Friday, 19 October 2012, By.Rajah |
கொலிவுட்டில் ஆர்யாவும், நயன்தாராவும் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இணைந்து நடித்தனர். |
தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கும் படமொன்றிலும் இணைந்து நடிக்கின்றனர். இந்நிலையில் மூன்றாவது முறையாக “ராஜா ராணி” என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைகின்றனர். இப்படத்தை அறிமுக இயக்குனர் அட்லி இயக்குகிறார். இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் எங்கேயும் எப்போதும் பட பிரம்மாண்ட வெற்றியையடுத்து இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா பூஜை சென்னையில் நடந்தது. இதில் கமலஹாசன் கலந்து கொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். இப்படத்தில் ஜெய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நகைச்சுவைக்கு நடிகர் சந்தானமும், சத்யனும் நடிக்கின்றனர். ஜீ.வி பிரகாஷ் இசையமைக்கிறார் |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக