Tuesday, 23 October 2012, By.Rajah |
பாலிவுட் சினிமா மேதை யாஷ் சோப்ரா மறைவையொட்டி, நடிகர் கமல்ஹாஸன் தனது இரங்கலை ஒரு கடிதமாக வெளியிட்டிருக்கிறார். |
கமல் எழுதிய கடிதத்தில், டியர் யாஷ்ஜி... நான் இப்படி அழைப்பதைக் கேட்க இன்று நீங்கள் இல்லை. நீங்கள் உயிருடன் இருக்கும்போதே இதைச் சொல்ல ஆசைப்பட்டேன். உங்களை நாங்கள் அதிகமாக விரும்பினோம். உங்கள் வேலைகளைப் பார்த்து நாங்கள் நம்பிக்கை பெற்றோம். இதை உங்களிடம் நான் ஒருபோதும் சொன்னதில்லை. அதற்குக் மிகைப் புகழ்ச்சி அல்லது ஈகோ காரணமல்ல. நீங்கள் வகித்த உயர்ந்த ஸ்தானம் என்னை அப்படி வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் தடுத்தது. நன்றி யாஷ்ஜி... இது ஒருதலைப் பட்சமான உரையாடல் என்று எனக்குத் தெரியும். ஆனால் உங்களுடன் மிக நீண்ட உரையாடலை நிகழ்த்தியவன் என்ற பெருமை எனக்குண்டு. உங்கள் மீதான என் அன்பை நான் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை. அது விடயமில்லை. ஆனால் இன்னும் பல தலைமுறை உங்களை நேசித்துக் கொண்டே இருக்கும். நீங்கள் செய்துவிட்டுப் போயிருக்கும் சாதனைகளின் பலன், புகழ், வருவாய் அனைத்தையும் உங்கள் குடும்பம் அனுபவிக்கும். ஒரு கலைஞனாக, அது ஒரு உண்மையான பாராட்டு. உங்களை இழந்துவாடும் குடும்பத்தின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன் என்றும் அதேநேரம் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து மகிழ்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். கமலின் எழுதிய கடிதத்தின் ஓடியோ பதிவு |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக