Sunday 21 October 2012 By.Rajah.பிட்சா பெயருக்கு ஏற்றவாறு இளசுகளுக்கு ஏற்ற படம் தான். கல்யாணம் கட்டிகாமலே ஒரே வீட்டில் வசிக்கும் இருவரைச் சுற்றி நடப்பதை வைத்து முன் பாதியை நகர்த்திய இயக்குனர், பின் பாதிக்கு திகிலை துணைக்கு அழைத்திருக்கிறார். பல குறும்படங்களை இயக்கிய அனுபவம் நன்றாகவே கை கொடுத்துள்ளது கார்த்திக் சுப்புராஜுக்கு.
பிட்சா விநியோகிக்கும் இளைஞனாக வரும் விஜய் சேதுபதி சிறப்பாக நடித்துள்ளார். பல இயக்குனர்களின் கண் கண்டிப்பாக இந்தப் படத்தினால் அவர் மீது விழும். சரியாக தெரிவு செய்து நடித்தால் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் நல்ல இடம் ஒன்று உண்டு. அவரது பள்ளித் தோழியாகவும் ஒரே வீட்டில் கல்யாணம் கட்டிக்காமல் வாழ்ந்து கர்ப்பமாகும் பெண்ணாக வருகிறார் ரம்யா நம்பீசன். அவரும் நன்றாக நடித்துள்ளார்.
மிகவும் அழகாக திரைக்கதையை நெய்துள்ளர் இயக்குனர். திகில் நிறைந்த திரைக்கதைக்கு மிக்க உறுதுணையாக இருப்பது இசையும் ஒளிப்பதிவும். சந்தோஷ் நாராயணன் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லாவிட்டாலும் பின்னணி இசையில் பின்னி எடுத்து விட்டார். அதே போல் கோபி அமர்நாத்தும் ஒளிப்பதிவை திறம்படக் கையாண்டிருக்கிறார். திகில் படங்களுக்கு இரவு காட்சிகள் அதிகம். எரிச்சல் ஊட்டாமல் படத்தோடு ஒன்றி ரசிக்குமாறு படமாக்கி உள்ளார்.
தமிழ் சினிமாவிற்கு நல்ல இயக்குனர் ஒருவர் கிடைத்துள்ளார் என நம்பலாம். எதற்கும் அடுத்த படத்தைப் பார்த்த பின் முடிவு எடுப்போம்.
பிட்சா சுவை நன்றாகத்தான் இருக்கிறது

0 கருத்துகள்:
கருத்துரையிடுக