கமலின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் தற்போது தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இளைய மகள் அக்ஷராவையும் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அக்ஷரா இயக்குனர் துறையில் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைத்தாலும் சமீபத்தில் சி.சி.எல் கிரிக்கெட் போட்டிகளில் விளம்பரத் தூதுவராக கலந்து கொண்டார்.
அப்போது தெலுங்கு தயாரிப்பாளர்கள் சிலர், அவரை பார்த்து அசந்து விட்டனராம். உடனே அக்ஷரா அம்மா சரிகாவிடம் தங்கள் படத்தில் நடிக்க வைக்க திகதிகள் கேட்டு வருகின்றனர்.
குறிப்பாக, சிரஞ்சீவியின் தம்பியும் தெலுங்குப்பட தயாரிப்பாளருமான நாகபாபுவின் மகன் வருண்தேஜ் அறிமுகமாகும் படத்துக்கு அக்ஷராவை கேட்டு வருகிறார்கள்.
ஆனால் நடிப்பதில் போதிய ஆர்வம் இல்லாமல் இருக்கும் அக்ஷரா எந்த சாதகமான பதிலை சொல்லாமல் இழுத்தடிக்கிறாராம்.
மணிரத்னம் தன் கடல் படத்தில் அக்ஷராவை அறிமுகப்படுத்துவதாகவே இருந்தார். நல்லவேளை அக்ஷரா தப்பிக்க துளசி மாட்டிக்கொண்டார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக