|
Monday, 08 October 2012, By.Rajah. |
நடிகர் சயிப் அலிகான்-
கரினா கபூர் திருமணத்திற்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகை
தருகிறார். |
நடிகர் சயிப் அலிகான், முன்னாள் கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிகான் பட்டோடியின்
மகன் ஆவார்.
இவரும் பிரபல பாலிவுட் நடிகை
கரினா கபூரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் இம்மாதம் 17ம் திகதி திருமணம் நடக்க உள்ள நிலையில் பட்டோடி அரண்மனை
புதுப்பிக்கப்படுகிறது. மேலும் கரினா- சயிப் அலிகானுக்காக திருமண உடைகள்
தயாராகிக்கொண்டிருக்கிறது.
சயிப் அலிகானின் அம்மா சர்மிளா தாகூர், ஜனாதிபதி மாளிகைக்கு சென்று பத்திரிக்கை
வைத்தார்.
திருமணத்திற்கு கண்டிப்பாக வருவதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும்
கூறியுள்ளார்.
பிரணாப் முகர்ஜியும் மன்சூர் அலிகான் பட்டோடியும் சிறந்த நண்பர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது. |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக