By.Rajah.நல்லு ஸ்டுடியோஸ் சார்பில் இயக்குனர் சுசீந்திரனும், அவரது தம்பி தாய் சரவணனும் தயாரித்துள்ள படம் 'ஆதலால் காதல் செய்வீர்'. |
இதில் அறிமுக நாயகன் சந்தோஸ், 'வழக்கு எண்' பட இளம் நடிகை மனிஷா இணைந்து
நடித்துள்ளார்கள். இப்படத்தின் இரண்டாம் பகுதியை முற்றிலும் வித்தியாசமாக எடுத்திருப்பதாக இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'வெண்ணிலா கபடிக்குழு படத்திலிருந்து ராஜபாட்டை படம் வரையிலும் வித்தியாசமாக படத்தை கொடுத்துள்ளேன். என் படங்கள் ஒரே மாதிரி இருப்பதை நான் விரும்புவதில்லை. ஆதலால் காதல் செய்வீர் படம் கல்லூரி காதல் கதையுள்ள படமாகும் என்றும் இப்படத்தின் இரண்டாம் பகுதி ரசிகர்களுக்கு முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை எனவும் கூறியுள்ளார். |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக