புதன், 31 அக்டோபர், 2012

பொதுவிழாவில் தாவணிக்கு மாறிய நடிகைகள்

 Wednesday, 31 October 2012, By.Rajah.
கொலிவுட்டில் பொது நிகழ்ச்சிகளிலும், சினிமா விழாக்களிலும் நடிகைகள் பாவாடை தாவணி, சேலை உடுத்தி பங்கேற்க தொடங்கியுள்ளனர்.
ஸ்ரேயா கவர்ச்சி ஆடை உடுத்தி சினிமா நிகழ்ச்சிக்கு வந்ததை கண்டித்து பொலிசில் புகார் அளித்த சம்பவம் கடந்த காலங்களில் நடந்துள்ளது.
ஆனால் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் நடிகைகளை பாவாடை தாவணியில் பார்க்க முடிகிறது.
தெலுங்கு நடிகர் மோகன்பாபு மகளும், நடிகையுமான லட்சுமி மஞ்சு தமிழ், தெலுங்கில் ‘மறந்தேன் மன்னித்தேன்’ என்ற படத்தை தயாரிக்கிறார்.
இதில் ஆதி, டாப்சி ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் டாப்சியும், லட்சுமி மஞ்சுவும் பாவாடை தாவணியில் வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.
இதுபோல் ஜெயம் ரவி, நீதுசந்திரா ஜோடியாக நடிக்கும் ‘ஆதிபகவன்’ பட நிகழ்ச்சி ஒன்று கடந்த வாரம் நடந்தபோது நீது சந்திரா சேலை உடுத்தி வந்திருந்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக