வியாழன், 18 அக்டோபர், 2012

கோலாகலமாக நடைபெற்ற JFW Divas of South-ன் ஐந்தாம் ஆண்டு விழா

Thursday, 18 October 2012, By.Rajah.
JFW Divas of South-ன் ஐந்தாவது ஆண்டு விழா சென்னை டிரேட் சென்டரில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது
இவ்விழாவை நடிகர் மாதவன் மற்றும் ஆர்யா தொகுத்து வழங்கினர். விழாவின் தொடக்க நிகழ்வான நீது சந்திராவின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும் திரை நட்சத்திரங்களான அஞ்சலி, அமலாபால், ஸ்ரேயா சரண், திவ்யா மற்றும் சிம்பு ஆகியோரின் நடனங்கள் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.
இவ்விழாவில் 1980ஆம் ஆண்டுகளின் கதாநாயகிகளான சுஹாசினி மணிரத்னம், நதியா, ரேவதி, பானுப்ரியா மற்றும் ராதாவுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நாயகி ரேவதிக்கு விருதினை வழங்கிய இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், புன்னகை மன்னன் படத்தில் அவருடைய நடிப்பு திறமை குறித்து வெகுவாக பாராட்டினார்.
முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்த சிம்ரனுக்கு விருதினை வழங்கிய வசந்த், நேருக்கு நேர் பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இதே போன்று திரையுலகின் முன்னணி நாயகிகளான நயன்தாரா, சினேகா, ஸ்ரேயா சரண், ஹன்சிகா மோத்வானி, அஞ்சலி மற்றும் அமலா பாலுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக