செவ்வாய், 23 அக்டோபர், 2012

ஹாலிவுட்டிற்கு முன் தமிழில் வெளியாகும் ரகசிய தீவு

Tuesday, 23 October 2012, By.Rajah.
வழக்கமாக ஆங்கில படங்கள் ஹாலிவுட்டில் வெளியான பிறகோ அல்லது ஒரே நேரத்திலோ இந்தியாவில் வெளியாகும்.
அட்வன்சர் இன் சீக்ரெட் வேர்ல்டு என்ற படம் முதலில் இந்தியாவில் வெளியாகி, அதன் பிறகே ஹாலிவுட்டில் வெளியாகிறது.
தமிழில் இதற்கு ரகசிய தீவு என்று பெயரிடப்பட்டுள்ளது. பல கோடி ஆண்டுகளுக்கு முன் அழியும் தருணத்தில் டைனோசர்களும், மனிதர்களும் வாழ்ந்த தீவு பற்றிய கதை.
சூர்யகாந்தி மணி என்ற விநோதமான ஒளிக்கற்றை அந்த கிராமத்தை காப்பாற்றி வருகிறது. அந்த ஒளி மங்கும்போது ஆபத்து சூழ்கிறது.
கடலுக்கு அடியிலிருக்கும் மற்றொரு சூர்யகாந்தி மணியை இரண்டு இளைஞர்கள் கொண்டு வந்து எப்படி கிராமத்தை காக்கிறார்கள் என்பது கதை.
இளைஞர்களாக காரல், டேவிட் நடித்துள்ளனர். மார்கோ பிரம்பில்லா இயக்கத்தில், ஜி.கே.பிலிம்ஸ் வெளியீடுகிறது. தமிழில் ஏ.சீனிவாச மூர்த்தி வசனம் எழுதி உள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக