புதன், 31 அக்டோபர், 2012

நட்சத்திர ஓட்டலில் கேக் செய்து அசத்திய தமன்னா

Wednesday, 31 October 2012, By.Rajah.
நடிகை தமன்னா நட்சத்திர ஓட்டலில் கேக் தயாரித்து அசத்தினார்.
தெலுங்கு படங்களில் தமன்னா பிசியாக நடித்து வருகிறார். தற்போது ‘ஹிம்மத் வாலா‘ என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.
இவர் தெலுங்கில் நடித்த ‘கேமராமேன் கங்காதோ ராம்பாபு‘ படம் சமீபத்தில் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
தமன்னா சமையலில் நிபுணத்துவம் பெற்றவர். வீட்டில் அவரே சமைப்பாராம்.
ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தமன்னாவை அழைத்து கேக் தயாரிக்க ஏற்பாடு செய்தனர்.
தமன்னா கேக் செய்வதற்கான மூலப்பொருட்களை பாத்திரத்தில் கலந்தார். சில நிமிடங்கள் கழித்து ருசியான கேக்கை தயாரித்து கொடுத்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கேக்கை சாப்பிட்டு ருசி பிரமாதம் என்று பாராட்டினார்கள்.

பொதுவிழாவில் தாவணிக்கு மாறிய நடிகைகள்

 Wednesday, 31 October 2012, By.Rajah.
கொலிவுட்டில் பொது நிகழ்ச்சிகளிலும், சினிமா விழாக்களிலும் நடிகைகள் பாவாடை தாவணி, சேலை உடுத்தி பங்கேற்க தொடங்கியுள்ளனர்.
ஸ்ரேயா கவர்ச்சி ஆடை உடுத்தி சினிமா நிகழ்ச்சிக்கு வந்ததை கண்டித்து பொலிசில் புகார் அளித்த சம்பவம் கடந்த காலங்களில் நடந்துள்ளது.
ஆனால் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் நடிகைகளை பாவாடை தாவணியில் பார்க்க முடிகிறது.
தெலுங்கு நடிகர் மோகன்பாபு மகளும், நடிகையுமான லட்சுமி மஞ்சு தமிழ், தெலுங்கில் ‘மறந்தேன் மன்னித்தேன்’ என்ற படத்தை தயாரிக்கிறார்.
இதில் ஆதி, டாப்சி ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் டாப்சியும், லட்சுமி மஞ்சுவும் பாவாடை தாவணியில் வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.
இதுபோல் ஜெயம் ரவி, நீதுசந்திரா ஜோடியாக நடிக்கும் ‘ஆதிபகவன்’ பட நிகழ்ச்சி ஒன்று கடந்த வாரம் நடந்தபோது நீது சந்திரா சேலை உடுத்தி வந்திருந்தார்

போலி நிர்வாணக் காட்சியில் அனுஷ்கா?

Wednesday, 31 October 2012, By.Rajah.
இரண்டாம் உலகம் படத்தில் நாயகி அனுஷ்கா இலை, செடி,கொடிகளை அணிந்து, போலி நிர்வாணக் காட்சியில் நடித்திருப்பதாக கொலிவுட்டில் தகவல் பரவியுள்ளது.
ஆர்யா, அனுஷ்கா இணைந்து நடிக்கும் 'இரண்டாம் உலகம்' படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கியுள்ளார்.
இதில் நாயகி அனுஷ்கா இலை, செடி,கொடிகளை அணிந்து, போலி நிர்வாணக் காட்சியில் நடித்திருப்பதாக கொலிவுட்டில் தகவல் பரவியுள்ளது.
படத்தில் மலைகள் சூழ்ந்த அடர்ந்த வனப்பகுதியில் ஆர்யாவும் அனுஷ்காவும் பழங்குடியினர் தோற்றத்தில் நடித்தக்காட்சிகளை படமாக்கியுள்ளார்கள்.
படத்தின் காட்சிக்காக இலை,செடி கொடிகளை அணிந்து போலி நிர்வாணக் காட்சியில் அனுஷ்கா தோன்றியிருப்பதாக பட வட்டாரம் கூறுகிறது.
செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது அனுஷ்காவுக்கு இதுவே முதன்முறையாகும்.
சமீபத்தில் இரண்டாம் உலகம் படக்குழு ஜார்ஜியா, பிரேசில் நாடுகளுக்கு சென்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆதலால் காதல் செய்வீர் படத்தின் இரண்டாம் பகுதி

By.Rajah.நல்லு ஸ்டுடியோஸ் சார்பில் இயக்குனர் சுசீந்திரனும், அவரது தம்பி தாய் சரவணனும் தயாரித்துள்ள படம் 'ஆதலால் காதல் செய்வீர்'.
இதில் அறிமுக நாயகன் சந்தோஸ், 'வழக்கு எண்' பட இளம் நடிகை மனிஷா இணைந்து நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் இரண்டாம் பகுதியை முற்றிலும் வித்தியாசமாக எடுத்திருப்பதாக இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'வெண்ணிலா கபடிக்குழு படத்திலிருந்து ராஜபாட்டை படம் வரையிலும் வித்தியாசமாக படத்தை கொடுத்துள்ளேன்.
என் படங்கள் ஒரே மாதிரி இருப்பதை நான் விரும்புவதில்லை.
ஆதலால் காதல் செய்வீர் படம் கல்லூரி காதல் கதையுள்ள படமாகும் என்றும் இப்படத்தின் இரண்டாம் பகுதி ரசிகர்களுக்கு முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை எனவும் கூறியுள்ளார்.

இளையராஜாவின் மாபெரும் இன்னிசை

31.10.2012.By.Rajah.{காணொளி}வழங்கும் 'எங்கேயும் எப்போதும் ராஜா' என்ற மாபெரும் இன்னிசை சிகழ்ச்சியைக் காண Rogers Centre இற்கு ஆயிரக்கணக்கானோர் வந்து குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடிய தமிழர்கள் மத்தியில் இசைஞானி இளையராஜாவின் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுவது இதுவே முதல் முறை. மேலும் படிக் 02030

வெள்ளி, 26 அக்டோபர், 2012

சிறுவர் பூங்கா படத்திலிருந்து ராமகிருஷ்ணன் நீக்கப்பட்டது ஏன்?

 Friday, 26 October 2012, By.Rajah
குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும், கோரிப்பாளையம் உள்பட சில படங்களில் நாயகனாக நடித்தவர் ராமகிருஷ்ணன்.
இதனையடுத்து புதுமுக இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் சிறுவர் பூங்கா என்றொரு படத்தில் நாயகனாக நடித்து வந்தார்.
ஆனால் திடீரென்று அவரை நீக்கி விட்டு, வேறொரு புதுமுக நடிகரை வைத்து இப்படத்தை படமாக்கி விட்டாராம் இயக்குனர்.
என்ன காரணம்? என்று விசாரிக்கையில், ராமகிருஷ்ணன் நடிகராக நடந்து கொள்ளவில்லை. ஸ்பாட்டில் இயக்குனர் என்ன சொல்லிக் கொடுத்தாலும், அதற்கு எதிர்மறையாக தனது விருப்பம் போலவே நடித்தார்.
அத்துடன், நான் இயக்குனர் சேரனிடம் உதவியாளராக பணியாற்றியவன். எந்த காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும் என்றும் தடாலடியாப பேசியிருக்கிறார்.
இதனால் கடுப்பான இயக்குனர், ஒரு வாரம் படப்பிடிப்பு நடந்த நிலையில் ராமகிருஷ்ணனை படத்திலிருந்தே தூக்கி எறிந்து விட்டு புதுமுக நடிகரை வைத்து படத்தை இயக்கி விட்டாராம்.

தென்னிந்திய படங்களில் நடிக்க மாட்டேனா? தமன்னா விளக்கம்

 Friday, 26 October 2012, By.Rajah.
தென்னிந்திய படங்களில் நடிக்க மாட்டேனா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் தமன்னா.
அவர் கூறுகையில், ஹிம்மத்வாலா படம் எனது பாலிவுட் ரீ என்ட்ரி. இந்தியை பொருத்தவரை வருடத்துக்கு 2 படங்களுக்கு மேல் என்னால் நடிக்க முடியாது என்று எண்ணுகிறேன்.
இந்திக்கு செல்வதால் தென்னிந்திய படங்களுக்கு முழுக்கு போட்டு விடுவேன் என்று அர்த்தம் கிடையாது, அப்படி நினைத்துக்கூட பார்த்ததில்லை.
இன்றைக்கு இந்த நிலைக்கு உயர்ந்திருக்க காரணம் தென்னிந்திய படங்கள் தான். தென்னிந்திய மொழிகளையும் நான் பேச கற்று வைத்திருக்கிறேன்.
இதனால் என் வேடங்களுக்கு நானே டப்பிங் பேசவும் தொடங்கி இருக்கிறேன். நான் பேசும் ஆங்கிலம் கூட தென்னிந்திய வாடையில் தான் இருக்கிறது.
இந்தியில் நடிக்கிறேனென்றால் தென்னிந்திய படங்களில் கிடைக்கும் இடைவெளியாகவே இருக்கும் என்று தெரிவித்தார்.

தமிழில் ரீமேக்காகும் “மும்பை புனே மும்பை”

 Friday, 26 October 2012.By.Rajah.
மராத்தி மொழியில் பெரிய வெற்றி பெற்று பல விருதுகளை பெற்ற படம் “மும்பை புனே மும்பை”.
முன்பின் அறிமுமில்லாத நாயகனும், நாயகியும் ஒரு பயணத்தில் அறிமுகமாகி ஒரே நாளில் அவர்களுக்குள் நடக்கும் பகிர்ந்து கொள்ளுதல்தான் படம்.
இந்த படத்தை தழுவித்தான் தமிழில் கண்டேன் காதலை, உத்தமபுத்திரன் போன்ற படங்கள் வந்தது.
தற்போது அந்தப் படத்தை அப்படியே தமிழில் “நீ நான் மட்டும்” என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள்.
மராத்தி படத்தில் மும்பையிலிருந்து புனேவுக்கு செல்லும் பயணவழிதான் கதைக் களம்.
தமிழில் சென்னையிலிருந்து மதுரை செல்லும் பயணவழிதான் கதைக் களம்.
அறிமுக இயக்குனர் கண்மணியின் இயக்கத்தில் யஷ்வின், நிகிதா என்ற புதுமுகங்கள் நடிக்கின்றனர்

புதன், 24 அக்டோபர், 2012

சினிமா வலம் திருத்தணி{ காணொளி }

 
Server I

Server II
Part 01
Part 02
Part 03
Part 04
Part 05
Part 06


 


 

செவ்வாய், 23 அக்டோபர், 2012

ஹாலிவுட்டிற்கு முன் தமிழில் வெளியாகும் ரகசிய தீவு

Tuesday, 23 October 2012, By.Rajah.
வழக்கமாக ஆங்கில படங்கள் ஹாலிவுட்டில் வெளியான பிறகோ அல்லது ஒரே நேரத்திலோ இந்தியாவில் வெளியாகும்.
அட்வன்சர் இன் சீக்ரெட் வேர்ல்டு என்ற படம் முதலில் இந்தியாவில் வெளியாகி, அதன் பிறகே ஹாலிவுட்டில் வெளியாகிறது.
தமிழில் இதற்கு ரகசிய தீவு என்று பெயரிடப்பட்டுள்ளது. பல கோடி ஆண்டுகளுக்கு முன் அழியும் தருணத்தில் டைனோசர்களும், மனிதர்களும் வாழ்ந்த தீவு பற்றிய கதை.
சூர்யகாந்தி மணி என்ற விநோதமான ஒளிக்கற்றை அந்த கிராமத்தை காப்பாற்றி வருகிறது. அந்த ஒளி மங்கும்போது ஆபத்து சூழ்கிறது.
கடலுக்கு அடியிலிருக்கும் மற்றொரு சூர்யகாந்தி மணியை இரண்டு இளைஞர்கள் கொண்டு வந்து எப்படி கிராமத்தை காக்கிறார்கள் என்பது கதை.
இளைஞர்களாக காரல், டேவிட் நடித்துள்ளனர். மார்கோ பிரம்பில்லா இயக்கத்தில், ஜி.கே.பிலிம்ஸ் வெளியீடுகிறது. தமிழில் ஏ.சீனிவாச மூர்த்தி வசனம் எழுதி உள்ளார்.

யாஷ் சோப்ராவிற்கு கமல் எழுதிய உருக்கமான கடிதம்

Tuesday, 23 October 2012, By.Rajah
பாலிவுட் சினிமா மேதை யாஷ் சோப்ரா மறைவையொட்டி, நடிகர் கமல்ஹாஸன் தனது இரங்கலை ஒரு கடிதமாக வெளியிட்டிருக்கிறார்.
கமல் எழுதிய கடிதத்தில், டியர் யாஷ்ஜி...
நான் இப்படி அழைப்பதைக் கேட்க இன்று நீங்கள் இல்லை. நீங்கள் உயிருடன் இருக்கும்போதே இதைச் சொல்ல ஆசைப்பட்டேன்.
உங்களை நாங்கள் அதிகமாக விரும்பினோம். உங்கள் வேலைகளைப் பார்த்து நாங்கள் நம்பிக்கை பெற்றோம். இதை உங்களிடம் நான் ஒருபோதும் சொன்னதில்லை.
அதற்குக் மிகைப் புகழ்ச்சி அல்லது ஈகோ காரணமல்ல. நீங்கள் வகித்த உயர்ந்த ஸ்தானம் என்னை அப்படி வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் தடுத்தது.
நன்றி யாஷ்ஜி... இது ஒருதலைப் பட்சமான உரையாடல் என்று எனக்குத் தெரியும்.
ஆனால் உங்களுடன் மிக நீண்ட உரையாடலை நிகழ்த்தியவன் என்ற பெருமை எனக்குண்டு. உங்கள் மீதான என் அன்பை நான் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை.
அது விடயமில்லை. ஆனால் இன்னும் பல தலைமுறை உங்களை நேசித்துக் கொண்டே இருக்கும்.
நீங்கள் செய்துவிட்டுப் போயிருக்கும் சாதனைகளின் பலன், புகழ், வருவாய் அனைத்தையும் உங்கள் குடும்பம் அனுபவிக்கும். ஒரு கலைஞனாக, அது ஒரு உண்மையான பாராட்டு.
உங்களை இழந்துவாடும் குடும்பத்தின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன் என்றும் அதேநேரம் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து மகிழ்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கமலின் எழுதிய கடிதத்தின் ஓடியோ பதிவு

திங்கள், 22 அக்டோபர், 2012

கோல்ட்காசினோ நியூ கேம் ஷோ[காணொளி ]

ராஜ் TV ஹோச்டேத் பி சுஹாசினி மணிரத்தனம் ..ஸ்பெஷல்- ஸ்ரீகாந்த-

By.Rajah.19.10.2012

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

Biel, Timberlake marry in private ceremony in Italy

           
Sunday 21 October 2012  By.Rajah. 
Justin Timberlake and Jessica Biel are married.

The couple released a statement Friday to People magazine saying the ceremony was beautiful and it was special to be surrounded by our family and friends.

Meredith O'Sullivan Wasson, a spokeswoman for Biel, confirmed the report.

The 31-year-old Timberlake and 30-year-old Biel were wed in southern Italy. The couple got engaged in December after dating for several years.

Timberlake, who has been acting more than singing lately, stars in the Clint Eastwood baseball film, "The Trouble with the Curve." Biel stars in the remake of "Total Recall" and can next be seen in "Hitchcock."

ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க ஆசைப்படும் அகர்வால் நாயகி.

            
Sunday 21 October 2012 12:By.Rajah.
காஜல் ஹீரோயினுக்கு நாயகனை கட்டிப்பிடித்து மரத்தை சுற்றி லவ் டூயட் பாடி போரடிச்சிருச்சாம்... போரடிச்சிருச்சாம்... இனி வர்ற படங்கள்ல ஆக்ஷன் சீன்ல நடிக்க¤றதுக்கு தன்னை தயார்படுத்திட்டு வர்றாராம். பாலிவுட்ல அக்ஷய நடிகரோட நடிச்சப்போதான் இந்த யோசனை உதிச்ச¤தாம். புதுசா கதை சொல்லவர்ற இயக்குனருங்ககிட்ட எனக்கு ஆக்ஷன் காட்சிகள் நிறைஞ்ச கதை இருந்தா சொல்லுங்க.. பண்ணலாம்னு ஐடியா கொடுக்க¤றாராம்... கொடுக்க¤றாராம்...

தொப்பி போட்ட பாலு இயக்கம் சமீபமா நெறைய பங்ஷன்ல கலந்துக்குறாராம்... கலந்துக்குறாராம்... இப்பல்லாம் பாலு இயக்கம் மீடியாக்காரங்க மேல உர்ரா இருக்காராம். போன மாசத்துல நடந்த பங்ஷன்ல மீடியா விமர்சகர்களை தாக்கி பேச¤னாராம். சமீபத்துல, Ôஉங்கள அறிமுகப்படுத்திக் கிட்டு பேசுங்கÕன்னு மீடியாக்காரர் ஒருத்தர் மைக் கொடுத்ததும் கோபத்துல அந்த மைக்க அடிச்சி உடைச்சிட்டாராம். ‘இத்தன வருஷமா இண்டஸ்ட்ரில இருக்கேன். என்னய யாருன்னு அறிமுகப்படுத்திட்டு பேசறளவுக்கு நான் காணாம போயிடலÕன்னு பாய்ஞ்சிட்டராம்... பாய்ஞ்சிட்டாராம்...

2 வருஷத்துக்கு 7 படம் தயாரிப்பேன்னு வீராப்பா அறிவிச்சிட்டாரு செல்வராகவ இயக்கம். ஆனா அதுக்கு எப்படி பைனான்ஸ் பிடிக்கிறதுன்னு ரூம் போட்டு யோசிச்சிட்டு இருக்காராம்... இருக்காராம்... ஏதாவது பாலிவுட் கம்பெனியோட டைஅப் போடலாம¢னு நெருங்கியவங்க அட்வைஸ் பண்றாங்களாம்... பண்றாங்களாம்... இயக்கமும் அந்த முயற்சியில இறங்கப்போறாராம்... இறங்கப்போறாராம்...

பீட்சா. திரை விமர்சனம்

     
 
Sunday 21 October 2012 By.Rajah.பிட்சா பெயருக்கு ஏற்றவாறு இளசுகளுக்கு ஏற்ற படம் தான். கல்யாணம் கட்டிகாமலே ஒரே வீட்டில் வசிக்கும் இருவரைச் சுற்றி நடப்பதை வைத்து முன் பாதியை நகர்த்திய இயக்குனர், பின் பாதிக்கு திகிலை துணைக்கு அழைத்திருக்கிறார். பல குறும்படங்களை இயக்கிய அனுபவம் நன்றாகவே கை கொடுத்துள்ளது கார்த்திக் சுப்புராஜுக்கு.

பிட்சா விநியோகிக்கும் இளைஞனாக வரும் விஜய் சேதுபதி சிறப்பாக நடித்துள்ளார். பல இயக்குனர்களின் கண் கண்டிப்பாக இந்தப் படத்தினால் அவர் மீது விழும். சரியாக தெரிவு செய்து நடித்தால் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் நல்ல இடம் ஒன்று உண்டு. அவரது பள்ளித் தோழியாகவும் ஒரே வீட்டில் கல்யாணம் கட்டிக்காமல் வாழ்ந்து கர்ப்பமாகும் பெண்ணாக வருகிறார் ரம்யா நம்பீசன். அவரும் நன்றாக நடித்துள்ளார்.

மிகவும் அழகாக திரைக்கதையை நெய்துள்ளர் இயக்குனர். திகில் நிறைந்த திரைக்கதைக்கு மிக்க உறுதுணையாக இருப்பது இசையும் ஒளிப்பதிவும். சந்தோஷ் நாராயணன் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லாவிட்டாலும் பின்னணி இசையில் பின்னி எடுத்து விட்டார். அதே போல் கோபி அமர்நாத்தும் ஒளிப்பதிவை திறம்படக் கையாண்டிருக்கிறார். திகில் படங்களுக்கு இரவு காட்சிகள் அதிகம். எரிச்சல் ஊட்டாமல் படத்தோடு ஒன்றி ரசிக்குமாறு படமாக்கி உள்ளார்.

தமிழ் சினிமாவிற்கு நல்ல இயக்குனர் ஒருவர் கிடைத்துள்ளார் என நம்பலாம். எதற்கும் அடுத்த படத்தைப் பார்த்த பின் முடிவு எடுப்போம்.

பிட்சா சுவை நன்றாகத்தான் இருக்கிறது

சனி, 20 அக்டோபர், 2012

நயன்தாரா- ஆர்யா மீண்டும் இணையும் “ராஜா ராணி”

Friday, 19 October 2012, By.Rajah
கொலிவுட்டில் ஆர்யாவும், நயன்தாராவும் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இணைந்து நடித்தனர்.
தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கும் படமொன்றிலும் இணைந்து நடிக்கின்றனர்.
இந்நிலையில் மூன்றாவது முறையாக “ராஜா ராணி” என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைகின்றனர்.
இப்படத்தை அறிமுக இயக்குனர் அட்லி இயக்குகிறார். இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் எங்கேயும் எப்போதும் பட பிரம்மாண்ட வெற்றியையடுத்து இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தின் தொடக்க விழா பூஜை சென்னையில் நடந்தது. இதில் கமலஹாசன் கலந்து கொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
இப்படத்தில் ஜெய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நகைச்சுவைக்கு நடிகர் சந்தானமும், சத்யனும் நடிக்கின்றனர். ஜீ.வி பிரகாஷ் இசையமைக்கிறார்

வெள்ளி, 19 அக்டோபர், 2012

மலையாள பாடகர் வினித் ஸ்ரீவாசனுக்கு திருமணம்: காதலியை கரம் பிடித்தார்

Friday, 19 October 2012,By.Rajah.
மல்லுவூட் எனப்படும் மலையாள சினிமாவில் தற்போது முன்னணி பாடகராக இருக்கும் வினித் ஸ்ரீநிவாசன், பிரபல நடிகரும் இயக்குனருமான ஸ்ரீநிவாசனின் மகன் ஆவார்.
இவர் மலையாளத்தில் சைக்கிள் மகன்டே அச்சன், சாப்பா குரிசு உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப், தட்டத்தின் மறையத்து ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
தமிழில் அங்காடி தெரு படத்தில் "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை" என்ற பாடலை பாடியுள்ளார்.
சென்னையில் தங்கியுள்ள வினித், தன்னுடன் படித்த திவ்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.
இவர்களின் காதலுக்கு இரு வீட்டினரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து நேற்று கேரளா கண்ணூரில் திருமணம் நடந்தது.
இதில் மணமக்களின் உறவினர்கள் மற்றும் மலையாள நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.
கேரளா கொச்சியில் நாளை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

சிவாவின் அடுத்த நகைச்சுவை படம் "சொன்னா புரியாது"

 Friday, 19 October 2012, By.Rajah.
தமிழ்படம் இயக்குனர் சி.எஸ்.அமுதனிடம் இணை இயக்குனராக இருந்த கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் படம் "சொன்னா புரியாது".
இப்படத்தில் தமிழ்ப்படம் சிவா நாயகனாகவும், நாயகியாக வசுந்தரா காஷ்யப் நாயகியாகவும் நடிக்கின்றனர்.
இவர்களுடன் மனோபாலா, பிளேடு ஷங்கர், மீரா கிருஷ்ணனா, சிங்கமுத்து, ஆர்.எஸ்.சிவாஜி, அல்வா வாசு, ஆர்த்தி, ஆதிஷ், பிரதீப் (அறிமுகம்), "காதல்" சரவணன் ஆகியோர் நடிக்கின்றனர்.
படம் குறித்து இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் கூறுகையில், திருமணம் என்றால் தவிர்த்து வருபவர் சிவா. அவருக்கு திருமணம் என்கிற சடங்கு மீது பயம் அதிகம்.
திருமணம் தவறானது. அது ஆண்களின் சுதந்திரத்தையும் நிம்மதியையும் பறிப்பது என்று எண்ணுபவர். எனவே திருமணப் பேச்சு எடுத்தாலே விலகி ஓடுகிறார்.
ஒவ்வொரு முறையும் கால்கட்டு போடச் செய்யும் இக்கட்டில் அவர் சிக்கிக் கொள்வதும் அவர் தப்பிப்பதும் தொடர்கிறது.
அவர் கடைசியில் திருமணம் செய்து கொண்டாரா இல்லையா என்பதை கதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்லப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் உட்கார்ந்து ரசித்துப் பார்க்கும்படியாக இப்படம் இருக்கும் என்றும் ஆரம்பம் முதல் இறுதிவரை சிரிக்க வைக்கும் காட்சிகள் உண்டு எனவும் கூறியுள்ளார்.
மொழி மாற்றுப் படங்களுக்கு டப்பிங் குரல் கொடுக்கும் கலைஞராக சிவா நடிக்கிறார்.
கதாநாயகன் ஏன் திருமணத்தை தவிர்த்து விலகி ஓடுகிறார் என்பது மற்றவருக்கு "சொன்னா புரியாது" என்பதே கதைக்கருவாக அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை, கோபி செட்டிப்பாளையம் மற்றும் தாய்லாந்திலும் படப்பிடிப்பு நடந்துள்ளது.
படப்பிடிப்பு முடிந்து பின்னணி இசை சேர்ப்பு பணி நடைபெற்று வருகிறது. "சொன்னா புரியாது" டிசம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வியாழன், 18 அக்டோபர், 2012

ரஜினி ரூபத்தில் விஜய்யை பார்க்கிறேன்: எஸ்.தாணு

Thursday, 18 October 2012,By.Rajah.
ரஜினி ரூபத்தில் விஜய்யை பார்க்கிறேன் என்று மனம் நெகிழ்ந்து போயுள்ளார் தயாரிப்பாளர் எஸ்.தாணு.
பிரமாண்டங்களுக்கு முதலில் பேசப்படும் பெயர் தயாரிப்பாளர் எஸ்.தாணு.
யார் படத்தில் தொடங்கி இப்போது வெளிவர இருக்கும் துப்பாக்கி படம் வரை அவரது பிரமாண்டம் தொடர்கிறது.
ஆனால் இவருக்கும் இடையில் சில சறுக்கல்கள் வந்தன. இருந்தும் அதை எல்லாம் முறியடித்து இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு துப்பாக்கி படம் மூலம் களம் இறங்கி இருக்கிறார்.
துப்பாக்கி படத்தை பற்றி பல செய்திகள் வந்தாலும், அதில் நடித்த விஜய் பற்றியும், அவர் செய்த உதவியை பற்றி தான் இன்றைய கோடம்பாக்கம் முழுவதும் ஒலித்து கொண்டு இருக்கிறது.
அப்படி என்ன செய்தார் விஜய் என்று கேட்கிறீர்களா...?
துப்பாக்கி படம் தொடங்கிய பிறகு தாணு அவர்களுக்கு நிதி நெருக்கடி வந்ததாம்.
எங்கே தன்னை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் பணப்பிரச்னையில் சிக்கி படப்பிடிப்பு நின்றுபோய்விடுமோ என்று நினைத்த விஜய், தாணுவின் நிலையை புரிந்து கொண்டு அவரை வரவழைத்து ரூபாய் எதுவும் நிரப்பப்படாத காசோலை ஒன்றை கொடுத்து எவ்வளவு வேண்டுமோ எடுத்து கொள்ளுங்கள் என்றாராம். இதை சற்றும் எதிர்பார்க்கவில்லையாம் தாணு.
இதுப்பற்றி தாணுவிடம் கேட்டபோது, சிவாஜி படத்தில் ரஜினி நடித்த போது வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே வாங்கி கொண்டு நடித்தார்.
படம் வெளிவந்து வெற்றி பெற்ற பிறகுதான் தனக்குரிய சம்பளத்தை பெற்றுக்கொண்டார்.
அந்தளவுக்கு ஒரு தயாரிப்பாளரின் கஷ்டத்தை உணர்ந்தவர் ரஜினி. அவருக்கு பிறகு விஜய்யிடம் அந்த மனப்பாங்கு இருக்கிறது என்று மனம் நெகிழ்ந்து போனாராம்

கவிஞர் வாலி எழுதிய பிரம்மோதஸ்தவப் பாடல்கள் வெளியீடு

Thursday, 18 October 2012, By.Rajah.
திருப்பதிக்கு அதிக எண்ணிக்கையில் வருகை தரும் தமிழக பக்தர்களை கெளரவிக்கும் விதமாக திருப்பதி தேவஸ்தானம் அமைப்பு பிரம்மோஸ்தவப் பாடல்களை அழகு தமிழில் வெளியிட்டுள்ளது.
திருப்பதியில் பிரம்மோஸ்தவம் வெகுவிமரிசையாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திரையுலகின் மூத்த கவிஞர் வாலி எழுதிய முத்தான பத்து பக்திப் பரவசமூட்டும் பாடல்களுக்கு அற்புதமாக இசையமைத்திருக்கிறார் வித்யாசாகர்.
திருப்பதி தேவஸ்தான அமைப்பின் தலைவர் ஆனந்த குமார் ரெட்டி தலைமையிலான உறுப்பினர்களின் முயற்சியில் உருவான பிரமாண்ட நாயகனின் பிரம்மோஸ்தவம் என்கிற தமிழ்ப் பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டினைத் தமிழக ஆளுனர் கே.ரோசையா இன்று சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள திருப்பதி கோவிலில் வைத்து வெளியிட்டார்.
பிரமாண்ட நாயகனின் பிரம்மோத்ஸவம் என்கிற தலைப்பில் திருப்பதி ஏழுமலையானைப் பற்றிய பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டினை வெளியிட்டுப் பேசிய தமிழக கவர்னர் ஆர்.ரோசையா, தமிழில் பிரம்மோத்ஸவம் பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டினை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
திருப்பதியில் வெகுவிமரிசையாகப் பிரம்மோத்ஸவம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் மிகவும் குறுகிய காலத்தில் இந்த குறுந்தகட்டினைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
தமிழில் கொண்டுவருவதென்பது இதுதான் முதல்முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது

கோலாகலமாக நடைபெற்ற JFW Divas of South-ன் ஐந்தாம் ஆண்டு விழா

Thursday, 18 October 2012, By.Rajah.
JFW Divas of South-ன் ஐந்தாவது ஆண்டு விழா சென்னை டிரேட் சென்டரில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது
இவ்விழாவை நடிகர் மாதவன் மற்றும் ஆர்யா தொகுத்து வழங்கினர். விழாவின் தொடக்க நிகழ்வான நீது சந்திராவின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும் திரை நட்சத்திரங்களான அஞ்சலி, அமலாபால், ஸ்ரேயா சரண், திவ்யா மற்றும் சிம்பு ஆகியோரின் நடனங்கள் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.
இவ்விழாவில் 1980ஆம் ஆண்டுகளின் கதாநாயகிகளான சுஹாசினி மணிரத்னம், நதியா, ரேவதி, பானுப்ரியா மற்றும் ராதாவுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நாயகி ரேவதிக்கு விருதினை வழங்கிய இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், புன்னகை மன்னன் படத்தில் அவருடைய நடிப்பு திறமை குறித்து வெகுவாக பாராட்டினார்.
முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்த சிம்ரனுக்கு விருதினை வழங்கிய வசந்த், நேருக்கு நேர் பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இதே போன்று திரையுலகின் முன்னணி நாயகிகளான நயன்தாரா, சினேகா, ஸ்ரேயா சரண், ஹன்சிகா மோத்வானி, அஞ்சலி மற்றும் அமலா பாலுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

இதயத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

 ஞாயிற்றுக்கிழமை, 14 ஒக்ரோபர் 2012, By.Rajah.
இதயம் மனித உறுப்புகளில் மகத்தான பங்கான பங்காற்றுகிறது. 24 மணிநேரமும் உறங்காமல் இயங்குவதால் தான் நம்மால் நிம்மதியாக உறங்கி எழுந்து அன்றாட பணிகளை செய்ய முடிகிறது. நமக்கான அயராது உழைக்கும் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. கண்டதையும் சாப்பிடுகிறோம். தேவையற்ற பாரங்களை மனதில் ஏற்றிக்கொள்கிறோம்.
விளைவு இதயம் நோய்க்கு ஆளாகி விடுகிறது. மாரடைப்பு ஏற்பட்டு இதயத்திற்கு இடைஞ்சல் என்றால் மட்டுமே நாம் அதைப்பற்றி கவலைப்படுகிறோம்.
மன அழுத்தம்
உடல் பருமன், அதிக ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பது, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
பெரும்பாலான நோய்களின் நிவாரணியே மௌனம், தியானம், நிதானம் தான்! எப்போதும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்.
இன்றைய பணிசூழலில் மனஅழுத்தம் மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாகிறது. எனவே எந்த செயலையும் அழுத்தமின்றி செய்ய பழகிக்கொண்டாலே இதயத்தில் அழுத்தமோ, டென்சனோ ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.
உணவுப் பழக்கம்
உணவுப் பழக்கங்களை மாற்றி, உணவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுவதுடன், மாரடைப்பு வந்தவர்களுக்கு மீண்டும் ஏற்படாமல் தடுத்து நிறுத்தவும் முடியும்.
இதயத்தை காக்க மற்ற உணவுவகைகளைவிட, புரோட்டீன் வகை உணவுகள் இதயத்துக்கு இதம் தருகின்றன. புரோட்டீன் இதயத்துக்கு நண்பன் என்றே சொல்லலாம்.
முட்டையில் பி விட்டமின் இருக்கிறது. மீன் உணவுகளில் ஒமேகா3 , பேட்டி ஆசிட் இருக்கிறது. தோலில்லா கோழியிறைச்சி இவைகள் உணவில் சேர்த்து வந்தால் இதயத்துக்கு தேவையான புரோட்டினைத் தந்து காக்கும்.
பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணை இவைகளில் குறைந்த கொழுப்பு உள்ளது. பட்டானி, பீர்க்கன்காய், வால்நட் முதலியன இதயத்துக்கு வேண்டிய கொழுப்பை தந்து இதயத்தை காக்கும்.
சீரான ரத்த ஓட்டம்
இதயநோய்கள், மாரடைப்பு இவை வருவதற்கு முதல்காரணமாக இருப்பவை ரத்த ஓட்டத்தின் அளவைப் பொறுத்தே அமைகிறது. இந்த ரத்த ஓட்டத்தை சீர்படுத்த தேவையான ஊட்டச்சத்து, வைட்டமின் இ, சி, போன்றவை இதயத்திற்கு வலுசேர்க்கின்றன.
ஒவ்வொருவரும் ஒரு நாளில் காய்கறி அல்லது பழங்களின் ஜூஸ் குடிப்பதை வாடிக்கையாக கொள்ள வேண்டும். வெள்ளைப்பூண்டு கொலஸ்ட்ராலை கட்டுபடுத்தும் சக்தி கொண்டிருப்பதால் பூண்டை உணவில் சேர்த்து வந்தால் இதயநோய்களை தவிர்க்கலாம்
புகை வேண்டாமே
இதயத்தின் முக்கிய எதிரி புகைதான். எனவே புகையை விட்டொழியுங்கள். புகையிலை சேர்ந்த எந்தப்பொருளையும் பயன்படுத்தாதீர்கள். அது வெற்றிலைபாக்கு போடும் பழக்கமோ, புகைபிடிக்கும் பழக்கமோ எந்த போதை பழக்கமாக இருந்தாலும் இப்போதே விட்டுவிடுங்கள்.
சிரிங்க சிரிக்க வைங்க
வயிறு முட்ட சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்ளுங்கள். இப்படி முறையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, உயரத்திற்கேற்ற உடல் எடை என்று ஆரோக்கியத்தைக் கடைப்பிடித்தால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
எப்போதும் மகிழ்ச்சியுடனும், சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியுடனும் வைத்துகொள்ள பழகுங்கள். புத்துணர்வு பெற சிறிது ஓய்வு எடுங்கள். அவ்வப்போது சில நிமிடம் நடங்கள். கோபத்தைத் தூக்கியெறியுங்கள், இதயம் கடைசி வரை ஆரோக்கியமாய் இயங்கும் என்கின்றனர் நிபுணர்கள்

சனி, 13 அக்டோபர், 2012

நடிப்புக்கு முழுக்கு போட்டார் சம்விருதா

Saturday, 13 October 2012, By.Rajah.
தமிழ் உட்பட ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ள சம்விருதா நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டாராம்.
தமிழில் காதல் முடிச்சு, காதல் செய்வோம், உயிர் உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பதுடன் ஏராளமான மலையாள படங்களில் நடித்திருப்பவர் சம்விருதா.
இவருக்கு வரும் நவம்பர் 1ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிப்புக்கு முழுக்கு போட்டுள்ளார்.
சமீபத்தில் மலையாள நடிகர் லால் ஜோசின் இயக்கத்தில், ஆயாளும் ஞானும் தம்மில் படத்தில் நடித்த கடைசி காட்சி கேரளாவில் படமாக்கப்பட்டது.
இதுபற்றி இயக்குனர் லால் கூறும்போது, ஆயாளும் ஞானும் தம்மில் பட இறுதிகட்ட படப்பிடிப்பு மூணாறில் நடந்தது. இது உணர்வுபூர்வமான படப்பிடிப்பாக அமைந்தது.
ஏனென்றால் திறமையான சம்விருதாவின் கடைசி நாள் படப்பிடிப்பாக இது அமைந்தது. இப்படம் இம்மாதம் திரைக்கு வரவுள்ளது என்றார்.
இந்நிலையில் சம்விருதா நடித்துள்ள மற்றொரு படமும் இம்மாதம் திரைக்கு வருகிறது

வயதான கதாநாயகர்களுடன் நடிக்க மறுப்பா? காஜல் விளக்கம்

Saturday, 13 October 2012, By.Rajah.
சினிமாவில் வயதான கதாநாயகர்களுடன் நடிக்க மறுப்பதாக காஜல் மீது இருந்த குற்றச்சாட்டிற்கு அவர் விளக்கமளித்துள்ளார்.
சினிமாவில் முன்னணி நாயகர்கள், இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவுடன் நடித்த மாற்றான் திரையரங்குகளில் மிகுந்த வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.
விஜய்யுடன் நடித்துள்ள துப்பாக்கி திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை.
தமிழ் தவிர தெலுங்கிலும் காஜல் நடித்து வருகிறார். தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க காஜலுக்கு அழைப்பு வந்தது.
ஆனால் இதற்கு மறுத்தார் காஜல். இதனால் வயதான நாயகர்களுடன் நடிக்க மறுக்கிறார் என டோலிவுட்டில்(தெலுங்கு மொழி படம்) பரவ இதுகுறித்து காஜல் விளக்கமளித்தார்.
பாலகிருஷ்ணாவுடன் நடிக்க கேட்ட போது என்னிடத்தில் திகதிகள் இல்லை. ஏற்கனவே மாற்றான், துப்பாக்கி படங்களில் நடித்துக்கொண்டிருந்தேன்.
இதன் காரணமாகத்தான் நடிக்க முடியவில்லை. மற்றபடி வயதானவர் என நான் பார்க்கவில்லை என கூறியிருக்கிறார்

வியாழன், 11 அக்டோபர், 2012

மீண்டும் தோற்று போன சுனைனா

 Thursday, 11 October 2012,By.Rajah
காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வம்சம் என்று வேகமாக வளர்ந்து கொண்டிருந்த சுனைனாவுக்கு சில படங்கள் ஓடாததால் மார்க்கெட் குடை சாய்ந்தது.
இதனால் சிறிது காலம் ஆந்திராவில் ஒதுங்கிய அவரை சமர் படத்துக்காக மீண்டும் கொலிவுட்டுக்கு கொண்டு வந்தனர்.
அதனால் பாண்டி ஒலிபெருக்கி நிலையம், நீர்ப்பறவை என்று சில படங்கள் அவரது கைவசம் வந்தன.
இதனால் விஷால் வரை எட்டிப் பிடித்தாச்சு அடுத்து மேல்தட்டு கதாநாயகர்களை இதே வேகத்தில் கேட்ச் பண்ணி விட வேண்டும் என்று தீவிரமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு திரைக்குப் பின்னால் தூது விட்டு வந்தார் நடிகை.
ஆனால் அவர் குறி பார்த்துக் கொண்டிருக்கும் போதே, எதிர்பாராதவிதமாக பாண்டி ஒலிபெருக்கி நிலையம் வெளியாகி தோற்று விட்டது.
இந்நிலையில் கைவசமுள்ள சமர், நீர்ப்பறவை படங்களின் கதி என்னவாகப்போகிறதோ? என்று திக் மனநிலையுடன் மேற்படி படங்கள் திரைக்கு வரும் நாளுக்காக காத்திருக்கிறாராம்