கொலிவுட்டில் திரு இயக்கத்தில் விஷால், திரிஷா நடித்து வெளிவந்த சமர் படத்தை டி ரமேஷ் தயாரித்தார்.
‘சமர்’ படத்தில் ரூ.75 லட்சம் சம்பள பாக்கி இருப்பதாகவும் அதனை வாங்கி தரும் படியும் நடிகர் சங்கத்தில் விஷால் புகார் அளித்தார். இதன் மீது நடிகர் சங்கம் விசாரணை நடத்தியது.
இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ‘சமர்’ பட தயாரிப்பாளர் டி.ரமேஷ், விஷாலுக்கு சம்பள பாக்கி இல்லை. முழு தொகையையும் கொடுத்து விட்டேன்.
‘சமர்’ படத்தில் விஷாலுக்கு சம்பளமாக ரூ.3 கோடியே 75 லட்சம் கொடுக்க ஒப்பந்தம் போடப்பட்டது.
இது மட்டுமின்றி பேசிய சம்பளத்தை விட மேலும் ரூ.25 லட்சம் அதிகமாக கொடுத்துள்ளேன். மொத்தம் ரூ.4 கோடி விஷாலுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.
விஷாலுக்கு பணம் கொடுத்ததற்கான தஸ்தா வேஜுகளை நடிகர் சங்கத்திடம் ஒப்படைத்து விட்டேன்.
ஒரு பைசா கூட விஷாலுக்கு கொடுக்க வேண்டியது இல்லை என் மேல் பொய் புகார் அளித்துள்ளார்.
‘சமர்’ படத்தை வாங்கி வெளியிட்ட திரையரங்கு உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பல கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று தயாரிப்பாளர் ரமேஷ் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக