11.10.2012.By.Rajah.நான் விஜய் ரசிகன் என்று எப்பொழுதும் பெருமையாக கூறுவார் சத்தியராஜ். மக்கள் திலகத்திற்கு பிறகு இளைய தளபதியின் பாடல்களைத்தான் தான் விரும்பி பார்ப்பதாகவும் பல மேடைகளில் கூறியவர். சத்யராஜ்க்கும் விஜய்க்கும் நல்ல ஒரு புரிந்துணர்வு உள்ளது திரையிலும் திரைக்கு பின்னாலும். இளைய தளபதிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்க்கும் நிறைய ஓற்றுமை இருப்பதாகவும் கூறி விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு ஒரு உந்து சக்தியாகவும் இருந்து வருகிறார்.
இவர்களுக்கு திரையில் உள்ள புரிந்துணர்வு நண்பன் திரைப்படம் மூலம் மக்கள் நன்கு அறிவார்கள். அதை தொடர்ந்து இளையதளபதியை வைத்து இயக்குனர் விஜய் இயக்கும் படத்திலும் சத்தியராஜ் நடிக்கிறார். இந்த படத்தில் முதலில் சத்யராஜைத்தான் ஒப்பந்தம் செய்துள்ளனர். கதாநாயகி யார் என்று இன்னும் முடிவாகவில்லை. இயக்குனர் விஜய் இயக்கும் படத்தில் இளைய தளபதியுடன் நடிப்பதற்கு மிகுந்த ஆவலுடன் இருப்பதாக நடிகர் சத்யராஜ் கூறியிருந்தார்.
இந்த படத்தில் சத்யராஜ்க்கு ஒரு முக்கிய வேடம் கொடுத்து இருப்பதாகவும், அது இந்த படம் வெளிவந்தவுடன் மிகுந்த வரவேற்ப்பை பெரும் எனவும் , ஆனால் படத்தின் வில்லன் இவர் இல்லை என்றும் இயக்குனர் விஜய் செய்தி வெளியிட்டிருந்தார். இயக்குனர் மணிவண்ணன் இயக்கம் 50வது படத்திலும் நடிகர் சத்யராஜ் நடிக்கிறார், நாகராஜா சோழன் MA, MLA, என்று பெயரிடப்பட்ட இப்படம் அமைதிப்படையின் இரண்டாவது பாகமாக அமையும் என கூறினார் இயக்குநர் மணிவண்ணன்.
விஜய்யின் துப்பாக்கி படத்தை காண்பதற்கு மிகுந்த ஆவலுடன் இருபதாக தெரிவித்தார். முருகதாஸ் ஒரு கைதேர்ந்த இயக்குனர் என்றும் அவரின் இயக்கத்தில் இளையதளபதியை காண்பதற்கு மிகுந்த ஆவலாக இருக்கிறேன், ஏன் என்றால் நானும் ஒரு விஜயின் தீவிர ரசிகன் என்று கூறினார் சத்யராஜ்.
இளையதளபதியை யாருக்குத்தான் பிடிக்காது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக