Monday, 08 October 2012,By.Rajah. |
தன்னைப்பற்றி வதந்திகள் பரப்பப்படுவதாகவும் சரியான செய்திகளை வெளியிடுமாறு நடிகை சுனைனா ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். |
காதலில் விழுந்தேன் படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை சுனைனா, தற்போது விஷாலுடன்
சமர் படத்தில் நடித்து வருகின்றார். சுனைனா நடித்த நீர்பறவை படம் திரைக்கு வரும் நிலையில் உள்ளது. ஆனால் படவாய்ப்புகள் இல்லாமையால் புதுமுக நடிகர்களுடன் சுனைனா ஜோடி சேர்கிறார் என தகவல் வெளியாகியது. இதற்கு பதிலளித்த சுனைனா, தன்னைப்பற்றி தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. சரியான செய்திகளை வெளியிடுமாறு ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான பாண்டி ஒலிப்பெருக்கி படத்தில் சுனைனா புதுமுகம் சபரீஷ் என்பவருடனும் தற்போது நதிகள் நனைவதில்லை படத்தில் புதுமுகம் ஜெய்ஜித் என்பவருடன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக