Friday, 26 October 2012, By.Rajah. |
தென்னிந்திய படங்களில் நடிக்க மாட்டேனா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் தமன்னா. |
அவர் கூறுகையில், ஹிம்மத்வாலா படம் எனது பாலிவுட் ரீ என்ட்ரி. இந்தியை
பொருத்தவரை வருடத்துக்கு 2 படங்களுக்கு மேல் என்னால் நடிக்க முடியாது என்று
எண்ணுகிறேன். இந்திக்கு செல்வதால் தென்னிந்திய படங்களுக்கு முழுக்கு போட்டு விடுவேன் என்று அர்த்தம் கிடையாது, அப்படி நினைத்துக்கூட பார்த்ததில்லை. இன்றைக்கு இந்த நிலைக்கு உயர்ந்திருக்க காரணம் தென்னிந்திய படங்கள் தான். தென்னிந்திய மொழிகளையும் நான் பேச கற்று வைத்திருக்கிறேன். இதனால் என் வேடங்களுக்கு நானே டப்பிங் பேசவும் தொடங்கி இருக்கிறேன். நான் பேசும் ஆங்கிலம் கூட தென்னிந்திய வாடையில் தான் இருக்கிறது. இந்தியில் நடிக்கிறேனென்றால் தென்னிந்திய படங்களில் கிடைக்கும் இடைவெளியாகவே இருக்கும் என்று தெரிவித்தார். |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக