Saturday, 13 October 2012, By.Rajah. |
சினிமாவில் வயதான கதாநாயகர்களுடன் நடிக்க மறுப்பதாக காஜல் மீது இருந்த குற்றச்சாட்டிற்கு அவர் விளக்கமளித்துள்ளார். |
சினிமாவில் முன்னணி நாயகர்கள், இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார்
காஜல் அகர்வால். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவுடன் நடித்த மாற்றான் திரையரங்குகளில் மிகுந்த வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய்யுடன் நடித்துள்ள துப்பாக்கி திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. தமிழ் தவிர தெலுங்கிலும் காஜல் நடித்து வருகிறார். தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க காஜலுக்கு அழைப்பு வந்தது. ஆனால் இதற்கு மறுத்தார் காஜல். இதனால் வயதான நாயகர்களுடன் நடிக்க மறுக்கிறார் என டோலிவுட்டில்(தெலுங்கு மொழி படம்) பரவ இதுகுறித்து காஜல் விளக்கமளித்தார். பாலகிருஷ்ணாவுடன் நடிக்க கேட்ட போது என்னிடத்தில் திகதிகள் இல்லை. ஏற்கனவே மாற்றான், துப்பாக்கி படங்களில் நடித்துக்கொண்டிருந்தேன். இதன் காரணமாகத்தான் நடிக்க முடியவில்லை. மற்றபடி வயதானவர் என நான் பார்க்கவில்லை என கூறியிருக்கிறார் |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக