Saturday, 13 October 2012, By.Rajah. |
தமிழ் உட்பட ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ள சம்விருதா நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டாராம். |
தமிழில் காதல் முடிச்சு, காதல் செய்வோம், உயிர் உட்பட பல்வேறு படங்களில்
நடித்திருப்பதுடன் ஏராளமான மலையாள படங்களில் நடித்திருப்பவர் சம்விருதா. இவருக்கு வரும் நவம்பர் 1ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிப்புக்கு முழுக்கு போட்டுள்ளார். சமீபத்தில் மலையாள நடிகர் லால் ஜோசின் இயக்கத்தில், ஆயாளும் ஞானும் தம்மில் படத்தில் நடித்த கடைசி காட்சி கேரளாவில் படமாக்கப்பட்டது. இதுபற்றி இயக்குனர் லால் கூறும்போது, ஆயாளும் ஞானும் தம்மில் பட இறுதிகட்ட படப்பிடிப்பு மூணாறில் நடந்தது. இது உணர்வுபூர்வமான படப்பிடிப்பாக அமைந்தது. ஏனென்றால் திறமையான சம்விருதாவின் கடைசி நாள் படப்பிடிப்பாக இது அமைந்தது. இப்படம் இம்மாதம் திரைக்கு வரவுள்ளது என்றார். இந்நிலையில் சம்விருதா நடித்துள்ள மற்றொரு படமும் இம்மாதம் திரைக்கு வருகிறது |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக