October 10, 2012 By.Rajah.தலைவன் தான் தலைப்பு. இயக்குனர் விஜய் உறுதிஒரு மாதிரியாக துப்பாக்கி தலைப்பு பிரச்சனை ஓய்ந்து படமும் ரிலீஸ்ற்கு ரெடி ஆகி விட்டது. படம் வெற்றி அடைய இளயதளபதிற்கும் பட குழுவிற்கும் மயூர்.காம் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.கிரீடம், தெய்வத்திருமகள், தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் விஜய், அடுத்து, நடிகர் விஜய்யை வைத்து, அடுத்த படத்தை இயக்குகிறார். படம் பற்றி இயக்குனர் விஜய் கூறுகையில், “நான் இதுவரை, ஐந்து படங்களை இயக்கி உள்ளேன்.தற்போது, அடுத்த பட வேலையில், “பிசி ஆகி விட்டேன். விஜய்யை வைத்து, அதிரடி ஆக்ஷன் படம் ஒன்றை இயக்குகிறேன். பிரபல தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயின், படத்தை தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாடல் உருவாக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
விஜய்யின், “இமேஜ்க்கு ஏற்ற தலைப்பு என்பதால் தலைவன் என்ற பெயரையே வைக்கிறோம் இது விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்றார், இயக்குனர் விஜய். இப்படத்தின் தலைப்பு மாற்றம் செய்ய இருப்பதாக முன்னர் செய்திகள் வந்த போதும் இளயதளபதி விஜய்யும் இயக்குனர் விஜய்யும் இந்த தலைப்பில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. துப்பாக்கி தலைப்பு விடயத்தில் இறுதியில் இளயதளபதிக்கு வெற்றி கிடைத்தது போல் தலைவன் தலைப்பும் கிடைக்கும் என்பது விஜய் ரசிகர்களின் நம்பிக்கை.
ராவணன்: தலைப்பு வைக்கிறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு நூறு தடவை யோசிச்சு வைக்கணும். ஒரு தடவை வைச்சிட்டா அப்புறம் யோசிக்கவே கூடாது. சசிகலா மருமகன் பாஸ்கரன் கிட்ட எதுக்கும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக