Friday, 26 October 2012, By.Rajah |
குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும், கோரிப்பாளையம் உள்பட சில படங்களில் நாயகனாக நடித்தவர் ராமகிருஷ்ணன். |
இதனையடுத்து புதுமுக இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் சிறுவர் பூங்கா என்றொரு
படத்தில் நாயகனாக நடித்து வந்தார். ஆனால் திடீரென்று அவரை நீக்கி விட்டு, வேறொரு புதுமுக நடிகரை வைத்து இப்படத்தை படமாக்கி விட்டாராம் இயக்குனர். என்ன காரணம்? என்று விசாரிக்கையில், ராமகிருஷ்ணன் நடிகராக நடந்து கொள்ளவில்லை. ஸ்பாட்டில் இயக்குனர் என்ன சொல்லிக் கொடுத்தாலும், அதற்கு எதிர்மறையாக தனது விருப்பம் போலவே நடித்தார். அத்துடன், நான் இயக்குனர் சேரனிடம் உதவியாளராக பணியாற்றியவன். எந்த காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும் என்றும் தடாலடியாப பேசியிருக்கிறார். இதனால் கடுப்பான இயக்குனர், ஒரு வாரம் படப்பிடிப்பு நடந்த நிலையில் ராமகிருஷ்ணனை படத்திலிருந்தே தூக்கி எறிந்து விட்டு புதுமுக நடிகரை வைத்து படத்தை இயக்கி விட்டாராம். |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக