி கனம் தமிழ்த் திரைப்படத் துறையினரை நோக்கி ரசிகர்கள் கையெடுத்துக் கும்பிட்டு கேட்டுக் கொள்ள இப்படம் பெரிதும் உதவியிருக்கிறது என்றே நினைக்கிறேன்..!

1981-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் நாள் வெளியான ஒரிஜினல் சட்டம் ஒரு இருட்டறை அப்போதைக்கு சூப்பர் டூப்பர் ஹிட்.. அது அந்தக் காலத்தில் மக்களின் ரசனைக்கு நிறையவே தீனி போட்டிருந்தது..! கூடவே பரமசிவனின் நெற்றிக்கண்ணைத் திறந்தாற்போல் காட்சிக்கு காட்சி தனது சிவப்பு விழிகளை உருட்டி, உருட்டி ரசிகர்களை பெருமளவுக்கு கவர்ந்திருந்த கேப்டனும் இந்த வெற்றிக்கு ஒரு காரணம்..!

எஸ்.ஏ.சி. தனது பேத்திக்கு ஒரு நல்ல துவக்கத்தைக் கொடுக்க நினைத்தது தவறில்லை. ஆனால் அதற்காக இப்படத்தையே தூக்கிக் கொடுத்து பழைய படத்தை நினைத்து பெருமூச்சுவிட வைத்ததுதான் தவறு..! புதுமுக நடிகரோ, பேர் இல்லாத நடிகைகளோ நடிக்கிறார்கள் என்றால் அதில் கதை அல்லது இயக்கம் இரண்டில் ஏதாவது ஒன்றாவது உருப்படியாய் இருந்தால்தான் மக்களிடம் அது பேசப்படும். இரண்டுமே அசத்தல் என்றால் வழக்கு எண் படம் போல சூப்பர்தான்..! இது இரண்டுமே இல்லாமல் வெறுமனே பழைய பெருமையை நினைத்து வேட்டியில் மஞ்சள் தடவிய கதையாகத்தான் இந்தப் படம் முடிந்திருக்கிறது..!

தமிழில் விஜயகாந்த்.. மலையாளத்தில் கமல்ஹாசன், தெலுங்கில் சிரஞ்சீவி, கன்னடத்தில் சங்கர்நாக், ஹிந்தியில் அமிதாப்-ரஜினிகாந்த் என்று ரீமேக் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் ஹிட்டடித்த இந்தப் படத்தின் கதி என்ன என்பது அடுத்த வாரத்தில் தெரிந்துவிடும்..!
தனது காதலியை கொன்றவர்கள் சட்டத்தின் ஓட்டைகளால் தப்பித்துவிட்ட கோபத்தில் ஹீரோ தானே அவதாரமெடுத்து அவர்களை அழிக்கிறார். ஹீரோவின் அக்கா போலீஸ் துணை கமிஷனராக இருந்தும், தனது தம்பிதான் இந்தக் கொலைகளை செய்திருக்கிறார் என்று தெரிந்தும் ஆதாரங்கள் இல்லாததால் தம்பியை கைது செய்ய முடியாமல் தவிக்கிறார். 2 கொலைகளைச் செய்துவிட்டு, அதை ஒப்புக் கொண்டுவிட்டு.. பின்பு கடைசி ஆளையும் தான் கொலை செய்வேன் என்று அக்காவிடம் சபதமிடுகிறார் ஹீரோவான தம்பி. அக்காவும் அந்த சவாலை ஏற்றுக் கொள்ள.. என்னாச்சு என்பதை பழைய சட்டம் ஒரு இருட்டறை படத்தைப் பார்த்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்..!
விஜயகாந்த் வேடத்தில் புதுமுகம் தமன். பழைய படத்தைப் பார்க்காதவர்களுக்கு புதுமுக ஹீரோவாகத் தெரியும். இவர் ஏற்கெனவே ஆச்சரியங்கள் படத்திலும் ஹீரோவாக நடித்திருக்கிறார். இன்னும் 4, 5 படங்களில் நடித்த பின்பு இவரது நடிப்பு பற்றி நாம் பேசுவோம்..! ஹாங்காங்கில் பியாவுடனான காதல் காட்சிகளில் மட்டும் திரைக்கதையினால் கொஞ்சம் சுவாரசியப்படுத்துகிறார். அவ்வளவே..!
ஹீரோயின்கள் பியா அண்ட் பிந்து மாதவி.. இருவருக்குமே ஸ்பெஷலாட்டி கண்கள்தான். முடிந்தவரையிலும் அதனையே எக்ஸ்போஸ் செய்து பாடல் காட்சிகளையும், காதல் காட்சிகளையும் நகர்த்தியிருக்கிறார்கள். பியாவுக்கு இருந்த நடிப்பு ஸ்கோப்கூட பிந்துவுக்கு இல்லாததால், கொஞ்ச நேரமே வந்தாலும் பியாவே மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறார்..!
இறுதிக் காட்சியில் தலை காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் எஸ்.ஏ.சி. இதிலும் அப்படியே..! ஹீரோவுக்கு உதவும் ஜெயிலராக வந்து சட்டத்தை கிழி கிழியென்று கிழித்து எறிகிறார். ஆனால் தியேட்டரில் கைதட்டல் கிடைக்குமா என்றுதான் தெரியவில்லை. சட்டத்திற்கும் சாமான்யனுக்கும் இடையில் இருக்கின்ற இடைவெளிதான் இந்தப் படத்தின் கரு. அதனை மையப்படுத்தி வசனத்தை வைக்காமல், சென்சார் போர்டை கூல் செய்ய வேண்டி வசனத்திலும் சமரசம் செய்திருக்க முயன்றிருப்பதால் அதுவும் மனதில் நிற்கவில்லை..!
துணை கமிஷனர் கெளசல்யாவாக ரீமாசென். காக்கி சட்டையை போட்டாலே வந்துவிடும் ஒரு மிடுக்கும், தோரணையும் இங்கே மிஸ்ஸிங்.. பாடல் காட்சிகளில் அணிவதுபோலவே காக்கி பேண்ட்கூட சற்று இறக்கமாகத்தான் இருந்தது..! விஜயசாந்தி, ராதிகாவைத் தவிர வேறு யாருக்கும் போலீஸ் பாடி லாங்குவேஜ் வரவே வராது..! படத்துக்குப் படம் வித்தியாசமாக எதையாவது செய்து தனித்திறமையை காட்டினால் மட்டுமே நீடித்து நிலைக்க முடியும்.. அம்மணி இப்போது “உண்டாகி”யிருப்பதால் இதுதான் இப்போதைக்கு கடைசி படமென்றும் சொல்லலாம்.. ஆகவே ஓகே மேடம் என்று விட்டுவிடுவோம்..!
1981-ல் இருந்த ரசிகர்களின் மனநிலையும், அறிவும் அன்று போலவே இப்போதும் இருக்கும் என்று நினைத்திருக்கும் எஸ்.ஏ.சி மற்றும் இயக்குநருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..! சுரேஷ் நடுரோட்டில் ஆக்ஸிடெண்ட்டில் இறக்கும்போது, ஓடி வரும் இன்ஸ்பெக்டர் முன்பு ஜெயிலராகவும் இருந்தவராம்..! இது எந்த நாட்டு சட்டம் என்று தெரியவில்லை.. சர்வசாதாரணமாக ஒரு துணை கமிஷனர் ஜெயிலுக்குள் நுழைந்து “செல்”வரைக்கும் போய் பார்த்து வருவதெல்லாம் முடிகிற காரியமா..? அத்தோடு அவர் ஜெயிலரா..? இன்ஸ்பெக்டரா..? எப்படி வந்தார் என்பதையெல்லாம் கொஞ்சமாவது யோசித்து வைத்திருக்க வேண்டாமா..? அதோடு 2 நாளுக்காக ஹீரோவை ஜெயிலில் வைக்கிறார் துணை கமிஷனர்.. இதையும் புதிய ஜெயிலர் ஏற்றுக் கொள்கிறார். பின்பு ஜெயிலரே போலீஸ் கமிஷனரிடம் விளக்கமளிக்க நேரில் வருகிறாராம்..! ஒரு அமைப்பின் செயல்பாடுகளைச் சொல்லும்போது அதில் கொஞ்சமாவது உண்மைத்தன்மை வேண்டாமா..? லாஜிக் பார்க்காமல் செல்வதற்கு இதுவொன்றும் நகைச்சுவை, கமர்ஷியல் படமில்லையே..? இறுதியில் பழைய ஜெயிலரையே செல்போன் மூலமா கமிஷனர் முன்பாக அவரது அறையிலேயே கொலை செய்கிறார் ஹீரோ.. நம்பத்தான் முடியலை..!

ஒளிப்பதிவாளர் தனது பணியைக் கச்சிதமாகவே செய்திருக்கிறார். பாடல் காட்சிகளிலும், ஹாங்காங் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் அழகுடன் எடுத்திருக்கிறார்கள். ஆனால் இது ஒன்று மட்டும் போதாதே.. படத்தின் வெற்றிக்கு..! அது போலவே இசையும்.. விஜய் ஆண்ட்டனியின் இசையில் 2 பாடல்கள் கேட்கும்படி உள்ளது. 'கும்கி'யில் உள்ளது போலவே இதிலிருக்கும் 'சொய் சொய்' பாடல் முணுமுணுக்கவும் வைக்கிறது..!

இந்திய அளவில் பார்த்தால் இந்தப் படத்தின் பெண் இயக்குநரான சினேகா பிரிட்டோதான் 34-வது இயக்குநர். புதுமுக இயக்குநர் என்பதால் உணர்ச்சிபூர்வமான காட்சிகள் வராமைக்கு அவரை மட்டுமே குற்றம் சொல்ல முடியவில்லை. இயன்றவரைக்கும் எடுத்திருக்கிறார். தமன்-பியா காதல் காட்சிகள்.. “நத்திங்” என்று இருவரும் ஒருவரையொருவர் காலை வாரும் காட்சிகள் மட்டுமே ரசிக்க வைக்கிறது.. தமனின் நண்பர்கள் கமிஷனர் அறையில் பேசும் பேச்சுக்களெல்லாம் ஓவர்.. இனி அடுத்தடுத்த வாய்ப்புகளில் இவரது இயக்கத் திறமை நம்மைக் கவர்வது போல இருக்கட்டும்..!

விஜயகாந்தின் அந்த அனல் தெறித்த நடிப்பும், வெறியூட்டிய சண்டைக் காட்சிகளும், மனதைக் குடைந்த அரசியல் வசனங்களும் இல்லாமல்.. ஏதோ காதலுக்காக நடந்த ஒரு சின்ன சண்டையை போல இந்தப் படம் முடிவடைந்திருப்பதுதான் ஏமாற்றத்திற்குக் காரணம்..! இப்படத்தின் மூலம் கிடைத்த லாபம் ‘கும்கி’ படத்திற்குக் கூடுதலாக தியேட்டர்களும், ரசிகர்களும், வசூலும் கிடைக்கப் போகிறது.. கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான்..!

பகலில் ஊர்வலம் நடத்திய அப்பாஸ்.


டெல்லியில் கற்பழிப்பு சம்பவங்களுக்கு எதிராக மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு 12 மணிக்கு நடிகை ரோகிணி தலைமையில் மெரினாவில் திரண்ட கல்லூரி மாணவ- மாணவிகள், கற்பழிப்பு சம்பவங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இதற்காக நேற்று இரவு 11.30 மணி அளவில் மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே 100 மாணவிகளும், 200 மாண வர்களும் திரண்டனர். இவர்களில் ஒரு பகுதியினர் சத்யம் தியேட்டர் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு காந்தி சிலையை வந்த டைந்தனர்.
கற்பழிப்பு சம்பவங்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பள்ளிகளில் பாலியல் கல்வியை கற்றுத்தர வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் போட்டனர்.
இந்த போராட்டம் குறித்து நடிகை ரோகிணி கூறியதாவது:-
கழுத்து நிறைய நகைகளை அணிந்து ஒரு பெண் நள்ளிரவு 12 மணிக்கு தன்னந்தனியாக பயமின்றி என்றைக்கு நடந்து செல்கிறாரோ அன்றுதான் நமது நாட்டுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். இதற்காகத்தான் நள்ளிரவு 12 மணிக்கு போராட்டம் நடத்தினோம். கற்பழிப்பு குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நள்ளிரவு நடந்த இந்த போராட்டம் காரணமாக மெரினாவில் நேற்று இரவு பரபரப்பு நிலவியது. மெரினா இஸ்பெக்டர் பாண்டி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
டெல்லியில் மாணவி கற்பழிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் அப்பாஸ் தலைமையில் இன்று மெரினா கடற்கரை காந்தி சிலையில் இருந்து மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. இதில் அப்பாசின் மனைவி எர்ரம்அலி மற்றும் அப்பாசின் இணையதள நண்பர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

பேய்க்கதை மன்னன் ராஜேஷ்குமார் எழுத்தில் உருவாகும் “சிறுவாணி”

கொலிவுட்டில் மருதமலை பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் “சிறுவாணி”.
சஞ்சய் கதாநாயகனாகவும், ஐஸ்வர்யா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.
இவர்களுடன் நெல்லை சிவா, அனுமோகன், சாமிநாதன், பசங்க சிவகுமார், ஐசக், எலிசபெத், நளினிகாந்த் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் கதையை பேய்க்கதை மன்னன் ராஜேஷ்குமார் எழுதியிருக்கிறார். இவர் பேய்க்கதை, கிரைம் கதை ஆகியவற்றை எழுதி பிரபலமானவர்.
இப்படத்தை அறிமுக இயக்குனர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.
படம் குறித்து இயக்குனர் கூறுகையில், சிறுவாணித் தண்ணீர் பற்றி சொல்ல வேண்டுமென்றால் உலகத்திலேயே சுவையான தண்ணீர் என்ற பெருமையை இன்று வரை 2வது இடத்திலேயே தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
அந்த சிறுவாணி ஆற்றில் குளிக்கப் போன கல்லூரி மாணவர்– மாணவிகளுக்கு நடக்கும் திகிலான சம்பவங்கள் தான் சிறுவாணி படத்தின் கதை.
ஆற்றின் நீரோட்டம் எப்படி மென்மையாக இருக்குமோ அது மாதிரி மென்மையான காதல் கதைக்கு திகிலான சம்பவங்கள் விறுவிறுப்பைக் கூட்டும் என்றார்.
அந்தமான், நிகோபர், சென்னை, கோவை போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்

சனி, 22 டிசம்பர், 2012

இந்தியாவை தாக்கிய சுனாமி படத்தில் நவோமி வாட்ஸ்

நவோமி வாட்ஸ் என்றால் அவரின் அழகான தோற்றம்தான் முதலில் நினைவுக்கு வரும். சமீபகாலங்களில் இவ்வளவு நீட்டான லுக் இல்லாமல் - அவரது பாஷையில் சொன்னால் கொஞ்சம் மெஸ்ஸியாக நடிக்கவும், படங்களில் தோன்றவும் ஆசைப்படுகிறார். தி இம்பாஸிபிள் படத்தில் இந்தியாவில் ஏற்பட்ட சுனாமியில் உயிர் தப்பியவராக நடிப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

நவோமி வாட்ஸின் கடந்தகாலம் அவ்வளவு இனிப்பானதல்ல. நவோமி வாட்ஸின் தந்தை பீட்டர் வாட்ஸ் ஹெராயின் ஓவர்டோஸாகி இறந்த போது நவோமிக்கு வயது ஏழு. அதன் பிறகு கடுமையாகப் போராடியே ஹாலிவுட்டில் அவரால் கால் பதிக்க முடிந்தது. தற்போது இரண்டு குழந்தைகளுக்கு நவோமி தாய்.

எல்லோருக்கும் இருட்டுப் பக்கம் உண்டு. அதனை சிலர்தான் வெளிப்படுத்துகிறார்கள், எப்போது நல்ல பக்கத்தையே காட்ட வேண்டுமா என்றெல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார். இந்தியா என்றாலே ஹாலிவுட் நடசத்திரங்கள் தத்துவமாக பொழிய ஆரம்பிப்பார்கள். நவோமி இந்தியாவை தாக்கிய சுனாமியில் தப்பிப் பிழைத்தவராக நடித்திருக்கிறார்.

அதுதான் இப்படி சுனாமியாக தத்துவம் பேசுகிறார

இளவட்ட நடிகர்களை சூடேற்றி வாய்ப்புகளை குவிக்கும் பியா

கோவா, பலே பாண்டியா, கோ உள்பட சில படங்களில் நடித்தவர் பியா. கோடம்பாக்கமே அவரை ராசியில்லாத நடிகை என்ற முத்திரையை குத்தி ஆந்திராவுக்கு விரட்டியடித்தது. இருப்பினும், தற்போது சட்டம் ஒரு இருட்டறை மூலம் மீண்டும் கோலிவுட்டை வலம் வருகிறார் பியா.
ஏற்கனவே தெலுங்கில் இருந்து வந்த அனுஷ்கா, பிந்து மாதவி போன்ற நடிகைகள் கோடம்பாக்கத்தில் பல படங்களை கைப்பற்றி நிலைத்திருப்பதால், அவர்களைப்போன்று தானும் இங்கு நிலை கொள்ள மாஸ்டர் ப்ளான் போட்டுக்கொண்டிருக்கிறார்.

அதன்காரணமாக, தனது நடிப்புத்திறமையை முன் வைத்து தமிழ் சினிமாவை ஜெயிப்பது கடினம் என்பதை புரிந்து கொண்ட பியா, டூ-பீஸ் ரேஞ்ச் துக்கடா டிரஸ்களை அணிந்து கொண்டு சில இளவட்ட ஹீரோக்களுடன் சூடான சந்திப்புகளை அரங்கேற்றி வருகிறாராம்.
இதனால் அவருக்கான சிபாரிசினையும் திரைக்குப்பின்னால் தீவிரமாக முடுக்கி விட்டும் வருகிறார்கள் ஹீரோக்கள். அதனால் சில புதுப்பட வாய்ப்புகள் பியாவின் பாக்கெட்டிற்குள் எகிறிக்குதிக்க தயாராகி வருகின்றன

வியாழன், 20 டிசம்பர், 2012

நாளை உலகம் அழியும் என்பதை நம்பமாட்டேன்: காஜல்

விஜய்யுடன் நடித்த துப்பாக்கி படம் ஹிட்டான மகிழ்ச்சியில் இருக்கிறார் காஜல் அகர்வால்.
தெலுங்கில் 4 படங்கள் கைசவம் உள்ளன. கார்த்தியுடன் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றி்ல் கலந்து கொண்ட காஜல் அகர்வால் அளித்த பேட்டியில், தமிழ், தெலுங்கில் எனக்கு நல்ல படங்கள் அமைந்துள்ளன. இதற்கு கடவுள்தான் காரணம்.
திருமணம் எப்போது, யாரை மணப்பீர்கள் என்றெல்லாம் பலரும் என்னிடம் கேட்கின்றனர். திருமணம் செய்து கொள்வதற்கு மனதுக்கு பிடித்த மனிதரை இன்னும் நான் சந்திக்கவில்லை.
நடிகர்கள் உள்ளிட்ட சினிமாவில் இருக்கும் எவரையும் மணந்து கொள்ள மாட்டேன்.
தொழிலதிபர் ஒருவரை மணப்பேன். என்னையும் எனது குடும்பத்தையும் பார்த்துக் கொள்பவராக இருந்தால் காதல் திருமணம் செய்வேன். இல்லாவிட்டால் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டுவேன்.
உலகம் நாளை அழிந்து விடும் என்கிறார்கள். அதை நான் நம்ப மாட்டேன்.
உலகம் கண்டிப்பாக அழியாது என்றும் விளம்பரத்துக்காக இதுபோன்ற வதந்திகளை பரப்புகிறார்கள் எனவும் தெரிவித்தார்

பாடகி நித்யஸ்ரீ கணவர் மகாதேவன் தற்கொலை:

 
நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி பிரபல கர்நாடக பாடகி நித்யஸ்ரீ யின் கணவர் மகாதேவன் சென்னை கோட்டூர்புரம் அருகே உள்ள அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
 
அவரது உடலை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர். பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இன்று பகல் 12.45 மணி அளவில் தனது காரில் வந்து கோட்டூர்புரம் அருகே உள்ள அடையாற்றின் பாலத்தில் நிறுத்திவிட்டு, ஆற்றில் குதித்துள்ளார்.

திடீரென ஒருவர் காரை நிறுத்திவிட்டு ஆற்றில் குதித்ததை பார்த்தவர்கள், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், ஆற்றில் குதித்து சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்கு பின்னர் அவரது உடலை மீட்டனர்.

இன்று காலை ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாகவே மகாதேவன், கோபத்துடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி?

இதனிடையே கணவர் இறந்தது குறித்து தகவலறிந்த பாடகி நித்யஸ்ரீயும், தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது உடல் நிலை குறித்த விவரம் உடனடியாக தெரியவரவில்லை.

பாடகி நித்யஸ்ரீ, மறைந்த பிரபல கர்நாடக பாடகி பட்டம்மாளின் பேத்தி ஆவார்.

நடிகை ஷார்மிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இயக்குனர்

பாலியல் தொந்தரவு கொடுத்த இயக்குனரை நடிகை ஷார்மி கன்னத்தில் அறைந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
கொலிவுட்டில் காதல் அழிவதில்லை, லாடம் படங்களில் நடித்த சார்மி, தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
இவர் தெலுங்கில் நாகர்ஜுனா, பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர், சித்தார்த், ரவி தேஜா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
மலையாள படமொன்றில் மம்முட்டியுடன் நடித்துள்ளார். இந்நிலையில் சார்மிக்கு தற்போது படவாய்ப்புகள் குறைந்துள்ளன.
எனவே இயக்குனர்களை அணுகி வாய்ப்பு கேட்டு வருகிறார். தெலுங்கு இயக்குனர் ஹரீஷ் சங்கர் தனது படத்தில் சார்மியை நடிக்க வைப்பதாக கூறினார்.
தனது அலுவலகத்துக்கு வந்து கதை கேட்கும்படியும் அழைத்தார். இதை நம்பி சார்மி அவரது அலுவலகத்துக்கு சென்றபோது அங்கு சார்மிக்கு பாலியல்தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை சார்மி, தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற இயக்குனரை ஆவேசமாக தாக்கினார்.
இந்த விடயம் தெலுங்கு பட உலகில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

2013ல் வெளியாகும் நினைத்தாலே இனிக்கும்

ரஜினி, கமல் இணைந்து நடித்த படம் ‘நினைத்தாலே இனிக்கும்’ படம் 2013ம் ஆண்டு பெப்ரவரி, மார்ச்சில் வெளியாகுமென தெரிகிறது.
1979ம் ஆண்டு வெளியான இப்படத்தில் கதாநாயகியாக ஜெயப்பிரதா நடிக்க, கே.பாலச்சந்தர் இயக்கினார்.
இப்படத்தில் இடம் பெற்ற ‘நம்ம ஊரு சிங்காரி‘, ‘ஆனந்த தாண்டவமோ‘, ‘பாரதி கண்ணம்மா‘, ‘சம்போ சிவ சம்போ’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’, ‘இனிமை நிறைந்த உலகம் இருக்கு’ போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கின.
இந்த படம் தற்போது டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் மும்பை ஸ்டுடியோக்களில் நடந்து முடிந்துள்ளன.
படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. எனவே பெப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளிவரும் என தெரிகிறது.
இதற்கிடையில் ரஜினி, கமல், பாலசந்தர் மற்றும் படத்தில் நடித்துள்ள பிற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரை ஒரே மேடையில் ஏற்றி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அடுத்த மாதம் 21ம் திகதி இவ்விழா நடைபெற உள்ளது.
இதில் ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் இடம்பெற்ற பாடல்களை பிரபல பாடகர்கள் மேடையில் பாடுகிறார்கள். கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது

புதுமுகங்கள் நடிக்கும் "ஒகேனக்கல்"

சூர்யராஜ் பிக்சர்ஸ் மற்றும் எழில் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படம் "ஒகேனக்கல்".
இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் மூர்த்தி எம்.ஆர்.
இப்படத்தில் பாபு என்ற புதியவர் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக பிரித்வி நடிக்கிறார்.
கதாநாயகியாக மும்பையைச் சேர்ந்த ஜோதி நடிக்கிறார். வில்லனாக மூர்த்தி நடிக்கிறார்.
இவர்களுடன் உமா பத்மநாபன், நளினி, லதாராவ், நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ், காதல் தண்டபாணி, கராத்தே ராஜா, ஆனந்த், முத்துக்காளை, கிரேன் மனோகர், பிளாக் பாண்டி, காந்தராஜ், P.T.S, அருள்மணி, கொட்டாச்சி, ஆகியோர் நடிக்கிறார்கள்.
தமிழ்நாட்டுக்கும்– கர்நாடகாவுக்கும் இடையே ஏற்கெனவே ஒகேனக்கல் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனை நிலவுகிறது.
இந்நிலையில் இந்த தலைப்பில் தயாராகும் படம் யாருக்காவது சாதகமான நிலைப்பாட்டை ஏற்படுத்துமோ என்று இயக்குனரிடம் கேட்டோம்.
லேசான புன்னகை ஒன்றை மட்டும் பதிலாக தந்துவிட்டு கதையைப் பற்றி பின்பு பேசுவோமே என்று நழுவினார் இயக்குனர் எம்.ஆர்.மூர்த்தி.
இவர் ஏற்கெனவே குமார் கோவிந்த் – சாயாசிங்கை வைத்து "மகா சம்ரம்மா" என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 18 டிசம்பர், 2012

ஹன்சிகாவிற்காக அட்வான்ஸை தூக்கியெறிந்த ஹீரோக்கள்.

.

துப்பாக்கி படத்தின் வெற்றி காரணமாக தமிழ் சினிமா தன்னை டோட்டலாக தத்தெடுத்துக்கொள்ளும் என்றுதான் நினைத்திருந்தார் காஜல்அகர்வால். ஆனால் அதன்பிறகு கார்த்தி நடிக்கும் அழகுராஜா ஆல்இன்ஆல் என்ற படத்தில் மட்டுமே கமிட்டான காஜலை அதையடுத்து யாருமே சீண்டவில்லை.
இருப்பினும் சில படங்களை கைப்பற்றும் முயற்சியில் திரைக்குப்பின்னால் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் காஜல். ஆனால் அப்படி அவர் பேசிக்கொண்டிருந்த வரு படத்தில் ஹன்சிகாவை நடிக்க வைக்க முன்கூட்டியே பேசி வைத்திருந்தார்களாம். ஆனால் இதுதெரிந்தும், படாதிபதிகளை வற்புறுத்தி தான் அந்த படங்களில் கமிட்டாக முண்டியடித்திருக்கிறார் காஜல்.

ஆனால் இந்த விவகாரம் எப்படியோ ஹன்சிகாவின் காதுகளை எட்ட கடுப்பாகி விட்டாராம். அனுஷ்கா, அஞ்சலி போன்ற நடிகைகளை ஓரங்கட்டிவிட்டு தான் கஷ்டப்பட்டு பிடித்த வாய்ப்பை இவர் தட்டிப்பறிக்க முயல்வதா? என்று கொதித்துப்போனவர், தனக்கு சிபாரிசு செய்து அந்த படத்தில் தன்னை கோர்த்து விட்ட ஹீரோக்களுடன் அவசர சந்திப்பு நடத்தியிருக்கிறார்.
இதையடுத்து, மேற்படி ஹீரோக்கள் களமிறங்கி, ஹன்சிகா படத்தில் இல்லையென்றால், நானுமிலலை என்று அட்வான்சை தூக்கி எறிந்து விட்டார்களாம். இதனால் ஆடிப்போன படாதிபதிகள், காஜலுடனான பேச்சுவார்த்தையையே முடித்துக்கொண்டனர். ஹன்சிகா அதிரடியாக கொடுத்த இந்த கரண்ட் ஷாக், காஜலை தடுமாற வைத்துள்ளது.
பாலிவுட் நடிகைகளையே திணற வைத்த என்னையே ஒரு நடிகை ஓரங்கட்டி விட்டாரா? என்று ஓவராக பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார். அதோடு, அடுத்து கோலிவுட்டில் ஆழக்காலூன்ற எந்த மாதிரி முயற்சி எடுக்க வேண்டும் என்று தனது சகாக்களுடன் முகாமிட்டு விவாதித்து வருகிறார் காஜல்

சர்வதேச திரைப்படவிழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் பியானோ இசை.

 
சென்னையில், சர்வதேச திரைப்பட விழா துவங்கியுள்ளது. பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்ட, 169 படங்கள், இந்த விழாவில் திரையிடப்பட உள்ளன. இதன் துவக்க விழாவில், திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், பிரபலமான பாடல்களைப் பாடி அசத்தினர். இந்த விழாவில், சிறுவர்கள் மூன்று பேர், பியானோ இசைக் கருவியை வாசித்து, அனைவரின் கைதட்டல்களையும் பெற்றனர். அதில் ஒரு சிறுவன், இசைப் புயல் ரகுமானின் மகன் அமீன். ஐந்தாம் வகுப்பு படிக்கும் அமீனின், முதல் மேடை நிகழ்ச்சி இது தான்.

கடந்த ஒரு வருடமாக, சட்டர்ஜி மாஸ்டரிடம், பியானோ மற்றும் இசைப் பயிற்சி எடுத்து வருகிறாராம். துவக்க நிகழ்ச்சியில், தன் தந்தை இசை அமைத்த, "ரோஜா படத்தில் இருந்து குறிப்பிட்ட ஒரு பகுதியை, பியானோவில் வாசித்துக் காட்டி, அனைவரின் பாராட்டையும் பெற்றார். தந்தையைப் போல், அமீனுக்கும், இசை ஆர்வம் இருப்பதை, அவரிடம் காண முடிந்தது. தான் பிரபலத்தின் மகன் என்ற, அலட்டல் எதுவும் இல்லாமல், இசைப் பள்ளி மாணவர்களில், தானும் ஒருவராக பங்கேற்று, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார், அமீன்.

திங்கள், 17 டிசம்பர், 2012

டார்ச்சர் கொடுக்கும் ஆந்திர நரைமுடி ஹீரோக்கள்

 


சமந்தா என்றாலே க்யூட்டான நடிகை என்பார்கள். அவரை அப்படி ரசிப்பது கோலிவுட் சினிமாவினர்தான். ஆனால் ஆந்திராவைச்சேர்ந்தவர்களோ சைவ நடிகையான அவரையும் அசைவ நடிகை கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார்களாம். குறிப்பாக சில டைரக்டர்கள் அவரை டூ-பீஸ் நடிகையாக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சமந்தா மீது ஈர்ப்பு கொண்ட சில நரைமுடி ஹீரோக்கள், சமீபகாலமாக தங்களுடன் டூயட் பாடுவதற்கு சமந்தாவுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்களாம். அதோடு கேட்கிற சம்பளத்தை தருவதாகவும் ஆசை காட்டுகிறார்களாம். என்றாலும், முதிர்ச்சியான நடிகர்களுடன் நடித்தால் தனது இமேஜ் போய்விடும் என்று தொடர்ந்து தட்டிக்கழித்து வருகிறாராம் நடிகை.
இப்படி தொடர்ந்து சமந்தா தங்களுக்கு டேக்கா கொடுப்பதால் சில நடிகர்கள் நேரடியாக அவருக்கு போன் போட்டும் டார்ச்சர் கொடுக்கிறார்களாம். இதன்காரணமாக, அடுத்து தெலுங்கு படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு தமிழில் கூடுதல் கவனம் செலுத்த முடிவெடுத்திருக்கிறாராம் சமந்தா

ஐஸ்வர்யாராய் வீட்டிலும் மாமியார்,மருமகள் சண்டை.

 

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் இடையே பனிப்போர் நடிப்பதாக பேச்சு அடிபடுகிறது.

பாலிவுட் நடிகர்கள் அமிதாப், ஜெயா பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை நடிகை ஐஸ்வர்யா ராய் மணந்ததில் இருந்து குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை என்று இதுவரை எந்த செய்தியும் வெளியானதில்லை. விழாக்களில் மாமனார், மாமியார், கணவருடன் ஐஸ்வர்யா கலந்து கொண்டு குடும்த்தோடு போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள்.

இந்நிலையில் ஐஸுக்கும், ஜெயா பச்சனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் விளம்பர நிகழ்ச்சிக்காக குஜராத் சென்ற ஐஸ் அம்மாநிலத்தின் வளர்ச்சியையும், மோடியையும் புகழ்ந்து தள்ளிவிட்டு வந்தார். அமிதாப் குஜராத் மாநில சுற்றுலாத்துறை பிராண்ட் அம்பாசிடராக இருந்தாலும் ஜெயா மோடியை வெறுக்கும் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர். ஐஸ் மோடியை புகழ்ந்துவிட்டு வந்தது தான் மாமியார், மருமகளுக்கு இடையே பிரச்சனை ஏற்படக் காரணம்.

இந்நிலையில் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் வந்திருந்தனர். ஆனால் ஜெயா பச்சனைக் காணவில்லை. இதன் மூலம் அவர்களுக்கு இடையே உள்ள பிரச்சனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளும் சினேகா-பிரசன்னா ஜோடி

 
 
நடிகை சினேகா தனது கணவர் பிரசன்னாவுடன் சேர்ந்து விளம்பரப் படங்களில் நடிக்கிறார். இதற்காக அவர்கள் பெரும் தொகையை சம்பளமாக வாங்குகின்றனர். திரைநட்சத்திரங்கள் பலரும் விளம்பரப் படங்களில் நடித்து பணம் பார்க்கின்றனர். அதற்கு சினேகா, பிரசன்னா மட்டும் என்ன விதிவிலக்கா.
திருமணத்திற்கு பிறகு சினேகா, பிரசன்னாவை ஜோடியாக நடிக்க வைக்க பல விளம்பர நிறுவனங்கள் அழைக்கின்றன. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழியை சரியாக புரிந்து வைத்துள்ள இந்த ஜோடி விளம்பரப் படங்களில் நடிக்க பெரிய தொகையை சம்பளமாகக் கேட்கின்றனர். இந்த ஜோடி பிரபலமாக உள்ளதால் நிறுவனங்களும் அவர்கள் கேட்கும் தொகையைத் தருகின்றன.
அவர்களுக்கு விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு குவிகிறதாம். சினேகா படங்களில் நடித்து சம்பாதித்ததைவிட விளம்பரப் படங்களில் தான் அதிகம் சம்பாதித்துள்ளதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சினிமா படங்களை விட விளம்பரப் படங்களில் குறைவான நேரத்தில் ஷூட்டிங் முடித்து நிறைய பணமும் சம்பாதிக்கலாமே. நல்ல டெக்னிக் தான்

நீதானே என் பொன்வசந்தம். திரைவிமர்சனம்

நீதானே என் பொன்வசந்தம். திரைவிமர்சனம்


நீதானே என் பொன்வசந்தம் நீண்ட நாட்களாக ஊடகத்துறையில் பேசப்பட்டு வந்த படம். இளையராஜா கௌதம் மேனன் இணையும் முதல் படம். இசைஞானியின் பாடல்களுக்கு பட்டி தொட்டி எல்லாம் நீண்ட நாட்களுக்கு பின்னர் வரவேற்பு கிடைக்கச் செய்த படம். ஜீவா ரொமாண்டிக் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள படம். விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பின்னர் கௌதம் இயக்கும் காதல் படம். இப்படி இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விடயங்கள் பல. சரி, படம் தான் வந்தாச்சே, ஏன் இப்படி பழசை சொல்லிட்டு இருக்கீங்கன்னு பார்க்கிறீங்களா?? அப்ப விமர்சனத்துக்கு போயிடுவோமே!!
கதைன்னு பார்த்தா ஒன்னும் இல்லீங்க. பள்ளிகூடத்தில இருந்து வேலைக்கு போயிட்டு இருக்கிற வரைக்கும் உள்ள கால கட்டத்துல அடிக்கடி பிரிஞ்சு மறுபடியும் சேருகிற காதல்தான் கதை. ஆனா திரைக்கதையில் வரும் காட்சியமைப்பில் காதலித்தவர்களுக்கும் காதலித்துக்கொண்டுள்ளவர்களுக்கும், “ஆமால்ல, நம்ம வாழ்க்கையிலும் இப்படி நடந்திருக்கில்ல” என்று நினைக்க வைத்துள்ளார் இயக்குனர். கௌதம் எப்பவும் “ஏ” சென்டர் ரசிகர்களையே மனதில் வைத்து படம் பண்ணுவார் என்று திரை அரங்குகளுக்கு போவோர்களை இந்த முறையும் ஏமாற்றவில்லை.
இது சமந்தாவின் படம். அட்டகாசமாக நடித்துள்ளார். அழகுடன் சேர்ந்த அட்டாகாச நடிப்பு. பலே போடலாம் என்று பார்த்தால் திருஷ்டி கழிப்பது போல கொஞ்சம் உணர்ச்சிவசப்படும் காட்சிகளில் தடுமாறுகிறார். கோ படத்துல ஒரு பத்திரிகையாளராகவும் முகமூடி படத்துல சூப்பர் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்த ஜீவா இந்தப் படத்துல ஜீவா ரொம்ப காலத்துக்கு அப்புறம் ஒரு ரொமாண்டிக் ஹீரோவா அவதாரம் எடுத்துள்ளார். இருவருக்கும் போட்டி போட்டு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு. நன்றாக நடித்தும் உள்ளார்கள். படத்தில் அடுத்து குறிப்பிட்டு சொல்லும்படியான கதாபாத்திரங்கள் சந்தானமும் அவரின் மனம் கவர்ந்த பெண்ணும் தான். தங்களது முத்திரையை அழுத்திப் பதித்துள்ளார்கள். குறிப்பாக சந்தானம் வரும் காட்சிகளில் ரசிகர்களின் ஆரவாரம் அசத்துகிறது. ஆனால் சந்தானத்தின் நக்கல் பதிலடிகள் அதைவிட அசத்துகிறது.
இசை இளையராஜா. பாடல்களில் நீண்ட நாட்களின் பின்னர் ஒரு துள்ளல். படத்தை ரசிக்கும்படி செய்ததில் பெரும் பங்கு இசைக்கு. கௌதம் தனது ஸ்டைலுக்கு இளையராஜாவை அழைத்து வருவதில் பெரும் வெற்றி பெற்றுள்ளார். எம்.எஸ்.பிரபு மற்றும் ஒம் பிரகாஷ் ஆகியோரின் ஒளிப்பதிவில் இளமை ததும்புகிறது. கௌதமின் இயக்கத்தில் இதை விட சிறந்த படைப்புகள் ஏற்கனவே வந்துவிட்டதால் அவரது இயக்கத்தில் குறிப்பிட்டு கூறுவதற்கு எதுவும் இல்லை.
இது இன்றைய இளசுகளுக்கு காதலின் சந்து பொந்துகளை அறிந்து வைத்திருக்கும் கௌதம் மேனனின் படைப்பு. ஆக இளசுகளே இளையராஜாவின் இசையில் கௌதமின் இயக்கத்தில் வந்திருக்கும் இந்தப் படத்திற்கு அதிகம் எதிர்பாக்காமல் ஒரு காதல் கதையை ரசித்துப் பார்க்கும் பொறுமையும் ஆவலுடனும் சென்றால் இந்தப் படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்

சனி, 15 டிசம்பர், 2012

பரதேசி திரை விமர்சனம் காணொளி

மிகவும் புதுமை யான முறையில் சிறந்த நடிப்பில் உருவாகியபரதேசி திரைப் படம் { காணொளி }

வெள்ளி, 14 டிசம்பர், 2012

எதிர்பார்த்ததை செய்பவர் ஜீவா. கவுதம் மேனன் பேட்டி

 

இளம் கதாநாயகர்களில் நடிப்பில் சிறந்தவர் சிலம்பரசனா, ஜீவாவா? என்ற கேள்விக்கு, டைரக்டர் கவுதம் வாசுதேவ்மேனன் பதில் அளித்தார்.
“மின்னலே”, “காக்க காக்க”, “வேட்டையாடு விளையாடு”, “வாரணம் ஆயிரம்”, “விண்ணைத்தாண்டி வருவாயா”, “நடுநிசி நாய்கள்”, “நீதானே என் பொன்வசந்தம்” ஆகிய படங்களை டைரக்டு செய்த கவுதம் வாசுதேவ்மேனன், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு கவுதம் வாசுதேவ் மேனன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- இளம் கதாநாயகர்கள் சிலம்பரசன், ஜீவா ஆகிய இரண்டு பேரும் உங்கள் டைரக்ஷனில் நடித்து இருக்கிறார்கள். இரண்டு பேரில் நடிப்பில் சிறந்தவர் யார்?
பதில்:- இரண்டு பேருக்கும் வித்தியாசம் கிடையாது. “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தில் சிலம்பரசன், நான் என்ன சொன்னேனோ அதை செய்தார். அவருக்குள் ஒரு நல்ல நடிகர் இருப்பதை தெரிந்துகொண்டேன். ஜீவா நடித்த “ராம்”, “கற்றது தமிழ்”, “சிவா மனசுல சக்தி”, “கோ” ஆகிய படங்களை பார்த்து இருக்கிறேன். அந்த படங்களை பார்த்துவிட்டுத்தான் ஜீவாவை “நீதானே என் பொன்வசந்தம்” படத்துக்கு ஒப்பந்தம் செய்தேன். படப்பிடிப்பின் போது, நான் என்ன எதிர்பார்த்தேனோ, அது ஜீவாவிடம் இருந்து ஒரே டேக்கில் வந்தது. இரண்டு பேரில் யார் சிறந்த நடிகர்? என்ற சர்ச்சைக்குள் நான் வர விரும்பவில்லை.
கேள்வி:- ஹாரீஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரின் இசையில் தொடர்ந்து படங்களை டைரக்டு செய்து வந்த நீங்கள், “நீதானே என் பொன்வசந்தம்” படத்துக்கு இளையராஜாவிடம் சென்றது ஏன்?
பதில்:- இசையை பொருத்தவரை, நான் சின்ன வயதிலேயே இளையராஜாவின் ரசிகர். அவர் பாடல்களை கல்லூரியில் பாடி பரிசு வாங்கியவன். “நீதானே என் பொன்வசந்தம்” படத்துக்கு அவர் தேவைப்பட்டார். படம் பார்த்தாலே உங்களுக்கு புரியும்.
கேள்வி:- உங்கள் அடுத்த படத்தின் கதாநாயகன் யார்?
பதில்:- சூர்யா. அடுத்து அவரை வைத்து தான் டைரக்டு செய்கிறேன். அது, என் சொந்த படம். சர்வதேச பிரச்சினையை கருவாக கொண்ட கதை. பெரும்பகுதி படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டு இருக்கிறேன்.
இவ்வாறு கவுதம் வாசுதேவ் மேனன் கூறினார்.
பேட்டியின் போது நடிகர் ஜீவா, இசையமைப்பாளர் இளையராஜா, பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார், பட அதிபர்கள் எல்ரெட் குமார், ஜெயராம் ஆகியோர் உடன் இருந்தார்கள்

விவசாயப் பிரச்சனைகளுக்கு போராடும் ஆறுபாதி கல்யாணம்.




தமிழகத்தில் காவிரிப் படுகையின் கடைமடைப் பகுதியில் கருகும் பயிர்கள், விவசாயிகளின் உயிர்களைப் பறிக்க ஆரம்பித்து இருக்கின்றன. இந்திய அரசின் தொடர் அலட்சியத்தால், கொந்தளிக்கிறது காவிரி. ஒரு விவசாயியைவிட வேறு யார் இந்தப் பிரச்னையைப் பற்றி விரிவாகப் பேச முடியும்? விவசாயப் பிரச்னைகளுக்கான போராட்டங்களில் முதல் வரிசையில் நிற்கும் போராளியான ஆறுபாதி கல்யாணத்திடம் பேசினேன்.
““எவ்வளவோ பிரச்னைகளை எதிர்கொண்டவர்கள் நம் விவசாயிகள். ஆனால், இன்றைக்கு ஒரு போகம் போய்விடும் என்ற அச்சமே கிடுகிடுவென உயிர்களைச் சாய்க்கிறது. என்ன காரணம்?”“
““கூரத்தாங்குடி ராஜாங்கம், மகிழி செல்வராஜ், ஆண்டாங்கரை அப்துல் ரஹீம்... இவங்க குடும்பங்களை நாம நேர்ல போய்ப் பார்த்தோம்னா, இதுக்கான பதில் எவ்வளவு குரூரமா இருக்கும்கிறது தெரியும். விவசாயிக்குக் கடைசி நம்பிக்கையும் இப்ப போக ஆரம்பிச்சுட்டுங்க. அதுதான் காரணம். விவசாயம் கிறது இன்னைக்கு சாபமா மாறிப்போச்சு. நூத்துக்குத் தொண்ணூறு விவசாயி கடன் வாங்கித்தான் விவசாயம் செய்றான். ஒரு போகம் போச்சுன்னா, போட்ட முதல் மட்டும் போகலை; கடனும் வட்டியும் அவனைத் துரத்துது. கை கொடுக்கவும் ஆள் இல்லை; எதிர்காலமும் நம்பிக்கை தரலை. வீட்டுல அடுப்பு எரியணும். இன்னைக்கு உள்ள விலைவாசி யில, மாசச் சம்பளக்காரவங்களுக்கே ஒரு மாசம் வேலை இல்லைன்னா, வீடு இருண்டுடும். இந்தச் சூழல்ல ஒரு போகமே போச்சுன்னா, விவசாயி என்ன செய்வான்?”“
““காவிரி, முல்லைப் பெரியாறு என்று எல்லாப் பிரச்னைகளிலும் தமிழகத்தின் கை எப்போதுமே ஒடுங்கியே இருக்க என்ன காரணம்?”“
““நம்ம ஆளுங்களுக்கு வரலாறோ, நம்மளோட உரிமைகளோ முழுமையாத் தெரியலீங்க. அதுதான் எல்லாத்துக்கும் முதல் காரணம். காவிரியையே எடுத்துக்குங்க. காவிரிப் பிரச்னைன்னா ஏதோ, வெறும் காவிரி டெல்டா மாவட்டங்களோட பிரச்னையாத்தானே இங்கே பெரும்பான்மை ஆட்கள் பார்க்குறாங்க? தமிழ்நாட்டோட நெல் உற்பத்தியில, மூணுல ஒரு பகுதியை காவிரி டெல்டாதான் தருது. தவிர, தமிழ்நாடு முழுக்க அஞ்சு கோடி மக்களுக்குக் குடிநீர் ஆதாரமாவும் காவிரி இருக்கு.சென்னையில இருக்கிறவங்களுக்கு லாரியில வர்ற தண்ணியும் கேன்ல வர்ற தண்ணியும் எங்கே இருந்து வருது? ராமநாதபுரம் வரைக்கும் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துல தண்ணி போகுதே... எங்கே இருந்து போகுது? தமிழ்நாட்டுல இருக்கும் ஒவ்வொருத்தரோட அன்றாட வாழ்க்கையிலும் அவங்களுக்கே தெரியாமக் கலந்து இருக்குது காவிரி. இன்னைக்கு அது உற்பத்தி ஆகும் குடகு, கர்நாடகத்துல இருக்கலாம். ஆனா, முன்ன நம்மள ஒட்டி இருந்த பகுதி. ரெண்டாயிரம் வருஷமா காவிரியை வெச்சு சாகுபடி பண்றவங்க நாம. நதி நீர் உரிமையைப் பொறுத்தவரைக்கும், பாரம்பரியமா நீரைப் பயன்படுத்துறவங்களுக்குத்தான் முதல் உரிமை. இது சர்வதேச அளவிலான நடைமுறை. இந்த உண்மைகளை ஒவ்வொரு தமிழனும் உணரணும். அரசியல் கட்சிகள் இந்த மாதிரி வாழ்வாதாரப் பிரச்னைகளிலாவது பேதங்களை மறந்து ஒண்ணு சேர்ந்து நிக்கணும். அப்போதான் ஒடுங்கி இருக்கும் கை ஓங்கும்.”“
““தமிழகம் - கர்நாடகம்... இரு தரப்பு விவசாயிகளின் நலன்களும் பாதிக்கப்படாமல், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாதா?”
““மூணு தீர்வுகள் இருக்கு. முதல் தீர்வு, இரு பக்கமும் தங்களோட தேவைகளைக் குறைச்சுக்கிட்டு, அடுத்தவங்க நிலைமையை மதிச்சு நடந்துக்கிறது. நாம எவ்வளவோ இழந்திருக்கோம். இறுதித் தீர்ப்பே நமக்குப் பெரிய இழப்புதான், தெரியுமா? இரண்டாவது, கர்நாடகத்தைச் சேர்ந்த நீர்வள நிபுணர் பி.எஸ்.பவானிசங்கர் சொன்னது... கர்நாடகத்துல மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி உபரியாக் கடல்ல கலக்கும் 2,000 டி.எம்.சி. தண்ணீரில், நேத்ராவதி, அதைச் சுத்தியுள்ள ஆறுகள்லேர்ந்து உபரியா போற 200 டி.எம்.சி. தண்ணீரை ஹேமாவதி அணைக்கு நீரேற்றுத் திட்டங்கள் மூலமாத் திருப்புறது. இதன் மூலமா கர்நாடகத் தோட நீர்த் தேவை யைப் பெரிய அளவில் தீர்க்கலாம். மூணாவது தீர்வு, கர்நாடகம் அவங்க மண்ணுக்கு ஏத்த பயிர் சாகுபடிக்கு மாறணும். இன்னைக்கு காவிரித் தண்ணியைவெச்சு கர்நாடகம் விவசாயம் செய்யும் மண் மானாவாரிப் பயிர்களுக்கு ஏத்தது. ஆனா, அங்கே போய் தண்ணீர் அதிகம் தேவைப்படும் நெல்லையும் கரும்பையும் பயிர் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. கிட்டத்தட்ட இது வீம்புக்குச் செய்றதுதான். இந்த வீம்பை விட்டுட்டு இயல்பான விவசாயத்துக்குக் கர்நாடகம் மாறணும்.”“
““காவிரிப் பிரச்னையில் கர்நாடகத்தின் தவறுகள் என்ன? நம்முடைய தவறுகள் என்ன?”“
““ஒரு தமிழனா இல்லை... ஒரு பொதுவான மனுஷனாவே சொல்றேன். தமிழ்நாட்டு மேல எந்தத் தப்பும் இல்லீங்க. கர்நாடக அரசு தன்னோட சுயநலனுக்காகத் திட்டம் போட்டு, அவங்களோட தேவையைப் பெருக்குது. அது தான் இங்கே நடக்கும் முக்கியமான தவறு. 1901-ல மைசூர் மாகாணத்தோட சாகுபடிப் பரப்பு எவ்வளவு தெரியுமா? 1.11 லட்சம் ஏக்கர். இன்னைக்கு எவ்வளவு பரப்பளவுக்குத் தண்ணீர் கேட்குறாங்கனு தெரியுமா? 27.28 லட்சம் ஏக்கருக்குக் கேட்குறாங்க. இதுல கொடுமை என்னன்னா, 1991-ல் காவிரி நடுவர் மன்றத்துல, தன்னுடைய சாகுபடிப் பரப்பு 11.2 லட்சம் ஏக்கர்னு கர்நாடக அரசு சொன்னப்போ, “இதுக்கு மேல் சாகுபடிப் பரப்பை அதிகரிக்கக் கூடாது; தண்ணீர்ப் பற்றாக்குறை மேலும் தீவிரமாகும்”னு கர்நாடகத்துக்குக் கட்டுப்பாடு விதிச்சது நடுவர் மன்றம். ஆனா, இறுதித் தீர்ப்பில் அதே நடுவர் மன்றம் கர்நாடகத்துக்கு 18.85 லட்சம் ஏக்கருக்குத் தண்ணீர் ஒதுக்கிச்சு. மறுபக்கம், தமிழ்நாட்டோட நிலைமை என்ன தெரியுமா? ஆரம்பத்துல வருஷத்துக்கு 378 டி.எம்.சி. வந்துட்டு இருந்துச்சு. காவிரி நடுவர் மன்ற இடைக் காலத் தீர்ப்பு அதை 205 டி.எம்.சி. ஆக்குச்சு; இறுதித் தீர்ப்பு 192 டி.எம்.சி. ஆக்கிடுச்சு. மோசமான இழப்புதான். ஆனா, அதுக்கே பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கோம்.”“
““அரசியல் சார்ந்து இந்தப் பிரச்னையில் யாரைக் குறை சொல்வீர்கள்?”“
““மத்திய அரசாங்கத்தை. ஏன்னா, ஒரு மாநில அரசாங்கம் குறுகிய நோக்கத்தோட செயல்படுறது சகஜம். ஆனா, மத்திய அரசாங்கம் அதுக்கு அப்பாற்பட்டு, எல்லாத்துக்கும் நடுநிலைமையோட நடந்துக்கணும். ஆனா, கொஞ்சம்கூட அந்தப் பொறுப்பு இல்லாம நடந்துக்குது மத்திய அரசாங்கம். பல லட்சம் விவசாயிகளோட வாழ் வாதாரப் பிரச்னையைத் தீர்க்கத்தான் காவிரி ஆணையம்னு ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுச்சு. ஆனா, ஒன்பது வருஷமா அது கூடவே இல்லைன்னா, எவ்வளவு பெரிய பொறுப்புக்கெட்டத்தனம்? இந்தியாவுல உள்ள எல்லா நதி களையும் சேர்த்து நம்மளோட நீராதாரம் 65,450 டி.எம்.சி. இதுல 17,500 டி.எம்.சி. தண்ணீர்தான் பயன்படுத்தப்படுது. கிட்டத்தட்ட 47,000 டி.எம்.சி. கடல்லதான் கலக்குது. நாளுக்கு நாள் உணவுத் தேவையும் தண்ணீர் தேவையும் அதிகரிச்சுட்டு இருக்கும் சூழல்ல எவ்வளவு தண்ணியைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர்றோமோ, அவ்வளவுக்குப் பிரச்னை தீரும். ஆனா, அரசாங்கம் இந்த விவகாரத்தை அலட்சியப்படுத்துது. நீங்க எழுதிவெச்சுக்குங்க... தண்ணீரால்தான் இந்தியா சிதையும்!”“
““சரி, இந்தியா சிதையும் என்கிறீர்களே... அப்படிச் சிதைந்தால், கர்நாடகத்திடம் எப்படித் தண்ணீர் கேட்பீர்கள்? அப்போதும் அவர்களை அண்டித்தானே நாம் வாழ வேண்டும்?”
““மொழிவாரி மாநிலங்களைப் பிரிச்சப்போ, முல்லைப் பெரியாறு பகுதியை கேரளத்தோட பகுதியா வரையறுத்தாங்க. அப்போ எல்லோரும் எதிர்த்தப்ப, “கேரளமும் இந்தியாவுலதான் இருக்கு”ன்னு சொன்னார் காமராஜர். நம்ம என்னைக்கும் அந்த உணர்வோடதான் இருக்கோம். ஆனா, மத்தவங்களுக்கும் அந்த உணர்வு வேணும். தேசியம்... தேசியம்னு சொல்லி நம்ம மட்டும் எல்லாத்தையும் இழந்துட்டு நிக்க முடியாது. தமிழ்நாட்டோட எல்லையைக் குமரி யில் இருந்து குடகு வரைக்கும் மறுவரையறை செய்யச் சொல்லுங்க. பழந்தமிழர் பகுதிகளை ஒண்ணா நிர்மாணம் செய்யச் சொல்லுங்க. நம்ம பிரச்னையை நாமளே பார்த்துக்கலாம்.”“
““இஸ்ரேலியர்கள் சொல்கிறார்கள்... “உலகிலேயே தண்ணீரை அதிகம் வீணடிப்பது இந்திய விவசாயிகள்தான்” என்று. நீர் மேலாண்மைபற்றி என்ன நினைக் கிறீர்கள்?”“
““வீணடிக்கிறோம்னு சொல்ல முடியாது. ஆனா, நீர் சிக்கனம் தேவைங்கிறதை ஏத்துக்கிறோம். நீர் மேலாண்மை தொடர்பா நிறைய நாம கத்துக்க வேண்டி இருக்கு. ஆனா, இந்த விஷயத்துல விவசாயிகளைக் குத்தம் சொல்ல முடியாது. அரசாங்கம்தான் தொலைநோக்கத்தோட அதுக்கேத்த மாதிரி திட்டம் போடணும். காவிரிப் படுகையில் ஆயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், குட்டைகள் இருந்துச்சு. குடிமராமத்து முறை வழக்கொழிஞ்சதோட இதுல பெரும்பாலானது ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி அழிஞ்சது. அரசாங்கம் ஆழ்குழாய் விவசாயத்தை ஆதரிச்சதே தவிர, நீர்நிலைகள், காவிரி நீர்ப் பாதையைப் புனரமைச்சு நீராதாரத்தைப் பெருக்கணும்னு நினைக்கலை. இப்போ விவசாயிகளே ஒரு திட்டத்தை முன்மொழியுறோம். “நிலம் குளம் களம் வனம் = வளம்”னு அதுக்குப் பேர். அதாவது, ஒவ்வொரு பத்து ஏக்கர் விவசாய நிலத்திலேயும் ஒரு ஏக்கர்ல குளம் அமைக்கணும். அதுல எடுக்குற மண்ணைவெச்சு ரெண்டு ஏக்கர் நிலத்தை மூணு அடி உயரத்துக்கு மேடாக்கிக் களம் அமைக்கணும். அதுல பல வகை மரங்கள் வளர்க்கிறது. மிச்ச நிலத்துல பயிர் விவசாயம். ஆனா, இதுக்கான முயற்சி களை அரசாங்கம்தான் முன்னெடுக்கணும்.”“
““விவசாயத்தில் நஷ்டத்தைக் குறைக்க, இயற்கை வேளாண்மை ஒரு நல்ல வழி இல்லையா?”
““எல்லாரோட விருப்பமும் அதுதான். ஆனா, ஒரு விவசாயி ரசாயனப் பூச்சிக் கொல்லியைக் கைவிடணும்னாகூட, உடனே விட்டுட முடியும். ஆனா, ரசாயன உரத்தை அவ்வளவு சீக்கிரம் விட்டுட முடியாது. ஏன்னா, மண் அவ்வளவு தளர்ந்துபோச்சு. அதனால, படிப்படியா அந்த மாற்றம் நடக்கணும். ஒரு பெரிய புரட்சியா அது நடக்கணும். அதுக்கு அரசாங்கம் மொதல்ல மனசுவைக்கணும்.”“
““ஒரு விவசாயியாகச் சொல்லுங்கள்... விவசாயத்தின் மறுமலர்ச்சிக்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?”“
““இந்தியாவுல இன்னைக்கும் 60 சதவிகிதம் மக்கள் விவசாயத்தை நம்பித்தான் இருக்காங்க. ஆனா, மத்திய - மாநில அரசுகள் வேளாண் உற்பத்திக்காக ஒதுக்குற நிதி எவ்வளவு தெரியுமா? ரெண்டு சதவிகிதம்தான். இந்தியாவுல புயல், வெள்ளம், வறட்சினு வருஷா வருஷம் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு விளைபொருட்கள் நாசமாகுது. ஆனா, தேசியப் பேரிடருக்குனு அரசாங்கம் ஒதுக்குற நிதி 4,000 கோடியைத் தாண்டலை. பின்னே எப்படி விவசாயிகளுக்கு உதவ முடியும்?
மொதல்ல, விவசாயத்துக்கு 10 சதவிகிதம், விவசாயிகளுக்கு 10 சதவிகிதம்னு நிதி ஒதுக்கணும். விவசாயத்துக்குன்னு தனி பட்ஜெட் போடணும். தேசிய விவசாயிகள் ஆணையப் பரிந்துரைப்படி, எல்லா விவசாய விளைபொருட்களுக்கும் மொத்த உற்பத்திச் செலவுக்கு மேல் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் கூடுதல் விலை நிர்ணயிக்கணும். விவசாயக் கடன்களை 4 சதவிகித வட்டியில் கொடுக்கணும். சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலங்களை உருவாக்கணும். ஒவ்வொரு மாவட்டத்துலயும் விளைவிக்கும் விளைபொருட்களை அங்கேயே மதிப்புக்கூட்டப் பட்ட பொருட்களா மாத்திடும் வகையில, வேளாண் தொழிற்சாலைகள் அமைக்கப்படணும். விவசாயிகளை அதில் பங்குதாரர்களா ஆக்கணும். நதி நீர் விவகாரத்தைப் பொறுத்த அளவில், நதிகளைத் தேசியமயமாக்கணும். நதிநீர் ஒதுக்கீடு தன்னாட்சி அதிகாரம் உள்ள அமைப்புகிட்ட ஒப்படைக்கப்படணும். நதி நீரை உரிய காலத்தில் விடுவிக்கிற பொறுப்பு, சூழலுக்கு ஏத்த மாதிரி பகிர்ந்து தர்ற பொறுப்பு ராணுவத்துக்கிட்ட இருக்கணும்!”“