Thursday, 11 October 2012, By.Rajah. |
முதன்முறையாக நோர்வே நாட்டில் அதிகமான திரையரங்குகளில் மாற்றான் படம் வெளியாகிறது. |
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் மாற்றான்
நாளை உலகமெங்கும் 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. முதன் முறையாக நோர்வே நாட்டில் அதிகமான திரையரங்குகளில் மாற்றான் வெளியாகிறது. இப்படத்தில் வரும் நானி கோனி பாடல் முழுவதும் நோர்வேயில் படமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து கே.வி.ஆனந்த், நோர்வேயின் மொத்த அழகையும் இலவசமாக உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். இதற்கிடையில் படப்பிடிப்பிற்காக நோர்வேக்கு சூர்யா சென்றிருந்த போது, இங்கு வாழும் தமிழ் மக்கள் காட்டிய வரவேற்பும் அன்பும் அவரை திக்குமுக்காட வைத்தது. நிச்சயம் நான் இன்னொரு முறை நோர்வேக்கு வந்து உங்கள் விருந்தினராக இருக்க ஆசைப்படுகிறேன் என்றுஅறிவித்துள்ளார் சூர்யா. நோர்வேயில் இந்தப் படத்தை வசீகரன் இசைக்கனவுகள்(V.N.Music Dreams) நிறுவனமும், அபிராமி கேஷ் அண்ட் கேரி நிறுவனமும் இணைந்து நாளை வெள்ளிக்கிழமை வெளியிடுகிறார்கள். உலகளாவிய ரீதியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இத்திரைப்படம் நோர்வே நாட்டில் உள்ள பல ஊடகங்களில் பெரிய முக்கியத்துவம் பெற்றுள்ளது. நார்வீஜியன் மொழி ஊடகங்களும் கூட இந்த தமிழ்ப் படம் குறித்து எழுதி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் நோர்வே நாட்டில் வாழ்கின்ற தமிழர்களுடன் இணைந்து இப்படத்தைப் பார்ப்பதற்கு அந்நாட்டு மக்களும் மிக ஆர்வமாக உள்ளதாக, இந்தப் படத்தை அங்கு வெளியீடு செய்யும் வசீகரன் சிவலிங்கம் தெரிவித்தார் |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக